கார்
ஓட பெட்ரோல் தேவை. உலகில் உள்ள கோடிக்கணக்கான கார்களுக்குத் தேவையான
பெட்ரோலை பூமியிலிருந்து இன்னும் எவ்வளவு நாளைக்கு
உறிஞ்சிக் கொண்டிருக்க முடியும்? பெட்ரோல் தீர்ந்து போனால் என்ன செய்வது?
இந்த பெட்ரோல், டீசலால் ஓடும் வாகனங்கள் ஒவ்வொரு நாளும் வெளிவிடும்
புகை நமது வளி மண்டலத்தில் சேர்ந்து கொண்டே இருக்கிறதே, இதைத்
தடுப்பது எப்படி? ஓஸோன் மண்டலத்தில் பெரிய ஓட்டை விழுந்து விட்டால்,
மனிதர்கள் கருகிப் போய்விட மாட்டார்களா?
இப்படிப்பட்ட கேள்விகளும், கவலைகளும்தான் பெட்ரோலுக்கு மாற்றான எரிபொருளை, ஆற்றலைக்
கண்டுபிடிக்கத் தூண்டுபவை. தண்ணீரில் உள்ள ஹைட்ரஜனைப் பயன்படுத்தி ஓடும் கார்கள் வந்துவிட்டன. இந்த ஹைட்ரஜன் கார்களை மேலும் அதிகத் திறனுடன், அதிக சிக்கனத்துடன் எப்படி ஓட்டுவது? என்ற ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கண்டுபிடிக்கத் தூண்டுபவை. தண்ணீரில் உள்ள ஹைட்ரஜனைப் பயன்படுத்தி ஓடும் கார்கள் வந்துவிட்டன. இந்த ஹைட்ரஜன் கார்களை மேலும் அதிகத் திறனுடன், அதிக சிக்கனத்துடன் எப்படி ஓட்டுவது? என்ற ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அப்படிப்பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ஒரு மாதிரி காரை வடிவமைத்து,
இயங்கச் செய்யும் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில்
பங்குகொண்டு சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று வந்திருக்கிறார்கள்,
சென்னையைச் சேர்ந்த இரு மாணவர்கள். சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா
மந்திர் மேல் நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் அபிஷேக்கும்,
ரேஹானும்தான் அந்த மாணவர்கள்.
அவர்களிடம் பேசினோம்:
“”சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் நாங்கள்
படிக்கும் பள்ளிக்கு “ரோபாட்டிக்ஸ் லேர்னிங் சொலுயூஷன்ஸ்’ நிறுவனத்தினர்
வந்தனர். அவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், இயந்திரவியல், கணிதம்
ஆகியவற்றை மாணவர்களுக்குப் புதுமையான முறையில் கற்றுத் தருபவர்கள்.
எங்கள் பள்ளிக்கு வந்து ஒரு போட்டியை அறிவித்தார்கள். அதாவது,
ஹைட்ரஜனைப் பயன்படுத்தி பந்தயங்களில் கலந்து கொள்ளும் ஃபார்முலா
ஒன் அதி வேகக் கார்களின் மாதிரியை உருவாக்க வேண்டும் என்றார்கள். இதேபோல
சென்னையில் உள்ள பிற பள்ளிகளிலும் அறிவித்தார்கள்.
இரு மாணவர்கள் சேர்ந்தது ஒரு குழு என்ற அடிப்படையில் 21 குழுக்கள்
எங்கள் பள்ளியில் இருந்து அந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். அதில் வென்ற
ஒரு குழுதான் நாங்களிருவரும். இதேபோன்ற போட்டி உலக அளவில் சிங்கப்பூரிலும்
நடப்பதாகவும், அதில் கலந்து கொள்ள எங்களிருவரையும் தேர்ந்து
எடுத்திருப்பதாகவும் அறிவித்தார்கள். நாங்கள் அதில் கலந்து கொண்டோம்.
நாங்கள் தயாரித்த மாதிரி கார், பிற மாதிரி கார்களை விட அதி வேகமாக ஓடி,
எங்களுக்கு சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று தந்தது. ஆனால் இந்த வெற்றி
எளிதாகக் கிடைத்ததல்ல. நாங்கள் தொலைக்காட்சியில் டிஸ்கவரி சேனலைப்
பார்ப்போம். அப்படிப் பார்த்துக்கொண்டிருக்கும்போது லேசர் கட்டிங்
டெக்னாலஜி பற்றியும் 3 ஈ பிரிண்டிங் பற்றியும் தெரிந்து கொண்டோம்.
அப்போதிருந்து நாமும் இந்த லேசர் கட்டிங் டெக்னாலஜியைக் கற்றுக் கொள்ள
மாட்டோமா? 3 ஈ பிரிண்டிங் மூலம் ஏதாவது பொருளை உருவாக்க மாட்டோமோ? என்று
தோன்றிக்கொண்டே இருந்தது.
நாம் நினைக்கும் பொருளை கம்ப்யூட்டரில்
லேசர் கட்டிங் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைத்து, அதை 3 ஈ
பிரிண்ட் எடுத்தால், நாம் நினைத்த பொருள் நமக்குக்கிடைத்துவிடும். உதாரணமாக
ஒரு பாட்டிலை லேசர் டெக்னாலஜி முறையில் வடிவமைத்து, 3 ஈ
பிரிண்டிங் முறையில் பிரிண்ட் எடுத்தால், நமது கையில் அந்தப் பாட்டில்
வந்துவிடும். இப்படி எந்தப் பொருளை வேண்டுமானாலும் நாம் தயாரித்துக்
கொள்ளலாம்.
“ரோபாட்டிக்ஸ் லேர்னிங் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்தினர் எங்களுக்கு இந்தத்
தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொடுத்தார்கள். அதுமட்டுமல்ல, தண்ணீரில் உள்ள
ஹைட்ரஜனைப் பிரித்தெடுத்து, அதன் மூலம் மின்சாரம் தயாரித்து இயங்கும்
கார்களைப் பற்றிய அறிவையும் அவர்கள் எங்களுக்குக் கொடுத்தனர். அப்படி ஓடும்
கார்களை குறைந்த எரிசக்தியில் அதிக தூரம் ஓட வைப்பது எப்படி என்பதும்,
அதற்குப் பொருத்தமான வடிவத்தில் காரை வடிவமைப்பது எப்படி என்பதும் மட்டுமே
எங்களுக்கு முன் நின்ற பெரிய கேள்விகள்.
நாங்களிருவரும் அது தொடர்பான
ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு தயாரித்த மாதிரி காரை லேசர் கட்டிங்
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 3 ஈ பிரிண்டிங் உருவாக்கினோம். நாங்கள்
உருவாக்கிய மாதிரி கார் 3மி.லி. ஹைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி 30 மீட்டர்
தூரம் ஓடியது. இதற்குத்தான் எங்களுக்கு சாம்பியன்ஷிப்கிடைத்தது. இந்தக்
காரை எப்படி உருவாக்கினோம் என்பதை வீடியோ எடுத்து விளக்கினோம்.
அதற்கும் பரிசு கிடைத்தது. நாங்கள் தயாரித்த மாதிரி கார்களின்
அடிப்படையில் பெரிய கார்களைத் தயாரித்துப் பயன்படுத்த முடியும்.
அப்படிப் பயன்படுத்துவது அதிகரித்தால் இவ்வளவு பெட்ரோலும்
தேவைப்படாது, இவ்வளவு புகையும் காற்றில் கலக்காது, சுற்றுச்சூழல் இவ்வளவு மாசடையாது” என்றனர் ஒரே குரலில். அறிவியலிலும், கண்டுபிடிப்புகளிலும் ஆர்வமும் முயற்சியுமுடையஅந்த எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள்..
தேவைப்படாது, இவ்வளவு புகையும் காற்றில் கலக்காது, சுற்றுச்சூழல் இவ்வளவு மாசடையாது” என்றனர் ஒரே குரலில். அறிவியலிலும், கண்டுபிடிப்புகளிலும் ஆர்வமும் முயற்சியுமுடையஅந்த எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள்..
No comments:
Post a Comment