எக்காரணம் கொண்டும் பருக்களை தடவுவது, கிள்ளுவது, அழுத்துவது இவற்றை செய்யாதீர்கள்.
( இல்லை என்றால் படத்தில் உள்ளது உங்களுக்கும் இருக்கும் )
ஊசியால் குத்தி உள்ளிருக்கும் சீழை வெளியே கொண்டு வர முயற்சிக்காதீர்கள். பருக்களை கிள்ளுவதால் அவை மேலும் பரவும். வடுக்களும், தழும்புகளும் ஏற்படும்.
கையால் அடிக்கடி முகத்தை (பருக்களை) தொட வேண்டாம். கைகளிலிருந்து கிருமிகள் முகத்தில் பரவும்.
தினமும் ஒரு தடவையாவது குளிக்கவும். முகத்தை தினமும் 3 முறை கழுவ வேண்டும். சோப்பை தவிர்க்கவும். அதற்கு பதிலாக – ஒரு தேக்கரண்டி கடலை மாவு, ரோஜா பன்னீர் சில துளிகள், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி இவற்றை கலந்து, முகத்தில் தடவி, வெந்நீரால் கழுவவும். சோப்பு தான் உபயோகிப்பேன் என்றால் மிருதுவான மூலிகை சோப்புகளை பயன்படுத்தவும். முகத்தை துடைக்க மிருதுவான துவாலையை பயன்படுத்தவும். முகத்தை முரட்டுத்தனமாக துவாலையால் தேய்க்காதீர்கள். உடலையும், சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைக்கவும்.
கூடிய மட்டும் ரசாயன அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இயற்கையான சந்தன தைலம், பாலாடை, வெள்ளரி (அ) எலுமிச்சம் சாறு, முல்தானி மட்டி போன்றவற்றை உபயோகிக்கவும். ஆயுர்வேதம் சர்ம ஆரோக்கியத்திற்கு பரிந்துரைப்பது வேப்ப இலைகளை தான் .
தலை முடியையும் கவனியுங்கள். பொடுகு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது தலைக்கு குளித்து, முடியை அலசவும்.
டென்ஷன், ஸ்ட்ரெஸ்- இவை முகப்பருக்களை தோற்றுவிக்கும். எனவே இவற்றை குறைக்க முயற்சிகளை மேற்கொள்ளவும்.
உடற்பயிற்சி, தியானம், யோகா, உடல் பருமனை குறைத்து, டென்ஷனை போக்கும்.
உணவு பத்தியம் அவசியம். கொழுப்பு செறிந்த உணவுகள், இனிப்புகள், ஊறுகாய் முதலியவற்றை தவிர்க்கவும்.மலச்சிக்கலை போக்கவும்.
சிகிச்சைக்கு எளிமையான வழி: –
வேப்பமர வேர்களை தண்ணீரில் ஊற வைத்து, இந்த தண்ணீரை பருக்களின் மேல் தடவவும். 30 அல்லது 40 வேப்ப இலைகளை 1 லிட்டர் தண்ணீரில் காய்ச்சி பாதியாக குறைக்கவும். இந்த கஷாயத்தை தினமும் 3 மேஜைக்கரண்டி அளவில் குடித்து வரவும். வேப்பிலை நீரால் தினம் முகத்தை கழுவினால் தழும்புகள் மறையும்.
கற்றாழை சோற்றை தினமும் இரு வேளை பருக்களின் மேல் தடவி வரவும் இதை உள்ளுக்கும் கொடுக்கலாம். கற்றாழை சாற்றுடன் தேன் கலந்து தடவ, பருக்களால் ஏற்படும் தழும்புகள் மறையும். கற்றாழை சாற்றை நேரடியாக உட்கொள்ள வேண்டாம். சிறிது நீர் சேர்த்து உட்கொள்ளவும்.
கறிவேப்பிலை இலைகளை அரைத்து, களிம்பாக்கி, அதை பருக்கள் மேல் இரவில் பூசி, காலையில் சுடுநீரால் கழுவவும். இதே போல் வெந்தய கீரை மற்றும் புதினா இலைகளையும் கொத்தமல்லி இலைகளையும் உபயோகிக்கலாம்.
தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்கவும். சர்மத்திற்கு நீர்மச்சத்து அதிகமாக கிடைக்கும்.
ஒரு கிண்ணத்தில் சுடுநீரை எடுத்து அதில் 1 தேக்கரண்டி உப்பை போட்டு கரைக்கவும். துவாலையால் இந்த நீரை நனைத்து எடுத்து முகத்தில் பருக்களின் மேல் ஒத்திக்கொள்ளவும். 10 நாளில் பலன் தெரியும்.
பழுத்த தக்காளி பழ கூழை பருக்களின் மேல் தடவி, 1 மணி நேரம் கழித்து கழுவி விடவும்.
ஐந்து கிராம் வெந்தயத்தை நீர் சேர்த்து அரைத்து பருக்களின் மேல் தடவவும். 1 மணி நேரம் கழித்து கழுவவும்.
பூண்டை நசுக்கி முகப்பருக்கள் மீதும், அவற்றை சுற்றியும் தேய்க்கவும். அடிக்கடி செய்து வர, பருக்கள் மறையும்.
இலவங்கப்பட்டை பொடி ஒரு டீஸ்பூன் எடுத்து, 3 மேஜைக்கரண்டி தேனுடன் கலந்து, இரவு படுக்கும் முன் முகத்தில் பருக்களின் மேல் தடவிக் கொள்ளவும். மறுநாள் காலையில் கழுவி விடவும். இரண்டு வாரம் இதை செய்யவும்.
முல்தானி மட்டி 2 மேஜைக்கரண்டி- எடுத்து, சிறிது கற்பூரம், ரோஜா பன்னீர், 5 கிராம்புகளுடன் சேர்த்து களிம்பு – கலவையாக செய்து கொள்ளவும். தினமும் பருக்களின் மேல் தடவி, நன்கு உலர்ந்த பிறகு குளிர்ந்த தண்ணீரில் கழுவி எடுக்கவும். 10 நாட்கள் செய்து வரவும்.
ஜாதிக்காய் பொடி, கருமிளகு பொடி, சந்தனப் பொடி – இவற்றை சம அளவில் எடுத்து, களிம்பாக்கி பருக்களின் மேல் தடவவும்.
ஒரு கப் பாலுடன் ஒரு கப் எலுமிச்சை சாற்றை கலக்கவும். இதை காலையில் தயார் செய்து கொண்டு, இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவிக் கொள்ளவும் மறுநாள் காலையில் துவாலையால் துடைத்து எடுக்கவும்.
ஒரு கிண்ணத்தில் கொதிக்கும் நீரில் மஞ்சள் பொடி (அ) துளசி இலைகளை போடவும். எழுந்து வரும் ஆவியை, முகத்தை துவாலையால் மூடிக் கொண்டு நுகரவும். முகத்தின் நுண்ணிய துவாரங்கள் நீராவியால் சுத்தமாகும். ஆவி பிடித்த உடன் துவாலை முகத்தை நன்றாக துடைத்து விட்டுக் கொள்ளவும். இந்த ‘ஆவி’ பிடிப்பதால் சருமத்துவாரங்கள் விரிவடைவதை விட வேறு பயனில்லை, சேபச் சுரப்பிகள் அதிகமாக சுரக்கச் செய்கிறது. என்று சில ஆயுர்வேத வைத்தியர்கள் கருதுகின்றனர். ஆவி பிடித்தவுடன் ஐஸ் கட்டிகளால் முகத்தை தடவிக் கொள்ளலாம். இதனால் முக சரும துவாரங்கள் மறுபடியும் மூடிக்கொள்ளும்.
கேரட் ஜுஸையும் வெள்ளரிசாற்றையும் கலந்து அல்லது தனியாகவே முகப் பருக்களின் மேல் தடவலாம்.
பாதாம் எண்ணை பொதுவாகவே சர்மத்தை பாதுகாக்கும். இரண்டு மூன்று பாதாம் கொட்டைகளை அரைத்து தினமும் முகத்தில் தடவி வந்தால் பருக்கள், அதனால் உண்டான தழும்புகள் மறையும்.
இளநீர் பருத்தழும்புகளை போக்க வல்லது. தினமும் காலையிலும் மாலையிலும் முகத்தில் தடவிக் கொள்ளவும். நன்கு உலர்ந்ததும், தண்ணீரால் கழுவி விடவும்.
சந்தனம், வெட்டி வேர்- இவற்றின் பொடியை முகத்தில் தடவலாம் அதே போல்.
தழும்புகள் மறைய மஞ்சள் பொடியை தேனிலும், பாலிலும் குழைத்து பூசிக் கொள்ளவும்.
அதே போல் லோத்ர + தனியா பொடி கலவை செய்து தடவிக் கொள்ளலாம்.
சந்தனப் பவுடர் 1 டீஸ்பூன் + இரத்த சந்தனப் பொடி 1 டீஸ்பூன் + வேப்பிலை பொடி – 1/2 டீஸ்பூன் + முல்தானி மட்டி 3 டீஸ்பூன் இவற்றை ரோஜா பன்னீரில் குழைத்து பருக்களின் மீது தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.
லோத்ரா பட்டை, தனியா, வசம்பு இவற்றை அரைத்து, களிம்பு முகத்தில் 7 நாட்கள் தடவி வரவும்.
பருக்களினால் ஏற்படும் தழும்பை நீக்க – மசூர்தால் பருப்பு பால், கற்பூரம், நெய் இவற்றுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவிக் கொள்ளவும்.
கோரோசனை, மிளகு இவை இரண்டையும் அரைத்து பூசினால் முகப்பரு மறையும்.
முல்தானி மட்டி, பன்னீர் சேர்த்து செய்த களிம்பை முகத்தில் தடவி 20 நிமிடம் வைக்கவும். பிறகு முகத்தை வெந்நீரில் கழுவவும்.
பருக்களை போக்க இதர கலவைகள் தண்ணீரில் ஜாதிக்காயை அரைத்து பருக்களின் மேல் தடவலாம்.
சந்தன பொடியை பன்னீருடன் சேர்த்து பருக்களின் மேல் தடவலாம்.
சந்தன தைலம் + அதை போல் இரண்டு பங்கு கடுகு எண்ணை
லோத்ரா மரப்பட்டை பொடி + தனியா பொடி
சந்தன பொடி + சிவப்பு சந்தன பொடி + வசம்பு
5 கிராம் ஜீரக களிம்பு – 1 மணி நேரம் விடவும்
உலர்ந்த துளசி இலைகள் + நீர் – இதை 1 மணி நேரம் விடவும். இதை தினமும் செய்யலாம்.
கடலை மாவு + மஞ்சள் பொடி + உலர்ந்த பொடித்த வேப்ப இலைகள் + பால் இந்த கலவையை முகத்தில் 30 நிமிடம் இருக்க விடவும். பிறகு சீயக்காய் பொடி கொண்டு முகத்தை கழுவவும்.
தினமும் இரவில் பருக்களின் மேல் புதினா சாறை தடவலாம்.
தினமும் இரு வேளை அரை கப் கற்றாழை சாறை குடித்து வரவும்.
மலச்சிக்கலை தவிர்க்கவும்.
முகப் பருக்களுக்கு வெறும் வெளிப்பூச்சுகள் மட்டும் போதாது. முழு குணம் அடைய உள்ளுக்கும் மருந்துகள் சாப்பிட வேண்டும்.
அடிக்கடி ஆயுர்வேத முறையில் உடலில் இருந்து கழிவு மற்றும் நச்சுப் பொருட்களை வெளியேற்ற வேண்டும்.
நெல்லிக்காய், கதுப்பை விதை இல்லாமல் அரைத்து களிம்பாக முகத்தில் பூச பருக்கள் மறையும்.
தனியா, வசம்பு, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பாச்சோடி
முகப்பரு உள்ளவர்களுக்கு ஏற்ற மாஸ்க்
முட்டை வெள்ளையுடன் கலந்த தேன் + ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு + முல்தானி மட்டி சேர்ந்த கலவை நல்லது. கிராம்பு, யூகலிப்டஸ், சந்தனம். இவைகளிலிருந்து எடுக்கப்பட்ட கஷாயத்தையும் உபயோகிக்கலாம். இந்த கலவைகளை குறைந்த பட்சம் அரை மணி நேரம் முகத்தில் வைத்திருக்க வேண்டும்.
சில ஆயுர்வேத மூலிகைகள்:-
கற்றாழை – பல அழகு சாதனங்களில், குறிப்பாக மூலிகை சாதனங்களில், கற்றாழை முக்கியமாக சேர்க்கப்படுகிறது. பருக்கள் விட்டுச் செல்லும், விகாரமான தழும்புகள் போக்கும். முக அழகுக்கு இன்றியமையாத மூலிகை.
மருதம் – முகத்தில் வரும் பருக்களை போக்க வல்லது.
சந்தனம் சர்மத்திற்கேற்ற, குளுமை ஊட்டும் குணமுடையது நறுமணமான சந்தனம். ரத்தத்தை சுத்திகரிக்கும். பருக்களை போக்கும்.
பாதாம் சர்மத்திற்கு சத்துணவு. மலச்சிக்கலை போக்குகிறது.
மஞ்சள் கிருமிநாசினி. பருக்கள் உள்பட பல தோல் வியாதிகளுக்கு மருந்து
நாவல் பழம்- இதன் விதைகளை தண்ணீரில் அரைத்து பருக்களின் மேல் தடவினால் பருக்கள் மேலும் வளராது. இதில் உள்ள அமிலம் பருக்களின் அல்கலின் சீழை நீக்கி விடும்.
கற்பூரம் குளுமையானது. எனவே பருக்களின் நமைச்சலை குறைக்கும்.
லோத்ரா- பெண்களுக்கேற்ற டானிக் ஆன லோத்ரா, மலச்சிக்கலை அகற்றும். பருக்களின் பக்க விளைவாக ஏற்படும் சொறி, சினைப்புகளை தவிர்க்கும்.
பப்பாளி பழக்களிம்பை பருக்கள் மீது தடவலாம். பப்பாளி பழம் மலச்சிக்கலை போக்கும் இதனால் பருக்கள் ஏற்படுவது குறையும். பப்பாளி ரத்தத்தையும் சுத்தீகரிக்கும்.
புதினா குளிர்ச்சி தரும் புதினா, அழற்சியை தவிர்க்கும். புதினா இலைகளை அரைத்து முகத்தில் நன்றாக தேய்த்து ஊறி விட்ட பின் கழுவவும்.
ஆரஞ்சு ஆரஞ்சுத்தோலில் உள்ள எண்ணை பருக்களில் சீழை உண்டாக்கும் பேக்டீரியாவை அழிக்கும்.
கடுகு மலச்சிக்கலை போக்குவதால், பருக்கள் வராமல் தடுக்கும்.
வசம்பு இதன் எண்ணை பாக்டீயாவை எதிர்க்கும். பருக்களால் ஏற்படும் அரிப்பு – வலிகளை குறைக்கும்.
ரோஜா பன்னீர் – குலாப் ஜல் எனப்படும் சுத்தமான பன்னீரால் முகத்தை கழுவி வந்தால் அழற்சி குறையும்.
மஞ்ஜிஷ்டா பருக்கள் முகச்சுருக்கங்கள் இவற்றை தவிர்க்கும். முகம் பொலிவடையும்.
மேலும் சில மருந்துகள் ,உணவு முறைகள்:-
ஏக்னேயை போக்க ஒரு வழி சிகிச்சை போதாது. சரும பராமரிப்பு, மருந்துகள், உடற்பயிற்சி மற்றும் உணவு முறை மாற்றங்கள் இவையெல்லாம் இணைத்து முழு சிகிச்சை முறை மேற்கொள்ள வேண்டும். உணவு பத்தியம் அவசியம்.
கபப்பிரகிருதிகளுக்கு பால் சார்ந்த உணவுகள், கொட்டைகள், கொழுப்புகள் ஒத்துக் கொள்ளாமல் போகலாம். பொதுவாகவே, குறிப்பாக பருக்கள் ஏற்பட்ட நிலையில், கொழுப்புச் செறிந்த உணவுகள், அப்பளம், ஊறுகாய், சாக்லேட், வனஸ்பதி முதலியவற்றை தவிர்க்கவும். ஒன்றுக்கொன்று ஒவ்வாத உணவுகளை சேர்த்து உண்ணக் கூடாது. இனிப்புகள், காரசாரமான உணவுகள் வேண்டாம். கீரைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். முடிந்த வரை பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.
உடற்பயிற்சி பல வகைகளில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையை பயக்கும். இரத்த ஓட்டம் சீராவதால், உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். மனரீதியான ஸ்ட்ரெஸ் வராமால் உடற்பயிற்சி யோகா உதவும். மனம் ஆரோக்கியமாக இருந்தால் முகமும் ‘பளிச்’ சென்றிருக்கும். அடிக்கடி உணர்ச்சி வசப்படுவது, கோபதாபங்கள் உள்ளத்தை மட்டுமல்ல, உடலையும் பாதிக்கும்.
சர்மத்தை பாதுகாத்து பருக்களை போக்க பல வழிகள் மேலே சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றை கடைப்பிடிக்க முடியாமல் போனால் கீழ்க்கண்ட எளிமையான முறைகளையாவது செய்து வரவும். இதனால் முகப்பருக்கள் வராமல் தடுக்கலாம்.
தினமும் முகத்தை 3 முறை கழுவவும். ஒரு தேக்கரண்டி கடலை மாவு, சில துளிகள் பன்னீர், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, இவற்றை குழைத்து, பூசி முகத்தை கழுவவும். முகம் கழுவ வெந்நீரை உபயோகிக்கவும்.
இரவில் பாதம் பருப்பை ஊற வைத்து, காலையில் சந்தனப் பொடி சேர்த்து அரைத்து, இந்த களிம்பை முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து கழுவவும்.
வெந்நீரில் வேப்ப இலைகளை ஊற வைத்து, முகம் கழுவ அந்த நீரை பயன்படுத்தவும். துளசி இலைகளையும் இதே போல் பயன்படுத்தலாம்.
ஆயுர்வேத மருந்துகளான குங்குமாதி லேபம், ரத்தத்தை சுத்திகரிக்கும்.
சாரிபாதியசவம் நல்ல பலன்களை தரும். இவை தவிர பல உயர்ந்த ஆயுர்வேத மருந்துகள், இயற்கையாக, பக்கவிளைவுகளின்றி, பருக்களை போக்க, கிடைக்கும்.
விட்டமின் ஏ குறைபாடுகள் மட்டுமன்றி, விட்டமின் இ குறைவும்
பருக்களை உண்டாக்கலாம். முளை கட்டிய தானியங்கள், கீரைகள் பழங்கள், கேரட் இவற்றில் உள்ளன.
இந்த முகப்பரு 79 லிருந்து 95 சதவிகித யுவதிகளையும், இளைஞர்களையும் பாதிக்கிறது. தோன்றிய பின் சிலருக்கு மறைந்து போகலாம். பலருக்கு தீராத தழும்பையும், மனவேதனையும் தரலாம். முகப்பருக்களின் மனோரீதியான பாதிப்பை அலட்சியப்படுத்த முடியாது. எந்த வயதில் தங்களின் அழகு அதிகபட்சமாக மிளிர வேண்டும் என்று இளம் பெண்கள் விரும்புகிறார்களோ அந்த காலத்தில், பருக்கள் தோன்றி எதிர்மாறான விளைவுகளை உண்டாக்குகின்றன. எனவே பருக்களுக்கு தகுந்த சிகிச்சை பெறுவது அவசியம்.
No comments:
Post a Comment