வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Sunday 1 December 2013

குழந்தைகளை யாராவது பாலியல் துன்புறுத்தினால் என்ன செய்ய வேண்டும்?

health-child“நமது நாட்டில் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் தற்போது அதிகரித்து வருகிறது. பாலியல் பலாத்காரம் என்பது ஒரு குழந்தையை சொற்களாலோ, பார்வையாலோ, உடலில் தொட்டோ, பாலியல் செயல்களில் ஈடுபட்டோ கேடு விளைவிப்பதாகும். தமிழகத்தில் 3ல் 1 பெண் குழந்தைகளும், 5ல் ஒரு ஆண் குழந்தையும் இதன் மூலம் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற செயல்கள் வீடுகளிலும், பள்ளிக் கூடங்களிலும் அதிகமாக நடக்கிறது. பெற்றோர்கள் இதில் மிகவும் கவனமாக நடந்து கொள்ளவேண்டும்.”என பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ரேணுகா தெரிவித்தார்.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கான பத்து வயதுக்குள்பட்ட குழந்தைகள் மீதான வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் இம் மையத்தின் இயக்குநர் ரேணுகா பேசும் போது,”பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இந்திய அரசின் கணக்கெடுப்பின்படி 53 சதவீதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். அதில் 88.6 சதவீத குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே வன்முறைக்கு ஆளாகிறார்கள்.
இந்த கணக்கெடுப்பு வெளியானதும் குறிப்பிட்ட ஒரு குடிசைவாழ் பகுதியில் உள்ள பத்து வயதுக்குள்பட்ட 25 குழந்தைகளை வரவழைத்தோம். அவர்களுக்கு நல்ல தொடுதல் என்றால் என்ன, கெட்ட தொடுதல் என்றால் என்ன என்று விளக்கினோம். பின்பு அவர்களை தனியாக அழைத்து பேசியதில் 25-ல் 19 குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து குடிசைப்பகுதிகளில் உள்ள தாய்மார்கள், குழந்தைகள், பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் இதுகுறித்து தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறோம். ஒவ்வொரு தரப்பினரையும் சந்திக்கும்போது பல்வேறு வகையான வன்கொடுமைகள் குறித்து தெரிய வருகிறது.
குறிப்பாக கணவனை இழந்த பெண்களின் குழந்தைகளுக்கு அதிக பாலியல் வன்கொடுமை ஏற்படுவது தெரியவந்தது. மற்ற இடங்களை விட நகரங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகமாக உள்ளது.
குழந்தைகளை யாராவது பாலியல் துன்புறுத்தல் செய்ய விழைந்தால் அவர்களை 7 முறை தொடர்ந்து சத்தமிட கற்றுக்கொடுக்கிறோம். முதல் இரண்டு முறை குழந்தை சத்தமிடும்போது ஏதோ சத்திமிடுகிறது என்று அண்டை வீட்டில் உள்ளவர்கள் நினைப்பார்கள்.
மூன்றாம் முறை ஏதோ பிரச்னை என்று சுதாரிப்பார்கள். நான்காம் முறை அங்கு ஏதோ அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது என்பதை அருகில் இருப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். ஐந்தாம் முறை சத்தமிடும்போது குழந்தைகளை துன்புறுத்துபவனும் குழந்தையை விட்டு விலக முயற்சிப்பான். ஆறாம் முறை சத்திமிடும்போது அருகில் இருப்பவர்கள் தங்கள் இடத்தைவிட்டு குழந்தை இருக்கும் இடத்தை நோக்கி நகர்வார்கள்.
ஏழாம் முறை குழந்தை சத்தமிடும்போது அவர்கள் குழந்தையிடம் சென்றுவிடுவார்கள் என்ற கருத்தில் இவ்வாறு கற்றுக்கொடுத்து வருகிறோம்” என்றார் அவர்.

No comments:

Post a Comment