வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Tuesday, 27 August 2013

5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் பட்டா

இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் ஒருமுறை சிறப்பு திட்டத்தை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி குடியிருக்கும் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 5 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி குடியிருக்கும் ஏழைகள் அதற்கான ஆதாரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் கலெக்டர் தலைமையிலான குழு குடியிருப்பை புலத்தணிக்கை செய்து, அரசுக்கு தேவையில்லாத பட்சத்தில், உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதலோடு, விண்ணப்பித்தவருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க அக்குழு நடவடிக்கை  எடுக்கும். இத்திட்டத்தில் விண்ணப்பம் செய்வதற்கு வருமான உச்சவரம்பு இல்லை. தவிர ஊரக பகுதிகளில் 4 சென்ட், நகர் பகுதிகளில் இரண்டரை சென்ட், மாநகராட்சி பகுதிகளில் 2 சென்ட் என பயனாளிக்கு வழங்கப்படும். இத்திட்டம் கடந்த 2012 செப்டம்பர் 30ம் தேதியுடன் காலாவதியானது. இதையடுத்து இத்திட்டத்தை 2012 அக்டோபர் 1 முதல் 2013 மார்ச் 31 வரை நீட்டித்து தமிழக அரசு கடந்த மார்ச் 27ம் தேதி அரசாணை வெளியிட்டது. அரசாணை மிக காலதாமதமாக வெளியிடப்பட்டதால், ஏற்கனவே பெறப்பட்ட மனுக்கள் கூட வருவாய்த்துறை மூலம் பட்டா வழங்க முடியவில்லை.

இதையடுத்து மீண்டும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். தவிர சட்டசபையில் 2013,14ம் ஆண்டில் 2 லட்சம் வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என  முதல்வர் அறிவித்திருந்தார். இதையடுத்து இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் ஒருமுறை சிறப்பு திட்டத்தை ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை மேலும் 6 மாதங்களுக்கு காலக்கெடுவை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் 2007 ஜூன்1க்கு முன்பு, அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருப்பவர்களின் ஆக்கிரமிப்புகளை மட்டும் விதிமுறைகளின்படி, வரன்முறை செய்து பட்டா வழங்கலாம் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment