வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Tuesday, 26 November 2013

கல்லீரலீன் முக்கியத்துவம்:-

கல்லீரலீன் முக்கியத்துவம்:-

கல்லீரல் - மனித உடலின் மிகப் பெரிய ரசாயனத் தொழிற்சாலை!

ஊட்டச் சத்துக்களை உடைத்து உடலுக்குத் தேவையானப் பொருளாக மாற்றி, உடலின் பல பகுதிகளில் சேகரித்துவைப்பது, நச்சுப் பொருட்களை வெளியேற்றுவது என ஆயிரக்கணக்கான பணிகள் இங்கே நடக்கின்றன. உடலின் மிகப் பெரிய உள் உறுப்பு, மிகப் பெரிய சுரப்பி, வெட்டினாலும் மீண்டும் வளரக்கூடியது... இப்படிப் பல்வேறு சிறப்புகளைக்கொண்ட உறுப்பு... கல்லீரல்.
'மனிதனின் வலது வயிற்றுப் பகுதிக்கு மேல், உதரவிதானத்தை ஒட்டியபடி அமைந்துள்ள முக்கோண வடிவ உறுப்பு இது. பிரச்னையை வெளியே காட்டாமல் சமாளிக்கக்கூடியது. அதனால், பிரச்னை முற்றும் வரை வெளியே தெரியாமலேயே இருக்கும். பாதிப்பானது 50 முதல் 60 சதவிகிதத்தைத் தாண்டும்போதுதான், அதன் அறிகுறிகள் நமக்குத் தெரியவரும்''

''கல்லீரலின் சின்தடிக் பணி என்றால், ரத்தம் உறையத் தேவையான புரதம் உள்ளிட்ட ஏராளமான நொதிகள், கொழுப்பு, கார்போஹைட்ரேட் போன்ற உடலுக்குத் தேவையான பல பொருட்களை உற்பத்தி செய்வதாகும். இதில் ஒரு என்சைம் சுரப்பது தடைபட்டாலும் ஊட்டச் சத்தை உடைக்கும் பணி தடைபட்டு, வளர்சிதை மாற்றப் பணியில் தடை ஏற்பட்டுவிடும். இதை 'மெட்டபாலிக் டிஸ்ஆர்டர்’ என்பார்கள். அடுத்ததாக 'டீடாக்சிஃபிகேஷன்’. அதாவது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை, மருந்துகளை நீர்த்துப்போகச்செய்து வெளியேற்றுவது. உதாரணத்துக்கு புரதம் உடைக்கப்படும்போது, அது அமோனியாவை வெளிப்படுத்தும். உடலில் அமோனியா அளவு அதிகரித்தால், உயிரிழப்பு வரைக்கும் கொண்டுசெல்லும். எனவே, அந்த அமோனியாவை யூரியாவாக உடைக்கும் பணியைக் கல்லீரல் செய்கிறது. இது ஐந்து கட்டங்களாக நடக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு என்சைம் தேவைப்படும். இம்யூனாலஜிக்கல் பணி என்பது உடலின் நோய் எதிர்ப்புத் தன்மைக்கு உதவுவது. 50 முதல் 60 சதவிகித நோய் எதிர்ப்புத் தன்மைக்கு கல்லீரலே காரணம். கல்லீரல் செயல் இழந்தால், இந்தப் பணிகளும் பாதிக்கப்படும்.

உடலின் நச்சுப் பொருளை வெளியேற்ற டயாலிசிஸ் கருவிகள் உள்ளன. ஆனால், மற்ற பணிகளைச் செய்ய இது வரை எந்த இயந்திரமும் இல்லை. கல்லீரல் செயல் இழந்துவிட்டால், அதற்கு ஒரே தீர்வு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான். இதற்கானச் சிகிச்சைக் கட்டணம் பல லட்சங்களைத் தாண்டும்.

கல்லீரல் பிரச்னைகளை, குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். குழந்தைகளுக்கானப் பிரச்னைகள் பிறவியிலேயே வரக்கூடியவை. பெரியவர்களுக்கு ஆல்கஹால் மற்றும் ஆல்கஹால் அல்லாத காரணங்களால் கல்லீரல் நோய்கள் ஏற்படுகின்றன''

கல்லீரல் பாதுகாப்புபற்றி அளிக்கும் டிப்ஸ் இங்கே...

1. கொழுப்பை குறைப்போம்

உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள். அதிகப்படியான கொழுப்புதான் கல்லீரல் பிரச்னைக்கு மிக முக்கியக் காரணம். கொழுப்பு கல்லீரல் திசுக்களில் சேகரித்துவைக்கப்படும்போது, கல்லீரல் திசுக்கள் பாதிக்கப்படும். நாள் ஆகஆக பாதிக்கப்பட்ட கல்லீரல் செல்களும் அழிந்துவிடும். பின்னர், அந்தக் கொழுப்பு ரத்தத்தில் பயணித்து உடலின் வேறு பகுதிகளுக்கும் சென்றுவிடும். இப்படி லட்சக்கணக்கில் கல்லீரல் செல்கள் அழியும்போது கல்லீரல் சுருக்கம் (Liver Cirrhosis)ஏற்படும். இதைத் தவிர்க்க உணவில் கொழுப்பு அளவைக் குறைக்க வேண்டும். நாம் சாப்பிடும் உணவில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரியைக் கொழுப்பாக மாற்றும் பணியைக் கல்லீரல் செய்கிறது. சராசரியாக பாசல் மெட்டபாலிக் ரேட் (basal metabolic rate) என்பது ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 1,600 - 1,800 கலோரியாகவும் பெண்களுக்கு 1,300 முதல் 1,500 கலோரியாகவும் இருக்க வேண்டும். உங்கள் உடலுக்கு ஏற்ற பாசல் மெட்டபாலிக் ரேட் எவ்வளவு என்பதைக் கண்டறிந்து, அதற்கு ஏற்ற வகையில் உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள். பாடி மாஸ் இன்டெக்ஸ் குறியீடு 17 முதல் 24.99 என்ற அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது அவசியம்.

2. இயற்கை உணவு

ஆட்டிறைச்சியையும் மாட்டிறைச்சியையும் தவிர்க்க வேண்டும். மாற்றாக, மீன் சாப்பிடலாம். அதுவும் எண்ணெயில் பொரிக்காமல், குழம்பு மீன்களாகச் சாப்பிடலாம். காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகளை சாப்பாட்டில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். உடல் பருமன் ஏற்படாமல் இருக்க, ஐஸ்கிரீம், நொறுக்குத் தீனிகள், சாஃப்ட் டிரிங்க்ஸ் போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள். இது மாரடைப்பு, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போன்றவற்றையும் தவிர்க்க உதவும்.

3. உடற்பயிற்சி

கொழுப்பைக் கரைக்கவும் உடல்

தண்ணீர் கீரை - அனிமியா பிரச்சனைகளை தீர்க்கும் :-

தண்ணீர் கீரை - அனிமியா பிரச்சனைகளை தீர்க்கும் :-

கீரையின் பயன்களை பற்றி நாம் அறிந்திருப்போம். உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை மட்டும் தரும் கீரையை தினமும் உணவில் கட்டாயமாக நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். நாம் பார்க்க இருக்கும் தண்ணீர் கீரை ஆரோக்கியம் தருவதோடு மட்டுமல்லாமல் தோல் மற்றும் முடி பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

தண்ணீர் கீரையின் சுகாதார நன்மைகள்:

பச்சை நிறத்தில் இருக்கும் அனைத்து காய்கறிகளும், கீரைகளும் சத்துகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும் தண்ணீர் கீரையின் பயன்கள் மிகச்சிறந்ததாகவே விளங்குகின்றது.. தண்ணீர் கீரையில் வைட்டமின், தாதுக்கள் அதிகளவு கொண்டுள்ளதால் மிகச்சிறந்த கீரையாக விளங்குகின்றது. இந்தக் கீரையில் மிகச்சிறந்த வளங்களாக நார்சத்து உணவுகள், புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் ஏ மற்றும் சி யை கொண்டுள்ளது. ஆதலால் வாரத்தில் மூன்று நாட்களுக்கு கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கொழுப்பை குறைக்கும்:

எடை பிரச்சனையால் அவதி படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிக எடையுடன் அவதி படுபவர்கள் தங்கள் எடையை இயற்கையாகவே கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள தண்ணீர் கீரையை சாப்பிடலாம்.. தண்ணீர் கீரை கொழுப்பை குறைத்து எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும். ஆதலால் தண்ணீர் கீரையை சூப் செய்தோ, சமைத்தோ எடுத்துக்கொள்ளலாம். தண்ணீர் கீரையை உபயோகப்படுத்தி எலிகளுக்கு சோதனை வைக்கப்பட்டது அதில் தண்ணீர் கீரையை உட்கொண்ட எலிகளின் கொழுப்பு அளவு குறைந்து காணப்பட்டதோடு மட்டுமல்லாமல் ட்ரைகிளிசரைடுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் சிக்கல்:

மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பிரச்சனைகளுக்கு சிகிச்சைக்காக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்த படுகிறது தண்ணீர் கீரை. தண்ணீர் கீரையை கொண்டு ஆராய்ச்சி மேற்கொண்ட போது இலையின் சாறு கல்லீரல் மற்றும் மஞ்சள் காமாலைக்கு எதிராக செயல்படுகிறது என கண்டுபிடித்துள்ளனர்.

ரத்தசோகை:

ரத்தசோகையால் அவதிபடுபவர்கள் தண்ணீர் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் தண்ணீர் கீரை இரும்பு சத்துகளை அதிகளவு கொண்டுள்ளதால் ரத்தசோகைக்கு எதிராக செயல்படும். கர்ப்பிணிபெண்கள் கீரையை சேர்த்துக்கொள்வது அவசியம். ஏனெனில் உடலுக்கு தேவையான ரத்த அணுக்களை உருவாக்கி ஹீமோகுளோபினை அதிகப்படுத்தும் முக்கிய பொருளாக இக்கீரை உள்ளது..

அஜீரணம் மற்றும் மலச்சிக்கல்:

ஃபைபர் சத்துகளை அதிகளவு கொண்டுள்ள தண்ணீர் கீரை செரிமானக் கோளாறுகளுக்கு நிவாரணம் வழங்குவதில் சிறந்து விளங்குகிறது.. மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனையால் அவதி படுபவர்கள் கீரையை வேகவைத்த தண்ணீரை வடிகட்டி பருகினால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். குடல் புழுக்கள், வயிறு பிரச்சனைக்கு இது பேதி மருந்தாகவும் பயன்படுகிறது. ஆகவே வாரத்தில் மூன்று நாட்கள் கீரையை உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வயிற்று புண்ணை குணப்படுத்தும் முளைக்கீரை:-

வயிற்று புண்ணை குணப்படுத்தும் முளைக்கீரை:-

கீரையை தினமும் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். முளைக்கீரை அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்த கீரை. இக்கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் கே, வைட்டமின் சி, போலேட் மற்றும் ரிபோப்லாவின் ஆகியவற்றை கொண்டுள்ளது.. நீர்சத்து அதிகமுள்ள முளைக்கீரை வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

உடலுக்கு பலம் கூட்டும் சக்தியை கொண்டது. சிறுவர்களுக்கு இந்தக்கீரையை தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி அடைவார்கள். முளைக்கீரையில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், மங்கனீசு போன்ற கணிமங்களை கொண்டுள்ளது முளைக்கீரை. கோதுமை, அரிசி, ஓட்ஸ், ஆகியவற்றில் கொண்டுள்ள புரதத்தை விட 30% அதிகபுரதத்தை கொண்டுள்ளது. இதயநோய், உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்களுக்கு முளைக்கீரை உதவுகிறது.

முளைக்கீரை மிளகூட்டல்

என்னென்ன தேவை

முளைக்கீரை-1கட்டு
துவரம் பருப்பு-100 கிராம்
துருவிய தேங்காய்-1மூடி
சீரகம்-1ஸ்பூன்
காய்ந்த மிளகாய்-3
உளுந்தம் பருப்பு-1ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்-1ஸ்பூன்
கடுகு- 1/2ஸ்பூன்
பெருங்காயம்- ஒரு சிட்டிகை
உப்பு-தேவையான அளவு

எப்படி செய்வது

முதலில் துவரம் பருப்பை மஞ்சள்தூள் போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கீரையின் மண் நிரம்பிய வேர் பகுதியை நறுக்கிப் போட்டு விட்டு மீதமிருக்கும் கீரையை தண்ணீரில் சுத்தமாக அலசி பொடிபொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். நறுக்கிய கீரையை தனியாக வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விடாமல் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயுடன் சீரகம், மற்றும் தேங்காய் சேர்த்து வதக்கி பின் மை போல மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விடவும். தீயை மிதமாக வைத்துக்கொள்ளவும். பின்னர் கீரையையும் துவரம் பருப்பையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு கிளறவும். அரைத்த விழுதையும் சேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அனைத்தையும் ஒன்றாகச் சேரும்படி கிளறவும். எல்லாம் சேர்ந்து வந்ததும் இறக்கி வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும். சுவையான முளைக்கீரை மிளகூட்டல் தயார்.

சேப்பகிழங்கு கீரை:-

சேப்பகிழங்கு கீரை:-

சேப்பகிழங்கு,சாமை கிழங்கு, யானை கால் செடி என பலப்பெயர்களில் அழைக்கபடுகிறது இது இந்தியா முழுவதும் மருந்திற்காகவும்.உணவிற்காக
வும் பயிரிடப்படுகிறது.இந்த யானை கால் செடி தரைக்கு அடியில் கிழங்கை விளைவிக்ககூடியது...இதன் கிழங்கை பயன்படுத்தும் அளவிற்கு கூட இதன் கீரையை அதிகம் விரும்புபவர்கள் யாரும் இல்லை.சேப்பகிழங்கில் ஆயிரம் வகை உள்ளது..இதன் இலையை பொருத்து கிழங்கு வகைபடுத்தபடுகிறது.
சேப்பகிழங்கில் புரதம் கொழுப்பு தாது உப்புகள்,நார்சத்து மாவுச்சத்தும்,காணப்படுகின்றன.

சேப்பங்கீரை இலைச்சாற்றை விந்தணு பாதிக்கப்பட்ட ஆண்களுக்குத் தர விந்து கட்டும். இது மூல நோய்களுக்கு நல்ல மருந்தாகும். இந்த கீரையுடன் புளி சேர்த்து சமைத்து உண்ண வெளித்தள்ளிய மூலமும் ரத்தக்கடுப்பும் நீங்கும். இந்த கீரையை சமையலில் சேர்த்துக்கொள்ள மேக சாந்தி குணமடையும். மேலும் மூலவாய்வு, மூலச்சூடு, ரத்த மூலம், மூளை மூலம் இவைகள் நீங்கும்.

குளவி, வண்டு, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடத்தில் இக்கீரையின் சாற்றைப் பூச நஞ்சு இறங்கி வேதனை நீங்கும்.

சேப்பகிழங்கு கீரை சிறந்த மூலிகையாகவும் செயல்படுகிறது. இது பலவித நோய்களை நீக்கும் ஆற்றல் பெற்றது. இந்த இலையில் சாற்றை வெட்டுக்காயங்களுக்குப் பூச விரைவில் காயங்கள் ஆறும். தசைநார்களை வேகமாக வளரச் செய்யும்.

இந்த இலையின் சாற்றினை ரத்தம் சொட்டும் இரத்தக் காயங்களின் மீது பூச இரத்தம் ஒழுகுவது நிற்கும். மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலிக்கு இதன் சாற்றைக் கொடுக்க வலி நீங்கி நிவாரணம் கிடைக்கும். கீரையையும், தண்டையும், வேகவைத்த நீரில் நெய் கலந்து கொடுக்க வயிற்றுவலி குணமாகும். காதுவலி, காதில் சீல் வடிதல், போன்றவற்றிர்க்கு கீரை சாற்றினை இரண்டொரு துளி விடலாம். இதனால் வலி நீங்கும்.

வல்லாரை கீரையும் அதன் பயன்களும்:-

வல்லாரை கீரையும் அதன் பயன்களும்:-

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது. காசம், மேகம், போன்ற நோய்களைக் குணப்படுத்துவதில் வல்லாரை கீரை நிகரற்றது. இந்த கீரையை பால் கலந்து அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட விழுதை நெல்லிக்காய் அளவு திரட்டி உண்ண வேண்டும். இப்படி இந்த விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து இளமை தோற்றம் திரும்பும்.

எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் வல்லாரை இலையால் செய்யப்பட்ட மாத்திரை குணமாக்கும். உடலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் புண்கள் ஆகியவற்றை வல்லாரை சரிசெய்து விடும் ஆற்றல் வாய்ந்தது. வல்லாரை இலையுடன் மிளகு, துளசி இலை, ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகுபதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு சுடுநீரில் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.

யானைக்கால் நோய் உள்ளவர்கள் இந்த இலையை தொடர்ந்து காலில் வைத்து கட்டி வந்தால் யானைக்கால் நோய் எளிதில் குணமாகும். வல்லாரை இலையை அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் விரை வீக்கம், வாயுவீக்கம், தசை சிதைவு, போன்றவை குணமாகிவிடும். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரசுவதிக் கீரை யென்றும் அழைக்கின்றனர். இரத்த சுத்திகரிப்பு வேலையைச் சிறப்பாக செய்கிறது. தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது. இக்கீரையை கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.

Thursday, 21 November 2013

இளநீர் மருத்துவகுணம்...!

இளநீர் மருத்துவகுணம்...!

இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம் (Isotonic Drink). இது உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.

இளநீர் இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமன்று; பல பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது.

இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது. மூல நோய், நாட்பட்ட சீதபேதி, ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.

பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் இரண்டு குவளை இளநீர் அருந்துவது என்பது ஒரு பாட்டில் சலைன் ஏற்றுவதற்குச் சமமாகும். கடும் நீரிழப்பின் போது (severe dehydration) சரியான மாற்றுக் கிடைக்காத போது இளநீரையே நேரடியாக இரத்த நாளங்களில் ஏற்ற முடியுமாம்.

மே, ஜூன் ஆகிய இரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது உடலிலிருந்து வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் நீர்க்கடுப்பு ஏற்படலாம். அப்போது இரண்டு குவளை இளநீர் பருகிட ஒரு மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும். சிறுநீர்ப்பாதையில் சில நேரம் புண்ணாக இருந்தால் கிருமிகள் அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம் அரைக்கால் கரண்டி தூள் செய்து கலந்து பருகிவர ஐந்து நாட்களில் அவை நீங்கும்..

பெண்களின் மாதவிலக்கின் போது அடிவயிறு வலிக்கும். அதற்கு இளநீர் சிறந்த மருந்து. பேதி சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது. சிறுநீரகக்கல், சதையடைப்பு, சிறுநீர்க்குழாய் பாதிப்பு (Urinary Infection), போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர் தான்.

டைபாய்டு மலேரியா, மஞ்சள் காமாலை அம்மை நோய்கள் டிப்தீரியா நிமோனியா வாந்திபேதி வயிற்றுப்புண் மலச்சிக்கல் சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும். அறுவை சிகிச்சைகளுக்குப் பின் திரவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவை சிகிக்சைப் புண் (Surgical Sore) விரைவில் குணமடையும்.

உணவு எளிதில் ஜீரணமாவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால் செரிமான உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும்போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும். நாக்கு வறட்சி நீங்கும்.
கோடைக்காலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடிய இனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று, புண், ரணம் ஏதுமின்றி ஆரோக்கியத்துடன் வாழலாம்.

உடலுக்குக் கேடு தரும் பல்வேறு வேதிப்பொருட்களை உள்ளடக்கிய கார்பானிக் குளிர்பானங்கள் (Carbonated Drinks), பனிக்கூழ் (Ice cream) ஆகியவற்றை விட உடலுக்குப் பல மடங்கு நலம் தரும் இயற்கை பானமான இளநீரைப் பயன்படுத்துவதே ஆரோக்கியமான வழி.

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்:-


கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்:-

புத்துணர்ச்சிக்காக தேநீர் பருகுவது என்பது பல நூறு ஆண்டுகளாக இருந்துவரும் வழக்கம். தேநீரில் பல வகைகள் காணப்பட்டாலும் அனைவராலும் விரும்பப்படுவது மூன்று வகைகள் ஆகும்.

1. கிரீன் டீ
2. ஊலாங்
3. பிளாக் டீ

கிரீன் டீ “கேமிலியாசைனன்ஸிஸ்” எனப்படும் தாவரத்தின் இலைகளில் இருந்து பெறப்படுகிறது. கிரீன் டீ யில் ஆறுவிதமான பாலிஃபீனால்கள் உள்ளன. அவைகள்.

1. எபிகேட்சின்
2. கேலோகேட்சின்
3. கேட்சின்
4. எபிகேட்சின் கேலட்
5. எபிகேட்சின்கேலோகேட்சின்
6. எபிகேலோ கேட்சின்

மேலும் கேஃபின், தியோபுரோமின், தியாஃபிலின் போன்ற ஆல்கலாய்டுகளும் உள்ளன. இவைகள் மனித உடலுக்கு புத்துணர்ச்சி தருவதுமட்டுமில்லாமல் மனித உயிர்களை காக்கும் சஞ்சீவிகளாக உள்ளன. கிரீன் செய்யும் அற்புதங்கள் அனைத்தும் அறிவியல் முறைப்படி ஆராய்ந்து விஞ்ஞானிகளால் பரிந்துரை செய்யப்படுவது ஆகும்.

கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம்.

பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது.

சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன.

எனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரீன் டீயின் நன்மைகள்

1. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

2. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

3. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

4. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

5. இதய நோய் வராமல் தடுக்கிறது.

6. இதில் உள்ள தியோபிளவின்கள் இரத்தத்தில் இன்சுலினை அதிகரித்து குளுகோஸ் வினையை ஊக்கப்படுத்தி ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

7. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.

8. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

9. இதில் உள்ள பாலிஃபீனால்கள் புற்று நோய் செல்கள் வளரவிடாமல் அழிக்கிறது. தீங்கிழைக்கும் என்சைம்களின் வளர்ச்சியை தடுத்து ரத்தப்புற்று, நுரையீரல் புற்று, தொண்டை புற்று, வயிறு, குடல், ஈரல் புற்று மற்றும் மார்பகப்புற்று போன்றவற்றின் தீவிரத்தை குறைக்கிறது.

10. எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.

11. பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.

12. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

13. இதில் உள்ள எபிகேலோ கேட்சின் மூளையின் செயல்திறனை அதிகரித்து நினைவாற்றலை பெருக்குகிறது.

14. சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.

15. முகப்பரு, வறண்ட சருமம், சரும அலர்ஜி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணம் தருகிறது.

16. இரத்த அழுத்தம், பக்கவாதம் அல்சைமர் போன்றவற்றை தவிர்க்கிறது. எலும்புகள் பலமடையவும் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும் செய்கிறது.

16. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

17. மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.

18. உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.

19.இதில் உள்ள பாலிஃபீனால்கள் மனஇறுக்கத்தை போக்கி மூளையில் ஆல்பா அலைகளை தூண்டிமனதுக்கு அமைதியை தருகிறது.

சித்த மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள் 100 :-

சித்த மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள் 100 :-

1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

8) குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.

41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.

44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

48) தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.

56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்

65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.

67) பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

72) வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

74) தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.

80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.

81) சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.

88) பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.

92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

95) நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.

96) வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.

98) நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

99) தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

100) தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

கிராம்பு மருத்துவ குணங்கள்:-

கிராம்பு மருத்துவ குணங்கள்:-

கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.

* உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

* ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

* கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

* 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

* தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

* கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.

இரத்த உற்பத்திக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம்:-

இரத்த உற்பத்திக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம்:-

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம்.

நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும். பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்..

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

ரத்த ஓட்டத்தை சீராக்கும் மல்பெர்ரி பழம்:-

ரத்த ஓட்டத்தை சீராக்கும் மல்பெர்ரி பழம்:-

மல்பெர்ரி பழம் சுவையுடன் கூடிய சத்து மிகுந்த பழம். . ஊட்டச்சத்துகளை அதிகம் கொண்டிருக்கும் இந்த பழத்தின் இலைகள் பட்டு புழுக்களுக்கு உணவாக பயன்படுகிறது. திராட்சை போன்று காணப்படும் மல்பெர்ரி பழம் பளபளப்பான ஒளி பச்சை நிறத்திலும், சிவப்பு, வெள்ளை நிறத்திலும் இருக்கிறது.

ஆண்டியாக்ஸிடண்ட்ஸ்

மல்பெர்ரி பழங்கள், இலைகள், தண்டுகள் என அனைத்திலும் ஆண்டியாக்ஸிடண்ட்ஸ் சக்தியை மூல ஆதாரமாக கொண்டு செயல்படுகிறது.. குறிப்பாக ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருளான ரெஸ்வெராட்ரலினை அதிக அளவு பெற்றிருக்கிறது. மல்பெர்ரியை ஆராய்ச்சி செய்த பல்கலைக்கழகமான டெக்சாஸ் சுகாதார அறிவியல் மையம் மல்பெர்ரியில் உள்ள ரெஸ்வெராட்ரலின் நோய்யெதிர்ப்பு சக்திக்கு பெரிதும் உதவுகிறது என தெரியபடுத்தி உள்ளனர்.

நோய் எதிர்ப்பு

மல்பெர்ரி பழங்களில் இரத்த விழுங்கணுக்களினுள் செயல்படுத்த பயன்படும் ஆல்கலாய்டுகளை கொண்டிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோயை தடுக்கும் பழம் என கருதுகின்றனர். ஏனெனில் மல்பெர்ரி பழத்தில் ரெஸ்வெராட்ரலின் ஃபைட்டோநியூண்ட்ரியண்ட்டின் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

இரத்த சர்க்கரைக்கு துணைபுரிகிறது.

மல்பெர்ரி பழம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இரத்தஅழுத்தத்தை குறைத்து, இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை சீராக இயக்குகிறது. இரத்தகட்டிகள், பக்கவாதம், போன்றவற்றிக்கு விரோதமாக செயல்பட்டு அவற்றை அழிக்கிறது. உலர்ந்த மல்பெர்ரி பழத்தில் புரதம், வைட்டமின் சி மற்றும் கே, நார்சத்து போன்றவை அதிகமாக உள்ளது. இது உடல்நலத்தை காக்கும் சிறந்த உணவாகும்.

கீரை இல்லா சமையல் வேண்டாமே!

கீரை இல்லா சமையல் வேண்டாமே!

“காய்கறிகள் வாங்கச் செல்லும் நம்மை முதலில் கவர்ந்து இழுப்பது பச்சைப்பசேல் கீரைகள்தான். கீரை வளர்ப்பது மிக எளிது. மிகக்குறுகிய காலத்தில் அறுவடை செய்து விற்பனை செய்துவிடலாம். இதில் ஓர் அதிர்ச்சிச் செய்தியும் உண்டு. தமிழகத்தின் பல புறநகர் பகுதிகளில், கழிவுநீரில் சுகாதாரமே இல்லாமல் கீரை வளர்த்து, விற்பனை செய்து காசு பார்க்கிறார்கள்.

இதனால், நன்மை செய்ய வேண்டிய கீரையே பல நேரங்களில் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை போன்ற பாதகங்களை ஏற்படுத்தி விடுகின்றன. இப்பிரச்னையைத் தவிர்க்கும் வகையில், கீரைகளை நம் வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம். தானியக்கீரை போன்றவற்றை பெரிய பைகள் அல்லது தொட்டிகளிலும், அரைக்கீரை போன்றவற்றை கீரை படுகைகளிலும், பாலக் கீரையை உயரமான பைகளிலும் வளர்க்கலாம்.

கொத்தமல்லி, புதினா போன்றவற்றை சிறிய பைகளில் வளர்க்கலாம். கீரை விதைகளை நர்சரியில் வாங்கி விதைக்கலாம். அதிகபட்சம் 15 தினங்களில் கூட அறுவடை செய்யும் கீரை வகைகள் உள்ளன. உயிர்ச் சத்தான வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவு பச்சைக்கீரை வகைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால், இவை தொற்றுநோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது. அதனால் கீரை ‘பாதுகாக்கும் உணவு’ (Protective Food) என்றழைக்கப்படுகிறது.

கீரை மகத்துவம்

அரைக்கீரை: தாது விருத்தி செய்யும். ரத்தத்தை உற்பத்தி செய்யும். கபத்தை உடைத்து வெளியேற்றும். வாத நோய் தணிக்கும்.

அகத்திக்கீரை: பித்தம் குணமாகும். ஜீரணசக்தி உண்டு பண்ணும். இழந்த பலத்தை மீட்டுத்தரும். மலத்தை இளக்கி வெளியேற்றும். வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் அதிக அளவில் இருப்பதால் உடல் வளர்ச்சியையும், கண் பார்வை தெளிவையும், எலும்பு பலமும் கொடுக்கும்.

தவசு முருங்கை: மூக்கு நீர்பாய்தல், இரைப்பு, இருமல் நீங்கும். கோழை அகற்றும் குணமுடையது.

லஜ்ஜை கெட்ட கீரை: சித்தர்கள் இக்கீரையை ‘வாத மடக்கி‘ என்று கூறுகிறார்கள். மூட்டுவலியும் மூட்டுவீக்கமும் நீங்கும். வாயுத் தொந்தரவுகள் குறையும்.

ஆரைக்கீரை: அளவு மீறிப் போகும் சிறுநீரை கட்டுப்படுத்தி சமநிலைக்கு கொண்டு வரும். பித்தக் கோளாறுகளையும் போக்கும்.

பொன்னாங்கண்ணி கீரை (பச்சை): மேனி பிரகாசிக்கும். தினசரி இக்கீரையை சூப் வைத்து அருந்தினால் உடல் வலு பெறும்.

மணத்தக்காளி கீரை: குடல்புண், வாய்ப்புண் ஆற்றும் சக்தி உள்ளது. சிறிய வெங்காயத்துடன் சமைத்து சாப்பிட்டால் புண்கள் விரைவில் ஆறும்.

முளைக்கீரை: அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இளமையில் தலைமுடி நரைக்காமல் இருக்கும்.

கறிவேப்பிலை: நாள்தோறும் உணவில் ஏதாவது ஒரு வடிவில் சேர்த்துக் கொண்டால் இளமைத்தோற்றம் நிலைத்து நிற்கும்.

பொன்னாங்கண்ணி கீரை(சிவப்பு): பூண்டு சேர்த்து வதக்கி உணவுடன் உண்டால் மூலநோய், வாய்ப்புண், தொண்டைப்புண் நீங்கும்.

புதினா: இரும்புச்சத்து இருப்பதால் ரத்தத்தை சுத்தம் செய்வதோடு, புதிய ரத்தத்தையும் உண்டு பண்ணும். பற்களை கெட்டிப்படுத்தும். எலும்புகளை வளரச் செய்யும். புதினாவை நசுக்கிப் போட்டு கஷாயம் வைத்து சாப்பிட்டால் இளமையுடன் வாழலாம். 1/2 சங்கு புதினாக் கீரையை குழந்தைகளுக்கு கொடுக்க கபம் நீங்கும்.

மணத்தக்காளி கீரையின் மகிமை:-

மணத்தக்காளி கீரையின் மகிமை:-

கீரை வகைகளில் மணத்தக்காளி கீரையும் ஒன்று. இந்த கீரையில் இலை, காய், பழம் இருக்கும். இந்த மூன்றையும் சமைத்து சாப்பிடலாம். இதில் சிறிய அளவில் வெள்ளை பூக்களும் மலரும். மணத்தக்காளி கீரையின் காய்கள் மிக சிறியதாக கொத்து கொத்தாக காய்க்கும். காய் முற்றினால் கத்தரிகாய் நிறத்தில் இருக்கும். இதில் மற்றொரு வகை உள்ளது. அதில் பழம் இளம் சிவப்பாக இருக்கும்.

மணத்தக்காளி கீரையின் பழம் இனிப்பு புளிப்பு கலந்த சுவையாக இருக்கும். காய், பழத்தை பச்சையாகவும் சாப்பிடலாம். சட்டினி, பச்சடி, கூட்டு, பொரியல், ரசம் வைத்தும் சாப்பிடலாம். காய் மற்றும் பழத்தை புளிக்குழம்பு வைத்து சாப்பிடலாம்.

பலன்கள்:

1. மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மூலம் ஆகிய நோய்கள் குணமாகும். சளி, இருமல், போன்ற கப நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது. பிள்ளை பெற்ற பெண்களுக்கு மிகவும் நல்லது.

2. கண் பார்வை நன்றாக தெரியும்.

3. விட்டமின் ஏ, பி மற்றும் இரும்பு, சுண்ணாம்பு ஆகிய சத்துக்கள் மணத்தக்காளி கீரையில் அதிகம்.

4. குறைந்த விலையில் கிடைத்தாலும், மணத்தக்காளி கீரையில் போஷாக்கு அதிகம்.

5. குழந்தைகள், கர்ப்பிணிபெண்கள் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. மணத்தக்காளி கீரைக் குழம்பு

மணத்தக்காளி கீரைக் குழம்பு

என்னென்ன தேவை?

மணத்தக்காளி கீரை- ஒரு கட்டு
துவரம் பருப்பு-100கிராம்
சிறிய வெங்காயம்-50 கிராம்
தக்காளி -3
பச்சை மிளகாய்- 6
பூண்டு-3சிறிய பல்
புளி- சிறிய எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி-1ஸ்பூன்
எண்ணெய்-3டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுந்து-1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம்- கால் டீஸ்பூன்
சீரகம்-1/2 டீஸ்பூன்
வரமிளகாய்- 1
கறிவேப்பிலை,உப்பு-தேவையான அளவு

எப்படி செய்வது?

முதலில் கீரையை ஆய்ந்து கழுவிக் கொள்ளவும். புளியை நூறு மில்லி தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை இரண்டிரண்டாக நறுக்கி வைக்கவும். ஒரு தம்ளர் தண்ணீர் விட்டு மஞ்சள் பொடி சேர்த்து துவரம் பருப்பை நன்றாக வேக வைக்கவும். பருப்பு வெந்ததும் அதனுடன் பெருங்காயம், பூண்டு, கீரை, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், போட்டு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் கூடவே தக்காளியைப் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின் கரைந்துள்ள புளிக்கரைசலை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். கொதிக்கும் புளிக்கரைசலுடன் கடைந்து வைத்துள்ள கீரையைக் கலந்து மேலும் பத்து நிமிடம் கொதிக்க விடவேண்டும். பின் கீரைக் குழம்பை இறக்கி வைத்து, ஒரு டீஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாய், கிள்ளிப்போட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், போட்டு தாளித்தால் ருசியான மணத்தக்காளி கீரை குழம்பு ரெடி..

Friday, 15 November 2013

வங்கிகள் வழங்கும் பலவிதமான ஆன் லைன் சேவைகள்…

வங்கிகள் வழங்கும் பலவிதமான ஆன் லைன் சேவைகள்…


பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை வங்கியிலிரு ந்து பணம் எடுப்பதே ஒரு (பரபரப்பான) அனுபவமாக இருக்கும்! வங்கிக்குப் போய், டோக்கன் வாங்கி, நம் வரிசை எண் வருகிற வரை காத்து க்கிடந்து, பணத்தைப் பெற்று, வீட்டுக்கு வருவதற் குள், ஒரு மணி நேரம் முதல் அரை நாள் போய்விடும். ஆனால், ஏ. டி. எம். வசதி வந்தபிறகு இன்றைக்கு ஒன்றிரண்டு நிமிடங்களில் பணத்தை எடுத்துவிட முடிகிறது. இன்றைக்கு குறிப்பிட்ட தொகைக்கு மேலே பணம் எடுக்கவேண்டும் என்றால் மட்டுமே வங்கிக்குச் செல்கிறோம்.

ஏ.டி.எம். வசதி மாதிரி, இன்று வங்கி கள் வழங்கும் பலவிதமான ஆன் லைன் வசதிகளைப் பயன்படுத்தினா ல், உங்கள் காரியங்களை இருந்த இட த்தில் இருந்தபடி எளிதாகச் செய்து முடிக்கலாம். இதனால் நேரமும் மிச்ச ம்; அலைச்சலும் இல்லை. கண்ணு க்குத் தெரியாமல் பெருமளவிலான பணத்தை மிச்சப்படுத்திச் சேமிக்க வும் செய்யலாம்.

அட, அப்படியா! வங்கிகள் வழங்கும் வெவ்வேறுவிதமான ஆன் லைன் வசதிகள் என்னென்ன என்று  தானே கேட்கிறீர்கள்? ஒவ்வொன்றை ப்பற்றியும் விளக்கமாகச் சொல்கிறே ன், கேளுங்கள்.


பலவிதமான ஆன்லைன் வங்கிச்சே வைகளைப் பெறுவதற்கு, ஆன்லைன் வசதி பெற்றிருப்பது அவசியம். ஆகவே, நீங்கள் ஏற்கென வே வங்கியில் கணக்கு வைத்திருந்து உங்களிடம் ஆன்லைன் பேங் கிங் / இன்டர்நெட் பேங்கிங் வசதி இல்லையென்றால், உடனடியா க உங்கள் வங்கி மேலாளரை அணுகி ஆன்லைன் வசதிக்கு உண் டான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுங்கள்.

சில வங்கிகளில் உடனடியாக யூஸர் ஐடி (User ID) மற்றும் பாஸ் வேர்டை (Password) தருகிறார்கள் . சில வங்கிகளில் ஓரிரு வாரத் தில் தருவார்கள். நீங்கள் புதிதாக கணக்கு ஆரம் பித்திருந்தால் ,  ஆன்லைன் வசதிக்கு ‘ஆம்’ என் று டிக் செய்து கொடுங்கள். இந்த ஆன்லைன் பேங்கிங் வசதியைப் பெறு வதன் மூலம் இருந்த இடத்தில் இருந்தபடி நீங்கள் என்னவெல் லாம் செய்யலா ம்?

பேலன்ஸ் எவ்வளவு?

நம் அக்கவுன்டில் எவ்வளவு பணம் பேலன்ஸ் இருக்கிறது என்ப தைத் தெரிந்துகொள்ள நினைத்தால், நம் அக்கவுன்ட் பாஸ்புக் கை வைத்து தெரிந்துகொள்ளலாம். கடைசியாக பணம் எடுத்தது / போட்டது போன்ற விவரங்கள் பற்றி பாஸ்புக்கில் என்ட்ரி செய்திருந்தால் மட்டுமே சரியான பேலன்ஸ் தொகையை அறிய முடியும். வங்கிக்கு செல் வதே குறைந்துவிட்ட இந்தக் காலத்தில் இதற்கான வாய்ப்பு குறைவுதான். இன்னொரு வழி, பக்கத்தில் உள்ள ஏ.டி.எம்-க்கு சென்று பேலன்ஸை பார்ப்பது. அவ்வளவு ஏன் கஷ்டப்படுவானேன்?   உங்களிட ம் ஆன்லைன் பேங்கிங் வசதி இருந்தால், அரை நிமிஷத்தில் உங்கள் கம்ப்யூட்டர் மூலம் பார்த்து விடலாம். தவிர, உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்துள்ளதா, நீங்கள் தந்த காசோலை பாஸாகி விட்டதா என்பதுபோன்ற அனைத்து விவரங்க ளையும் பார்த்துக்கொள்ளலாம். தவிர, கடந்த சில நாட்கள் முதல் பல வருட ஸ்டேட்மெ ன்ட்களை ஆன் லைன் மூலமாக நீங்கள் எடுத்து க்கொள்ளலாம்.

ஆர்.டி. மற்றும் டெபாசிட் ஓப்பனிங்:

ஆன்லைன் மூலம் நீங்கள் ஃபிக்ஸட் டெபாசிட், ஆர்.டி. போன்ற அக்கவுன்ட்களை திறந்து முத லீடு செய்யலாம். அதேபோல, அந்த அக்கவுன் ட்களை ஆன்லைன் மூலமே மூடவும் செய்ய லாம். குறிப்பாக, வெளியூர் / வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும்.

பணப் பரிவர்த்தனை:  

இந்தியாவில் உள்ள எந்த வங்கிக் கணக்கிற்கும் ஆன்லைன் மூலமாக வே பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்ய லாம். ஒரே வங்கியில் வைத்திருக்கு ம் பல கணக்குகளுக்கு இடையில் எப் போது வேண் டுமானாலும் பணத்தை அனுப்பலாம் / பெறலாம். வெவ்வேறு வங்கிகளுக்கு இடையில் உள்ள கணக்குகளுக்குப் பணத்தை மாற்றும்போது, ஞாயிற்றுக்கிழமை தவிர, பிற நாட்களில் பகல் நேரங்களில் (திங்கள் – வெள்ளி – காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை; சனிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை) பணத்தை மாற்றினால் அடுத்த ஒரு மணி நேரத்தி ற்குள் பணம் மாறிவிடும். இந்தப் பணமாற்று முறைக்கு நெஃப்ட் (NEFT – National Electronic Fund Transfer) என்று பெயர். இது ரிசர்வ் வங்கியின் விதி முறைகளுக்கு உட்பட்டு நடக்கிறது.


நீங்கள் பணம் மாற்றும்முன் அந்த அக்கவுன்டின் விவரங்களை உங்க ளது ஆன்லைன் பேங்கிங் வசதி யில் பதிவுசெய்து கொள்வது அவசி யம். இந்த வசதி பெரும்பாலான வங்கிகளில் சற்று முந்தைய காலம் வரை இலவசமாக இருந்தது. சில வங்கிகள் தற்போது ஒவ்வொரு மாற்றலுக்கும் ஒரு சிறிய தொ கையைக் கட்ட ணமாக வசூலிக்கின்றன. சில வங்கிகள் இன்னும் இந்த வசதியை இலவசமாகவே தந்துவருகிறது. நெஃப்ட்மூலம் மாற்றுவதற்கு குறைந்தபட்ச/உச்ச பட்ச அளவு என்று ஏதும் இல்லை. வங்கி யைப் பொறுத்து, உங்களின் அக்கவுன்டைப் பொறுத்து மாறுபட வாய்ப்புள்ளது. இன்று, இந்தியாவில் பெரும்பாலான வங்கிகள் இந்தச்சேவையை தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின் றன.

 உடனடி பணபரிமாற்றம்:

எனக்கு உடனடியாகப் பணம் தேவை என்கிறீர்களா? அதற்கும் வசதி உள்ளது. அந்த வசதி ஆர். டி. ஜி. எஸ். (RTGS – Real Time Gross Settlement) என்று அழைக்கப்படு கிறது. ரூ.2 லட்சத்தி ற்கு அதிகமா ன தொகையை இந்த வசதி மூலம் மாற் றலாம். போய்ச் சேரவேண்டிய அக் கவுன்டிற்கு ஒரு சில மணித் துளிகளி ல் சென்று சேர்ந்துவிடும். இந்த முறை யிலான பணப் பரிமாற்றத்திற்கு கட்டணம் உண்டு. ரிசர்வ் வங்கி யின் வரைமுறைபடி, 5 லட்சத்தி ற்குள் இருக்கும் பணப் பரிமாற் றத்திற்கு ரூ.30-க்கு மிகாமலும், அதற்குமேல் உள் ள ஒவ்வொரு பணமாற்றத்திற்கும் ரூ.55-க்கு மிகாம லும் வங்கிகள் கட்ட ணத்தை வசூலிக் கலாம்.

மொபைல் மற்றும் டி.டி.ஹெச். ரீசார்ஜ்:

பல வங்கிகள் தங்களது வாடிக்கையா ளர்களை ஆன்லைன் பேங்கிங் மூலம் மொபைல் போனிற்கு மற்றும் டி.டி.ஹெச்-ற்கு (DTH) பணம் ரீ சார்ஜ் செய்யும் வசதியையும் வழங்குகின்றன. உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நீங்கள் ரீசார்ஜ் செய்யும் தொகை எடுத்துக்கொ ள்ளப்படும். ரீசார்ஜ் உடனடியாக ஆகிவிடும்.

டிக்கெட் புக்கிங் – ஷாப்பிங்:

ஆன்லைன் பேங்கிங் வசதி வைத் திருப்பவர்கள், ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட் போன்றவற்றை ஆன்லை ன் மூலம் புக் செய்வதுடன், ஆன் லைனில் வேறு பொருட்களையும் வாங்குவதற்கு வசதியாக இருக்கும். பஸ் அல்லது ரயில் டிக்கெட் வாங்குவதற்கு பல கி.மீட்டர் தூரத்துக்கு வண்டியில் போய், கால் கடுக்க நிற்பதை விட, உங்கள் வீட்டிலேயே ஐந்து நிமிடத்தில் வாங்கிவிடலாமே!

பில் பேமன்ட்:

நமது நேரத்தில் பெரும்பகுதியை சாப்பி டுகிறது இந்த பில் பேமன்ட். டெலிபோன் பில், மாநகராட்சி வரி, வருமான வரி கட்டுவது என ஒவ்வொரு அலுவலகத் துக்கும் போய் காத்துக் கிடப்பதை விட உங்கள் வீட்டில் இருந் தபடியே அத்தனை வேலைக ளையும் எளிதாகச் செய்து முடிக்க லாம். இன்ஷூரன்ஸ் பிரீமியத் தையும் கையோடு கட்டுவதோடு, புதிய இன்ஷூர ன்ஸ் பாலிசிக ளையும் எடுக்கலாம். ஒரு முறை பதிவுசெய்தால் போதும், வேண்டி யபோ தெல்லாம் நீங்கள் ஆன்லைனில் சென்று பணத்தை உரிய நிறுவ னத்திற்கு செலுத்தி விடலாம்.

3-இன்-1 அக்கவுன்ட்:

பல வங்கிகள் ஆன்லைன் வசதி வைத்திருப்பவர்க ளுக்கு, வங்கி, டீமேட் மற் றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை ஒரே அக் கவுன்டில் வைத்துக்கொள் வதற்கு வசதிசெய்து தரு கின்றன. இந்த வசதிகளு க்கு ஒவ்வொரு வங்கியும் வெவ்வேறு வித மான கட்டணங்களை வசூலி க்கின்றன.

மல்டிபிள் அக்கவுன்ட்:

ஒரே வங்கியில் ஒரே நபர்/ நிறுவனம் வைத்திருக்கும் பல கணக்குகளை (வங்கிக் கணக் குகள், கிரெடிட் கார்டு, லோன், டீமேட்) ஒரே யூஸர் ஐடி-யின் கீழ் கொண்டுவரும் வசதியை யும் வங்கிகள் தருகின்றன. இதனால் பல கணக்குகளை ஒரே இடத்தில் சுலபமாகப் பார்த்துக் கொள்வ தோடு, அவ ற்றுக்கிடையில் டிரான் ஸாக்ஷனும் செய்ய முடியும்.

மணி ஆர்டர்:


சில வங்கிகள் இந்திய தபால் துறையுடன் கைகோத்து மணி ஆர் டரும் அனுப்பித் தருகின்றன. நீங்கள் உங்களது ஆன்லைன் அக் கவுன்டில் சென்று, மணி ஆர்டர் சென்று சேரவேண்டிய முகவரி மற்றும் தொகையைக் குறிப்பிட் டு விட்டால், சேரவேண்டிய இடத் திற்கு உரிய நேரத்தில் சென்று விடும்.


டிமாண்ட் டிராஃப்ட், செக்புக் ரிக்வஸ்ட்:


ஆன்லைனில் உங்களுக்கு வேண்டிய டி.டி, செக்புக் போன்றவ ற்றுக்கு ஆர்டர் செய்யலாம். ஆன்லைனில் செய்வதால் உங்களுக்கு வந்து சேரவேண்டியது, கூரி யர்மூலம் துரிதமாக வந்து விடுகிறது.

ஸ்டாப் பேமன்ட்:


வறுதலாக ஒருவருக்கு காசோ லையைத் தந்துவிட்டீர்களா? கவ லைப்பட வேண்டாம்! ஆன் லை னில் சென்று ஸ்டாப்பேமன்ட்  ரிக் வஸ்ட் தந்து விடுங்கள். வங்கி உங்களது காசோலைக்கு பேமன் ட் செய்யாது. இதுபோன்ற சேவைக்கெல்லாம் கட்டணம் உள்ளது!

பி.பி.எஃப் அக்கவுன்ட்:


ஒரு சில வங்கிகள் சேமிப்புக் கணக்கோடு சேர்த்து ஆன்லைனில் பி.பி.எஃப் அக்கவுன்ட் வசதியையு ம் தருகின்றன. இதனால் பி.பி. எஃப். அக்கவுன்டிற்கு ஆட்டோமெட் டிக்கா கச் செல்லுமாறு மாதா மாதம் செலு த்தவேண்டிய தொகையைப் போட் டு வைத்து விடலாம். பலருக்கும் பயன்படும் இந்த வசதி இல்லை என்றால் ,   ஒவ்வொரு மாதமும் வங்கிக்குச் செல்வதற்கு பயந்தே பலர் பி.பி.எஃப். அக்கவுன்டில் பணம் போடாமல் விட்டுவிடுகி றார்கள்.

ஹோம்லோன் அக்கவுன்ட்:


ஹோம்லோன் என்பது பலர் தங்களது வாழ்க்கையிலேயே எடுக் கும் மிகப் பெரிய கடன் ஆகும். பெரும் பாலானோர் அந்தக் கடனை சீக்கிரமா க அடைக்க விரும்புவதால், செலுத்த வேண்டிய இ. எம்.ஐ. தவிர, அவ்வப் போது முன்கூட்டியே பணம் கட்டுகிறார் கள். இப்படி பிரிபேமன்ட் செய்த பணம் சரியாக நம் கணக்கில் வரவு வைக்கப் பட்டுள்ளதா என்பதை அறிய அனைவ ரும் ஆவலாக இருப்பார்கள். ஆகவே, நீங்கள் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லாத பிறவங்கிகள்/நிறுவனங்களிலிருந்து லோன் எடுத்திரு ந்தாலும், அவர்களிடம் ஆன்லைன் வசதி கேட்டு பெற்றுக்கொள் ளுங்கள். ஆன்லைன்மூலம் வருமான வரிக்கான அசல்/ வட்டிச் சான்றிதழ் போன்றவற்றையும் பெற்றுக் கொள்ளலாம்.

26AS ஸ்டேட்மென்ட்:


வருமான வரி தொடர்பான இந்த ஸ்டேட்மென்டையும் ஆன்லைன் பேங்கிங் வசதி வைத்திருப்பவர்க ளுக்கு பல வங்கிகள் தருகின் றன. இந்த ஸ்டேட்மென்டில் நம் பெய ரில் யார், யார் எவ்வளவு வருமான வரி பிடித்துள்ளனர், அட்வான்ஸ் டாக்ஸ் எவ்வளவு கட்டியுள் ளோம் என்பது போன்ற பல விவரங்கள் இருக்கும். நாம் வருமான வரித் தாக்கல் செய்யும்போது மிகவும் உதவியாக இருக்கும்.

இதுவரை நாம் பார்த்த இந்த ஆன்லைன் சேவைகளை எல்லா வங்கிகளும் அளித்து விடுவதில்லை. தவிர, ஆன்லைன் வசதியை பல வங்கிகள் இலவசமாக அளித்தாலும், சில வசதிகளுக்கு சில வங்கிகள் கட்டணம் வசூலிக்கவும் செய்கின்றன. ஆன்லைன் வச திகளைப் பயன்படுத்துவதற்குமுன் அதற்கா ன கட்டணம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

பாதுகாப்புடன் உங்களது ஆன்லைன் வசதியைப் பயன்படுத்துவத ற்கு வாழ்த்துக்கள்!

உஷாராகப் பயன்படுத்த..!


ஆன்லைன் பேங்கிங் மூலம் நமக்கு பல சௌகரியங்கள் கிடைத்தாலும், அதை பத்திரமாகச் செய்து முடிக்க வே ண்டியது நம் கடமை. காரணம், ஆன் லைன் மூலம் நடக்கும் மோசடிகளுக்கு நம் வங்கிகள் பொறுப்பேற்பதில்லை. எனவே, ஆன்லைன் பேங்கிங் வசதி யை உஷாராக பயன்படுத்துவது எப்படி என்பதற்கு சில உஷார் டிப்ஸ்கள் இதோ:

* உங்கள் யூஸர் ஐ.டி மற்றும் கடவுச் சொல்லை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதீர் கள்.

* நெட்சென்டர்களில் உள்ள கம்ப் யூட்டர்களில் உங்களது ஆன் லைன் வங்கி அக்கவுன்டை திறந்து பார்க்காதீர்கள்.

* உங்களது சொந்த கணினியின் மூலமே ஆன்லைன் அக்கவுன் டை உபயோகியுங்கள்.

* உங்களது கணினியிலும் ஆன்டிவைரஸை அப்டேட்டாக வைத்துக்கொள்ளுங்கள்.

எலும்பு உறுதிக்கு கறிவேப்பிலை

எலும்பு உறுதிக்கு கறிவேப்பிலை

சுடலைமுத்து தோட்டத்துக்குள் போன அம்மணி, கறிவேப்பிலையை உருவி எடுத்து கசக்கி முகர்ந்தவள், ''ஆஹா... என்ன வாசம் பார்த்தியா வாசம்பா! வா, தாட்சாயிணி அக்காகிட்டப் போய் கேட்டுக் கொஞ்சம் பறிச்சிக்கலாம்...'' என்றபடியே விறுவிறுவென நடந்தனர்.
''அக்கா... அக்கா...'' என்று அழைத்தபடியே வரும் இருவரையும் பார்த்த தாட்சாயிணி, ''என்னடி அதுக்குள்ள விஷயம் உங்க காதுக்கு எட்டிடுச்சா?'' என்றார்.
''என்னக்கா சொல்ற... உங்க தோட்டத்துல கறிவேப்பிலை கிடக்கிறதைப் பார்த்ததும் பறிச்சிக்கலாம்னு வந்தோம்.''
''ஓஹோ... அப்படியா சங்கதி, என் பேத்தி பெரிய மனுஷியான விஷயம் தெரிஞ்சுதான் வந்தீங்களோனு நெனைச்சேன். நாளைக்கு நலங்கு வெச்சிருக்கு. காலையிலயே வந்துரணும் என்னா... மதியம் விருந்து சாப்பிடலாம்...'' என்ற தாட்சாயிணி வீட்டின் கொல்லைப்புறத்தை ஒட்டி இருந்த அறைக்கு அழைத்துப் போக, அங்கு அழகுப் பதுமையாக இருந்தாள் பேத்தி பார்வதி.

''கண்ணுக்கு அழகா... கறிவேப்பிலைக் கொத்து மாதிரி ஒரே ஒரு பேத்தி உனக்கு. யாருக்குக் கொடுத்துவெச்சிருக்கோ.'' எனச் சிரித்தாள் வாசம்பா.
''அந்தந்த வயசுக்கான அழகு அத்தனையும் இருக்கு... ஆனா, பார்வதி குட்டிக்கு தலையில் முடியக் காணோமே...?'' என்று அம்மணி நீட்டி முழக்க,
''அதான், இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு எப்போ பார்த்தாலும் படிப்பு, பரீட்சை, டென்ஷன்... அதனால, வளர்ற முடியும் உதிர்ந்திடுது. இத்தனைக்கும் வாரம் தவறாம, எண்ணெய் தேய்ச்சுத்தான் குளிக்கிறா. சத்தான சாப்பாடுதான் சாப்பிடுறா. ஆனா, பார்வதிக்கு முடி கொட்டுறது மட்டும் நிக்க மாட்டேங்குது. என்ன அம்மணி செய்ய?'' என்றார் தாட்சாயிணி.
''கையில வெண்ணெயை வெச்சிகிட்டு நெய்க்கு அலையலாமாக்கா? கறிவேப்பிலைக் காட்டையே வீட்ல வெச்சிக்கிட்டு, இப்படி முடி உதிர விடலாமா?'' என்ற அம்மணி, ''கருகரு முடி வளரணும்னா, கறிவேப்பிலை தைலம் செஞ்சு வெச்சுக்கணும். கறிவேப்பிலை இலைகளை உதிர்த்து அரைச்சு வடை மாதிரி தட்டி, நல்லாக் காயவெச்சுக்கணும். தேங்கா எண்ணெய், இல்லேன்னா தெனமும் தலையில தடவிக்கிற எண்ணெயில் அதைப் போட்டு நல்லா ஊறவிடணும். கறிவேப்பிலை சாறு அப்படியே அதில் எண்ணெயில் இறங்கிடும். தொடர்ந்து இந்த எண்ணெயைத் தேய்ச்சிட்டு வந்தா, முடி உதிர்றது நின்னுடும். பித்தம் தணிச்சு, உடல் சூட்டையும் குறைச்சிடும். சமையல் வாசனைக்கு மட்டுமில்லாம, முடி வளர்ச்சிக்கும் பயன்படுங்கிற இதோட அருமை தெரியாம, சாப்பிடறப்ப கறிவேப்பிலையை எடுத்து ஓரத்துல வெச்சிடுறாங்களே...'' என்றாள் அம்மணி.
''கைவேலையில கலக்குறீங்களேக்கா, கூடவே கறிவேப்பிலை இலையிலும் தொழில் செய்யலாமே... என்ன அம்மணி நான் சொல்றது...?'' என்றாள் வாசம்பா.
''ஆமாமா, கறிவேப்பிலை தண்டைக்கூட தூக்கி எறியாம நல்லாக் காயவெச்சுப் பொடிச்சு வெச்சிக்கலாம். குழம்பு, ரசம் செய்றப்ப, இந்தப் பொடியைத் தூவிவிட்டு இறக்கினா, ரசம் வாசம் காத தூரம் வீசும். கறிவேப்பிலையோட உளுந்து, மிளகா வத்தல், உப்பு சேர்த்து எண்ணெயில் போட்டு நல்லா வறுத்துப் புளி சேர்த்து அரைச்சுக்கணும். இந்தப் பொடியில, கொஞ்சமாத் தண்ணிவிட்டு கலந்தா... துவையல், அதிகமாத் தண்ணிவிட்டா... அது சட்னி. இது ரத்தத்துல கொழுப்பைக் குறைக்கிறதால, உடல் எடை ஒரே சீரா இருக்கும். நல்ல ஜீரணசக்தியையும் கொடுக்கும்.'' என்றாள் அம்மணி.
''ம்.. அப்புறம்..?''
''கறிவேப்பிலை, வயசான காலத்துல வர்ற எலும்பு தேய்மானத்தைக்கூட வரவிடாம செஞ்சிடும். அந்தக் காலத்துல சமைக்கிற எல்லாத்துலயும் கறிவேப்பிலையை சேத்திருப்பாங்க. அதான் இன்னிக்கும் நாம எலும்பு, மூட்டு பிரச்னை இல்லாம இருக்கோம்னு நெனைக்கிறேன்.'' என வாசம்பா சிரிக்க,
''ஆமாண்டி. கண்ணாடி போடாம, எனக்கு கண் பார்வை தெளிவா இருக்கிறதுக்கு கறிவேப்பிலையும் ஒரு காரணம்.
சர்க்கரை நோயாளிங்க, தெனமும் ரெண்டு வேளை 10 கறிவேப்பிலை இலையை மென்னுட்டு வந்தா, மாத்திரை சாப்பிடுற அளவுகூட பாதியாக் குறைஞ்சிடும். சளி, வாய்க் கசப்பு, குமட்டல், மலச்சிக்கல்னு எந்தப் பிரச்னையும் இருக்காது. '' என்ச் சிரித்தாள் அம்மணி.
''இத்தனை விஷயம் இருக்கே... நாளை விசேஷத்துக்கு கறிவேப்பிலை விருந்துதான்'' என்ற தாட்சாயிணியிடம் விடை பெற்றாள்.

பித்தவெடிப்பு குணமாக

பித்தவெடிப்பு குணமாக

பித்தவெடிப்பு வந்தால்... கால் அசிங்கமாகத் தெரியும். வலி வேறஒரு வழி பண்ணிரும். இதுக்கும் வைத்தியம் இருக்கு பயப்படாதீங்க. நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துக்கோங்க, அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரை டம்ளரா குறுகினதும் வடிகட்டி வச்சிக்கோங்க. அதுல பனங்கல்கண்டு சேர்த்து குடிச்சிட்டு வந்தா... பித்தவெடிப்பு மறைஞ்சிரும். ஒரு தடவை பயன்படுத்தின நன்னாரிவேரை 3, 4 தடவைகூட பயன்படுத்தலாம்.

பித்தவெடிப்பு உள்ள இடத்துல மருதாணி இலையை அரைச்சு பத்து போட்டாலும் குணம் கிடைக்கும். வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும்.

ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க..! சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க..!
சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!


இல்லற உறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடுகளின் காரணமாக, மனைவிக்குப் பூரண மகிழ்ச்சி தர இயலாமல் போகும். இன்னும் சிலருக்கோ, விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடு, உரிய எழுச்சி ஏற்படாமல் போதல், பாலுணர்வு வேட்கைக் குறைதல் போன்ற பல சிக்கல்களும் இருக்கக்கூடும். அவர்கள் எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. பாலியல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பல்வேறு மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.

காரணங்கள்:
ஹார்மோன் மாறுபாடுகள், ஆண் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் பாதிப்புகள், குரோமோசோம் மாறுபாடுகள், அம்மைக்கட்டு, காசநோய், பால்வினை நோய்கள், மனநிலை மாறுபாடுகள், புகைபிடித்தல், மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பாதிப்புகள், கதிரியக்கத்திற்கு உட்படுதல் மற்றும் இறுக்கமான உள்ளாடை அணிதல் போன்றவை.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

நிலப்பனைக் கிழங்கைப் பொடித்து, ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து பால், சர்க்கரை கலந்து உண்டுவரலாம்.

பூனைக்காலி விதை, நெல்லிவற்றல் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, ஒரு ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.

அமுக்கரா கிழங்குப் பொடியுடன் சம அளவு கற்கண்டு சேர்த்து ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்.

நிலப்பூசணிக் கிழங்கின் சாறுடன் பால், சர்க்கரை சேர்த்து உண்ணலாம்.

ஓரிதழ் தாமரையை அரைத்துப் பாக்கு அளவு எடுத்துப் பாலில் கலந்து அருந்தலாம்.

தாமரைப்பூவின் மகரந்தப் பொடியுடன் சர்க்கரை, தேன் கலந்து சாப்பிடலாம்.

சம அளவு நீர்முள்ளி விதை, மாதுளம் விதையைப் பொடித்து, ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன் கலந்து சாப்பிடலாம்.

துவளைப்பூ, முருங்கைப்பூ இரண்டையும் கைப்பிடி எடுத்து நெய், வெங்காயம் சேர்த்து சமைத்து உண்ணலாம்.

முள்முருங்கை இலையை நெய், அரிசி மாவு சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.

வில்வப் பிசின், வாதுமைப் பிசின் சம அளவு எடுத்துப் பொடித்து அதில் கால் ஸ்பூன் எடுத்துப் பால் சேர்த்து குடிக்கலாம்.

நாவல் வேர்ப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.

சேர்க்க வேண்டியவை:

முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா, முருங்கைப் பிஞ்சு, மாதுளம்பழம், மாம்பழம், பலாப் பிஞ்சு, பலாக் காய், புடலங்காய், எலுமிச்சம்பழம், பசலை, அரைக்கீரை, கொத்துமல்லிக் கீரை, கோதுமை, ஜவ்வரிசி, உளுந்து, வெந்தயம், நிலக்கடலை.

தவிர்க்க வேண்டியவை:

அதிகக் காரம், துவர்ப்பு மற்றும் கசப்புள்ள உணவுகள், சிகரெட் மற்றும் போதைப் பொருட்கள்.

கண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி.!

கண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி.!

கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவது, மாத்திரைகள், காய்கறிகள் சாப்பிடுவது என்று எல்லோரும் பல முறைகளை கையா‌ள்வா‌ர்க‌ள்.

பொதுவாக க‌ண்க‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சி‌றிய ‌பிர‌ச்‌சினைகளை உடனடியாக ‌தீ‌ர்‌க்க வே‌ண்டியது‌ ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ஏனோ தானோ வெ‌ன்று ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல்தா‌‌ன் க‌ண் பா‌ர்வை‌க்கே ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌கிறது.

கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள், ஜாதிக்காயை பசும்பாலில் இழைத்து இரவில் கண்ணை சுற்றி பற்றுப் போட்டு காலையில் கழுவி விடவும்.

இதனுடன் திரிபலா சூரணத்தை தேனில் கலந்து உட்கொண்டு வர கண்பார்வை விரைவில் தெளிவடையும்.

கண் பார்வை சீராக இருக்க ஜாதிக்காய் பெருமளவு பயன்படுகிறது.மேலும், கண்ணை சுற்றி இருக்கும் கருவளையத்தையும் நீக்க இது போன்று ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம்.

நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.

திரிபலா

திரிபலா

இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் முக்கியம். அதைப்போல் நமது பிரச்சனைகளை சரியாகத் தீர்க்கும் விதமாக எதையும் கையாள வேண்டியுள்ளது. இதற்கு உடலும் உள்ளமும் முழுத் தகுதியுடன் இருந்தால் தான் இவை சாத்தியமாகும். உடலும் உள்ளமும் முழுத்தகுதியுடன் விளங்குவதற்கு, அன்றாட வேலைகளை ஒரு ஒழுங்கு முறையுடன் செய்து வர வேண்டும். முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையை உடலளவில் மிகவும் வசதியான முறையில் வாழ்கிறோம். ஆனால், மனதளவில் மிகவும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ்கிறோம். இத்தகைய வாழ்க்கை முறை சீக்கிரமாகவே முதுமையாக உணர வைத்து விடும் அல்லது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

திரிபலா என்றால் என்ன?

திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும்.

திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?

திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!!

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!!

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்

இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.