மாதவிடாய் கால ரத்தப்போக்கிற்கு எளிய வைத்தியக் குறிப்பு
மாதவிடாய்க் காலங்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டால், பத்து கிராம்
அருகம்புல், மாதுளை இலை பத்து கிராம் இரண்டையும் 100 மில்லி தண்ணீரில்
கொதிக்கவைத்து 50 மில்லியாகக் குறுக்கி காலையில் பாதி, மாலையில் பாதி எனத்
தொடர்ந்து ஐந்து நாட்கள் குடித்து வந்தால் சரியாகிவிடும். இந்தக் காலக்கட்டத்தில் ஏற்படும் வயிற்றுவலிக்கு, ஒரு முழு வாழைப்பூவை இடித்துச் சாறு எடுத்து அதில் மோர்விட்டுக் கலக்கி அருந்தினால், மூன்றே நாட்களில் வயிற்று வலி பறந்துவிடும்.
அதிக உஷ்ணத்தினால், சிலருக்குக் கண் எரிச்சல் ஏற்பட்டு, கண்களில் நீர் வடியும். அத்தகைய பாதிப்புகொண்டவர்கள் மிளகு, சீரகத்தைப் பொடித்து, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி, தலைக்கு தேய்த்துக் குளித்துவந்தால் கண்கள் ஜில்லென இருக்கும்.
ஜாதிக்காய்ப் பொடியைத் தினமும் சிட்டிகை அளவு தேனில் கலந்து சாப்பிட்டால், நல்ல தூக்கம் வரும்.
ஆரம்பக்கட்ட மன நலக்கோளாறு இருந்தால், கீழா நெல்லி இலை, வேம்பூ, காய் இவற்றைக் கல் உரலில் இடித்துத் தண்ணீர் விட்டு மையாக அரைத்து, காலை நேரத்தில் தலையில் பூசி மூன்று மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இதுபோல் 15 நாட்களுக்கு ஒரு முறை செய்தால் நல்ல குணம் கிடைக்கும்.
No comments:
Post a Comment