வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Sunday 1 December 2013

செல்போனிலுள்ள எண்களைக் கொண்டு தமிழில் தட்டச்சு – புதுகை தமிழர் சாதனை!

 
                    தற்போதும் கூட சில செல்போன் நிறுவனங்கள் தமிழில் குறுந்தகவல் அனுப்பும் வசதியைச் செய்திருந்தாலும் அதைப் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது. இதற்குத் தீர்வு காணும் வகையில் செல்போனில் உள்ள எண் விசைப் பலகையிலேயே தமிழில் தட்டச்சு செய்யும் புதிய முறையை புதுக்கோட்டையைச்    சேர்ந்த    டி. வாசுதேவன்    வடிவமைத்துள்ளார்.
புதுகோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் தனது உறவினருடன் சேர்ந்து கடந்த 2008 ஆம் ஆண்டு கைபேசியில் எளிதாக தமிழ் எழுத்துகளை டைப் செய்வதற்கான மென்பொருளை உருவாக்கினார்.    இதையடுத்து,   வெறும் எண்களாலேயே கணினி விசைப்பலகை மற்றும் கைபேசியில் தமிழில் தகவல்களை பாரிமாறி கொள்ளும் மென்பொருளுக்கான காப்புரிமையையும் பெற்றார்.

              விரைவில் இந்த சேவையை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறியுள்ள வாசுதேவன்,   http://www.easytype.in/    என்ற இணையதளம் மூலம் வரும் ஜனவரி 20-ம் தேதி வரை மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும்,   தமிழ் உட்பட மொத்தம் 16 மொழிகளில் பூஜ்யம் முதல் ஒன்பது வரையிலான நியூமரிக் வடிவில்தான் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், இந்த மென்பொருளை அதிக செலவில் உருவாக்கியுள்ளதாகவும், இந்த முயற்சிக்கு அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் வாசுதேவன்.

1450279_516967425065458_1727637895_n

No comments:

Post a Comment