வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Sunday 1 December 2013

குடிநீரில் எலுமிச்சை சாறு சிறுநீரக கல்லை தடுக்கும்

குடிநீரில் எலுமிச்சை சாறு சிறுநீரக கல்லை தடுக்கும்

சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு நோயாளிகளுக்கு சிறுநீரக பாதிப்பு வர வாய்ப்பு அதிகம். இந்தியாவில் 5ல் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இதில் 30சதவீத நபர்களுக்கு சிறுநீரக நோய் வருகிறது. சிறுநீரக நோய்க்கான அறிகுறியை எளிதில் அறிய முடியாது. தற்காலிக சிறுநீரக செயலிழப்பு உள்ள 100பேரில் 60பேரை காப்பாற்றலாம்.

முற்றிய நோயாளிகளை தொடர் சிகிச்சை, டயாலிசிஸ் மூலம் குணப்படுத்தலாம். நாளொன்றுக்கு 180 லிட்டர் ரத்தத்தை சுத்தம் செய்து, அதில் 2லிட்டரை சிறுநீராக வெளியேற்றும் வேலையை நமது சிறுநீரகம் செய்கிறது. சிறுநீரகத்தை பாதுகாத்தால் இதய நோய்களை கட்டுப்படுத்தலாம் என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிறுநீரில் புரதச்சத்து வெளியாதல் நோயின் ஆரம்ப கட்ட அறிகுறியா கும். ரத்தத்தில் கிரியாட்டி னின் அளவு 1.4மி.கிராமிற்கு பதில், 1.5மி.கிராம் இருந் தால் அடுத்த 5ஆண்டுகளுக்குள் சிறுநீரக நோய் வர வாய்ப்பிருக்கிறது. எளிய பரிசோதனைகளான யூரின் அல்புமின், யூரியா, புரோட்டின் மூலம் சிறுநீரக பாதிப்பினை கண்டறியலாம். தினமும் 3லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது.

வெயில் காலம் என்ப தால் குடிநீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்தலாம். இதிலுள்ள சிட்ரேட் உப்பு சிறுநீரக கல் வருவதை தடுக்கும். தினம் 30நிமிடம் உடற்பயிற்சி அவசியம். ஆண்டுக்கு ஒருமுறை சிறு நீரக மருத்துவ பரிசோதனை வேண்டும்.

No comments:

Post a Comment