வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Monday, 27 May 2013

கைக்கூ கவிதைகள்

கவர்ச்சி:

நோட்டு புத்தகத்திலும் கவர்ச்சி !
வீட்டு மெத்தையிலும் கவர்ச்சி !
ரோட்டு ஓரத்திலும் கவர்ச்சி !
உடுத்தும் ஆடையிலும்  கவர்ச்சி !
கையெடுத்து கும்பிடும்  கடவுளிலும் கவர்ச்சி !
ஆனால் ,
விலங்கோடு விலங்காய் காட்டில் சுற்றி திரிந்த 

காட்டு வாசியிடமோ காணாமல் போயிருந்தது கவர்ச்சி ! 

அன்னையின் அன்பு -
தினமும் சாப்பிடுவது 
மூன்று முறை என்றாலும் 
தவறாமல் தினமும் நூறு முறை 
அன்புடன் விசாரிக்கும் 
அன்னையின் அன்பு 
பசிக்கும்போது மட்டுமே தெரியும் சிலருக்கு......  

தேவதை
மொட்டையா இருந்து, 
குட்டியா இருந்து, 
இறக்கை இருந்தா, அது - ஈ; 

கைகால் வைச்சு, முடி வைச்சு, 
உயரமா இருந்தா, அது - இளம்பெண்;

கைகால் வைச்சு, முடி வைச்சு,
உயரமா இருந்து, பள பள ஆடை உடுத்தி
இரண்டு பக்கமும் இறக்கையும் 
வைச்சிருந்தா, அது - தேவதை;

கொலுசுக்கு நன்றி  

கால் கொலுசுக்கு நன்றி . 
மௌனமாய் நடந்து வரும் 
என்னவளின் வருகையை 

அறிவித்ததற்கு...

அழிவில்லா பிளாஸ்டிக் சொன்னது

சத்தமில்லா ஒரு கொலைத் திட்டம் 
சின்னத் சின்னத் துண்டுகளாக வெட்டினேன் ! 

நெருப்பில் நெஞ்சு ஆறும் வரை எரித்தேன் 
அவன் சாகவில்லை சிரித்தான் ! 

அமிலப் வேதிப் பொருளை உடல் முழுதும்
படர ஊற்றினேன் - மீண்டும் சிரித்தான் !

இறுதியில் அகல பாதள குழி தோண்டி புதைத்தேன்
அவன் மூச்சு முட்ட, ஆண்டுகள் சில‌ உருண்டோட
அவாவில் மீண்டும் தோண்டினேன் !

அவன் நிலை காண அவனோ எனைப் பார்த்து ஏளனமாய்
சிரித்து சொன்னான் , எனக்கு சாவில்லைடா 

என் பெயர் "நெகிழி" (ப்ளாஸ்டிக்) !

புத்தம்

நான் ஒரு திறந்த புத்தகம் என்றேன் 
என்னை நீ எளிதில் புரிந்து கொள்ள 

ஆனால் நீயோ என்னை எளிதில் படித்து விட்டாய் 

படித்ததோடு அல்லாமல் பழையது என்று தூக்கியும் எரிந்து விட்டாய்

மறு சுழற்சி முறையிலாவது உன்னுடன் இணைநது விட காத்திருக்கிறேன்

நீ வீசி எறிந்த இடத்திலேயே

எப்போது வருவாய் என்னை 

எடுத்து செல்ல..  

காதல் - 

உனக்காக நான் 
அழைந்து திரிந்ததற்கு 
சாட்சி ஒன்றும் தேவையில்லை 
என் வீட்டு மூலையிலிருக்கும் 
என் தேய்ந்த செருப்புகள் சொல்லும் 

என் காதலை உனக்கு!!! 

 அரசியல்வாதி

தீவிரவாதத்தால் நாடே 
எரிந்து சாம்பலானாலும் -- அந்த 
சாம்பலையும் விற்று 
சம்பாத்தியம் தேடும் 
சாமர்த்தியசாலி !
அரசியல்வாதி ! 

மறக்காதே 
பேசாமல் கொள்ளாதே 
என்னை பார்க்காமல் விலகி செல்லாதே 

அன்பே என்னை அடியோடு மறக்காதே 
உன் அடிமனதில் நான் இருப்பதை மறைக்காதே 

மழைதேடும் மணல் போல்
உன் மனம்தேடும் என்னை மறக்காதே ....

காதல்

தூங்காத விழிகளே... 
துயரம் என்ன நெஞ்சிலே 
காதல் சிந்தும் கண்ணீர் 
காவியங்கள் ஆகும் 
காலப்போக்கில் சோகம் 
கலைந்து போகும் மேகம்
காதலும் கடவுளும்
உணரும் போது புரியும்
இனம் புரியாத கனவுகளில்
இதயங்கள் ஏங்குவதோ
காதல் காதல் காதல் காதல்
கரையில்லாத மனது
அது சேர்த்து வைக்கும் நினைவு
காலம் உள்ள வரையில் அது
கலைத்திடாத உறவு
கரைகின்ற உள்ளங்களே
நீங்கள் கரையேறி நில்லுங்களேன்
விடியவில்லை இறவா?
உங்கள் விழியில் நூறு கனவா
கடலில் தோன்றும் அலைகள்
என்றும் ஓய்ந்து போவதில்லை
அழித்தாலும் அழியாதது 
காதல் பிரித்தாலும் பிரியாதது....  

உன் நினைவு 
வீட்டை விட்டு 
படியிறங்கும் போதெல்லாம் 
பார்த்து போ என்கிறாள் அம்மா, 
கவனம் என்கிறார் அப்பா, 
பத்திரம் என்கிறாள் அக்கா ,
அனைவரும் வெறும்
வார்த்தைகளால் வழியனுப்பும் போது
வெளியே செல்ல எத்தனித்து
காலணிகளை மாட்டும்
தந்தையின் இடுப்பை கட்டிக்கொண்டு
உடன் வர துடிக்கும்
மழலை போல
என் விரல் பிடித்து
எனக்கு துணையாக
மெல்ல உடன் வருகிறது 
உன் நினைவுகள்...

புன்னியம்

ஆண்டவா 
நீ பிரபஞ்சம் 
முழுவதும் 
பரவிக்கிடப்பவன் 
அல்லவா ? 

உனக்குமா
தெரியவில்லை
போலி எது அசல்
எது என்று ?

தெரிந்தும் சும்மா
இருக்கிறாயா ?

உன் பெயர் சொல்லி
கெட்ட வழியில்
செல்லும் இவர்களை
நீ தண்டிக்க
மாட்டாயா ?

அப்படிபட்டவர்களை
இவ்வுலகில்
இல்லாமல் செய்.

உனக்கு புண்ணியமாக 
போகட்டும்... 
  

No comments:

Post a Comment