வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Friday, 15 November 2013

பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு!

பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு!

குறைந்த செலவில் அதிக சத்துக்களைத் தருபவை கீரைகள். உயிர் சத்துக்களும், இரும்பு சத்தும் அதிகம் கொண்டவை. கீரைகளை சமைத்து உண்ணும் பலரும் தண்டினை எரிந்து விடுகின்றனர். கீரைகளின் நிறம் பச்சையாக இருந்தாலும் அவற்றின் தண்டுகள் சிவப்பு, பச்சை,நீலம் வெள்ளை பலவகை நிறத்துடன் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பலவித மருத்துவ குணங்களை கொண்டுள்ளன.

பச்சைத்தண்டு

கீரைத்தண்டினை பருப்பு சேர்த்து சாம்பார் வைத்தோ, தனியோ பொறியல் செய்தோ சாப்பிடலாம். ரத்தமாக போகும் பேதியை நிறுத்தும் தண்மை இதற்கு உண்டு. காரம் சேர்க்காமல், உப்பு போட்டு வேகவைத்து சாப்பிடலாம். சீக்கிரம் குணமாகும்.

செங்கீரைத்தண்டு

பச்சைக் கீரைத் தண்டினைப் போலவே செங்கீரைத்தண்டினை சமைத்து சாப்பிடலாம். இது பித்தம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் போக்கும். உடல் சூட்டினை கட்டுப்படுத்தும்.
பெண்கள் நோய் குணமாகும்
பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய நோயான பெரும்பாடு நோய்க்கு செங்கீரைத்தண்டு சிறந்த மருந்தாகும். அதிக ரத்தம் வெளியேறி சத்துக்கள் குறைந்து காணப்படுபவர்களுக்கு, செங்கீரைத்தண்டினை சமைத்து தர பெரும்பாடு நோய் குணமடையும். செங்கீரைத் தண்டானது மாதவிடாய் காலத்தில் மிகுதியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். எரிச்சல் வலி வேதனைகளைப் போக்கும்.

வெண்கீரைத் தண்டு

வெண்கீரைத் தண்டினை சமைத்து சாப்பிட நீர்க்கடுப்பும், மூலக்கடுப்பும் குணமடையும்.
யார் சாப்பிடக்கூடாது.கீரைத்தண்டில் பெருமளவு இரும்புச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் அடங்கியுள்ளன. இது குளிர்ச்சியைத் தரக்கூடியது. எனவே சீதள தேகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது.

எண்ணெய் தேய்த்து குளித்த நாள் அன்று இதனை சாப்பிட சளி பிடிக்கும்.

No comments:

Post a Comment