வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Tuesday, 21 May 2013

பல் சம்மந்தமான நோய்கள் தீர

 
ஆலமரப்பட்டையை மைபோல் இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் பல் நோய்கள் குறையும்.


  • பல் ஆட்டம்.
  • ஈறுகளின் தேய்மானம்.
  • பல்கூச்சம்.
  • வாய்நாற்றம்.
தேவையான பொருட்கள்:
  1. ஆலமரப்பட்டை.
  2. சர்க்கரை.
செய்முறை:
ஆலமரப்படையை மைபோல் இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் பல் நோய்கள் குறையும்.
 

கருவேலம் பட்டை, கிராம்பு, மென்தால் ஆகியவற்றை இடித்து சல்லடையில் சலித்து வைத்துக் கொண்டு காலை, மாலை பல் துலக்கி வந்தால் பல்வலி குறையும்.
அறிகுறிகள்:
  • பல்வலி.
தேவையான பொருட்கள்:
  1. கருவேலம் பட்டை.
  2. கிராம்பு.
  3. மென்தால்
செய்முறை:
கருவேலம் பட்டையை சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்து அதில் 30 கிராம் எடுத்து அதனுடன் 6 கிராம் கிராம்பு, மென்தால் சேர்த்து உரலில் போட்டு இடித்து சல்லடையில் சலித்து வைத்துக் கொண்டு காலை, மாலை பல் துலக்கி வந்தால் பல்வலி குறையும்.
 
பல் வலி ஏற்படும் போது சிறிது மிளகுத்தூளில் கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வந்தால் வலி குறையும்.

அறிகுறிகள்:
  • பல் வலி
தேவையான பொருள்கள்:
  1. மிளகுத்தூள்.
  2. கிராம்பு எண்ணெய்.
செய்முறை:
பல் வலி ஏற்படும் போது சிறிது மிளகுத்தூளில் கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வந்தால் வலி குறையும்.
 
முந்திரி மரத்தின் தளிர் இலைகளை பறித்து நன்றாக கடித்து சாப்பிட்டு வந்தால் பல் வலி குறையும்.
  • பல் வலி.
தேவையான பொருள்கள்:
  1. முந்திரி இலை.
செய்முறை:
முந்திரி மரத்தின் தளிர் இலைகளை பறித்து நன்றாக கடித்து சாப்பிட்டு வந்தால் பல் வலி குறையும்.

பல்லில் சீழ் வடிதல் குறைய
கருவேலம் மரப்பட்டைகள் எடுத்து எரித்து சாம்பலாக்கி நன்கு ஆற வைத்து அதில் சிறிது கடுகு எண்ணெய், உப்பு சேர்த்து பாதிக்கப்பட்ட பற்களை தேய்த்து வந்தால் பல் வலி, பல்லில் சீழ் வடிதல் குறையும். அறிகுறிகள்:
  • பல் வலி.
  • பல்லில் சீழ் வடிதல்.
தேவையான பொருள்கள்:
  1. கருவேலம் மரப்பட்டை.
  2. கடுகு எண்ணெய்.
  3. உப்பு.
செய்முறை:
கருவேலம் மரப்பட்டைகள் எடுத்து எரித்து சாம்பலாக்கி நன்கு ஆற வைத்து அதில் சிறிது கடுகு எண்ணெய், உப்பு சேர்த்து பாதிக்கப்பட்ட பற்களை தேய்த்து வந்தால் பல் வலி, பல்லில் சீழ் வடிதல் குறையும்.

சொத்தைப்பல் குறைய
இஞ்சி சாறுடன் தேன் கலந்து வாய் கொப்பளித்து குடித்து வந்தால் சொத்தைப்பல் குறையும்.

அறிகுறிகள்:
  • சொத்தைப்பல்.
  • பல்வலி.
தேவையான பொருட்கள்:
  1. இஞ்சி சாறு.
  2. தேன்.
செய்முறை:
இஞ்சியை தோல் நீக்கி  இடித்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து வாய் கொப்பளித்து குடித்து வந்தால் சொத்தைப்பல் குறையும்.

பல்ஆட்டம் குறைய
மகிழம்காயை எடுத்து  நன்றாக மென்று  அதை வாயில் அடக்கி வைத்திருந்தால் பல்ஆட்டம் குறைந்து பல் உறுதிபடும்.

  • பல்ஆடுதல்.
  • பல்வலி.
தேவையான பொருட்கள்:
  1. மகிழம்காய்
செய்முறை:
மகிழம்காயை எடுத்து நன்றாக மென்று அதை வாயில் அடக்கி வைத்திருந்தால் பல்ஆட்டம் குறைந்து பல் உறுதிபடும்.
 
பற்பொடி தயாரிக்க
ஆலம் விழுதுகளிப்பாக்கு

தேவையான பொருட்கள்:

  1. சீமைக் கல்நார்-500 கிராம்
  2. வேப்பம் பட்டை-100கிராம்
  3. கருவேலம் பட்டை-100கிராம்
  4. ஆலம் விழுது-50 கிராம்
  5. கடுக்காய் தோல்-50 கிராம்
  6. கிராம்பு-50 கிராம்
  7. களிப்பாக்கு-50 கிராம்
  8. படிகாரம்-50 கிராம்
  9. சோற்று உப்பு-50 கிராம்
  10. எலுமிச்சம் பழச்சாறு.
செய்முறை:
  • சீமைக் கல்நாரை ஒரு மண் சட்டியில் போட்டு 50 கிராம் சோற்று உப்பை 4 லிட்டர் நீரில் கரைத்து அதில் ஊற்றி 3 நாட்கள் மூடி வைத்து கல்நாரைக் கழுவி உப்பு நீரை நீக்கி அதில் 250 மி.லிட்டர் எலுமிச்சம் பழச்சாற்றில் 750 மி.லிட்டர் தூய நீர் கலந்து ஊற்றி கல்நாரைப் போட்டு 2 நாள் கழித்து கல்நாரை எடுத்து தூய நீரில் கழுவி உலர விட்டு மாப்போல இடித்துக் கொள்ளவும்.
  • வேப்பம் பட்டை, கருவேலம் பட்டை, ஆலம் விழுது, கடுக்காய்த் தோல், கிராம்பு, களிப்பாக்கு இவைகளையும் இடித்து வடிகட்டி கல்நாருடன் சேர்க்கவேண்டும். படிகாரத்தையும் இடித்துப் போட்டு கடைசியாக சோற்று உப்பை மண் சட்டியில் வறுத்து இடித்துப் போட்டு நன்றாகக் கலந்து 3 நாட்கள் மூடி வைத்திருந்து பின்பு பயன்படுத்த வேண்டும்.
தீரும் நோய்கள்:
  • பல் வலி, பூச்சி, பல் கூச்சம், வாய் நாற்றம், பல் அரணை, சீழ் வடிதல், ஈறு வடிதல், ஈறு தடித்தல், பல் துட்டம் நீங்கும், பல் சுத்தமாகும் ஆகிய நோய்கள் குறையும். பற்கள் பலமாகும்.
குறிப்பு:
  • பல் நோயுடையவர்கள் காலை, பிற்பகல், இரவு  ஆகிய மூன்று வேளைகள் பல் துலக்கலாம்.
 

No comments:

Post a Comment