வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Tuesday, 21 May 2013

பெண்களுக்கான அழகு குறிப்பு

அழகான பாதத்திற்குதினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம் செய்யவும்.

இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம்.

பிறகு பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய டவலால் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம். APR9கண்ணுக்கு கீழ் உள்ள கருப்பு வளையம் மறைய*சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இந்த பிரச்சினை தான் பெண்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து கொள்ளவும்.

*ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்க வேண்டும். இப்படி முப்பது நிமிடம் இருக்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது.

*கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். APR9கழுத்து பராமரிப்புசிலருக்கு நகைகள் அணிவதால் கழுத்தில் கருவளையம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதைப்போக்க

*கோதுமை மாவில் வெண்ணையை கலந்து கழுத்தைச் சுற்றிப் பூசி வர வேண்டும்.. பின் 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இப்படி தொடர்ந்துதினமும் செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் படிப்படியாக மறைந்து விடும்.

*சிறிது சூடாக்கப்பட்ட நல்லெண்ணெய்யினால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் கழுத்து பகுதியில் உள்ள சுருக்கம், கறுப்பு வளையம் படிப்படியாக நீங்கி விடும். APR9காது பராமரிப்பு*பெண்களின் அழகை ஜொலிக்க வைப்பதில் காதுகளுக்கும் அதிக பங்கு உண்டு. ஆனால் நம்மில் பலர் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை காதுகளுக்கு கொடுப்பதில்லை.

*இதனால் முகம் பளபளப்பாக இருந்தாலும் காதுகள் இரண்டும் முக அழகை கெடுத்து விடும். காதுகள் அழுக்கடைந்து பார்ப்பதற்கு அகோரமாக காட்சி அளிக்கும்.உங்கள் காதை ஜொலிக்க வைக்க இதே யோசனை உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும்.

*15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்தமாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகி விடும். APR9சருமத்தை பாதுகாக்க சில விதி முறைகள்*இடுப்பில் இறுக்கமாக ஆடை அணிவதால் இடுப்பைச் சுற்றி கறுப்புத் தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும்.

*காய்ப்பு, தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணையை தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக இடுப்புக் காய்ப்புத் தழும்பு மறந்து விடும். APR9உடையும், அலங்காரமும்நடைமுறையில் இன்றைய பெண்கள் பேஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மேலும் தங்களுக்கு ஏற்ற உடை, ஆபரணம், மற்றும் கலர் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள். அவர்களுக்காக இதே சில டிப்ஸ்:;

*உயரமாகவும், ஒல்லியாகவும் உள்ள பெண்கள் குறுக்கே கோடுகள் போட்ட உடைகளையோ அல்லது பெரிய டிசன்கள் உள்ள உடைகளையோ அல்லது பெரிய பார்டர்கள் போட்ட உடைகளை அணிந்ததால் பார்க்க அழகாக இருக்கும். APR9நீங்கள் அழகான தோற்றம் அளிக்க*பொதுவாக பெண்கள் எல்லோருமே தங்களை ஸ்லிம்மாகக் காட்டிக் கொள்ளத்தான் மிகவும் விரும்புவார்கள். அதற்கு மிகவும் சிறந்தது டார்க் கலர்தான். லைட் கலர்கள் ஒரு ஸ்லிம்மான பெண்ணைக் கூட கொஞ்சம் குண்டாகக் காட்டும். எனவே ஸ்லிம்மான பெண்கள் லைட் கலர்கள் உடைகளை உடுத்த வேண்டாம்.

*மிகவும் உயரமான பெண்கள் மிகவும் உயரமான கொண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. சிறிது குள்ளமான பெண்கள் கொண்டையச் சிறிது கூர்மையாகவும், உயரமாகவும் போட்டுக் கொண்டால் பார்க்க அழகாக இருக்கும். APR9அழகு ஒப்பனை முறைகள்பெண்கள் அழகின் மீது அதிக அக்கறை காட்டுகின்றனர். இதற்காக பியூட்டி பார்லர் சென்று தங்கள் அழகை மெருகேற்றிக் கொள்கின்றனர். இதனால் அதிக பணம் செலவாவதுடன், ரசாயனம் கலந்த `க்ரீம்'களால் `அலர்ஜி'யும் ஏற்படுகிறது. எனவே, வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மென்மையான சருமத்தை எப்படிப் பெறுவது என்பதை இங்கே பார்க்கலாம்:

* மஞ்சள்தூள், சந்தனத்தூள், ஆலிவ் எண்ணை கலவையை உடல் முழுவதும் பூசி, 10 நிமிடங்களுக்குப் பிறகு குளிக்க வேண்டும். இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவை செய்து வர சருமம் மென்மை பெறும். APR9ஆரோக்கியமான கூந்தலுக்கு*தலை முடியின் வறட்டுத் தன்மையைப் போக்கி, ஜொலி ஜொலிக்க வைக்கும் சக்தி ஆரஞ்சு தோல் தோலுக்கு உண்டு. உலர்ந்த ஆரஞ்சு தோலுன், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா இவை ஒவ்வொன்றும் தலா 250 ௦கிராம் எடுத்து, மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால். முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். APR9கூந்தல் பராமரிப்பு - முடி உதிர்வது நிற்க*வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது படிப்படியாக நின்று விடும்.

*கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது உடனடியாக நின்று விடும். APR9கூந்தல் பராமரிப்பு - முடி மிருதுவாக இருக்க*முடி மிருதுவாக இருக்க சீத்தாப்பழ விதைகளைப் காயவைத்து பொடியாக்கி,அதை சீயக்காயுடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.இதை வாரம் இரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டு போல் மிருதுவாக மாறும்.

*பெண்களுக்குப் உள்ள மிக பெரிய பிரச்னை பேன்தான். இதை ஒழிக்க இரவில் தலையணைக்கு அடியில் செம்பருத்திப் பூ இலைகளை வைத்துப் படுத்து வந்தால் பேன்கள் ஒழியும்.

அதேசமயம், இந்த செம்பருத்திப் பூக்களையும் கற்பூரப் பொடி இரண்டையும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலைக்குத் தடவிக் கொண்டால் பேன்கள் ஓடிவிடும். APR9உடல் அழகு - சில அழகுக் குறிப்புகள்:*பழுத்த வாழைப்பழத்துடன் பால் கலந்து முகத்தில் பூசுங்கள். முகம் பளப்பளக்கும்.

*பப்பாளிப்பழம், எலுமிஸ்சை சாறு கலந்து தடவவும். முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.

* ஆரஞ்சு சாறை குளிர்சாதன பெட்டியில் வைத்து கட்டியாகி ஒரு வெள்ளை துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஒத்தி எடுக்கவும். கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.

* வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமெட்டி, பால் சேர்த்து முகத்தில் பூசி பிறகு கழுவி விடவும். வெய்யிலில் கருத்த முகம் பொலிவு பெரும். APR9உடல் அழகு - முகம் பளபளப்பாக இருக்க*சிலருக்கு முகத்தில் காது, கால், கைகளில் நிறைய முடிகள் இருக்கும். அவர்கள் வேப்பங்கொழுந்து, குப்பை மேனி இலை, விரலி மஞ்சள் அரைத்துப் பூசி பத்து நிமிடம் உலரவிட்டு பின் கழுவினால் முடி உதிர்ந்து விடும்.

*முகத்தில் பருக்கள் இருந்தால் வெள்ளைப் பூண்டையும், துத்தி இலையையும் சம அளவு எடுத்து அதை நறுக்கி, பின் நல்லெண்ணெயில் போட்டுக் நன்கு காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். APR9உடல் அழகு - பற்களை எவ்விதம் பாதுகாக்குவது*இரவில் படுக்கைக்குப் போகும் முன்னர் பற்களை துலக்குவது அவசியம். இரவில் தான் பாக்டீரியாக்கள் பற்களின் இடுக்குகளில் எஞ்சியுள்ள உணவுப்பொருட்களைச் சுற்றி ஒரு வித அமிலத்தைச் சுரக்கின்றன. அவை பற்களில் உள்ள எனாமல்களை அரித்து விடுகின்றன.

*சுத்தமான நீரால், வாயை நன்றாக அலசி கொப்பளிக்க வேண்டும். இது பற்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட சிறு சிறு உணவுத்துகள்களை எளிதில் அகற்றி விடும்.

*பாக்டீரியாக்களின் வெதுவெதுப்பான படுக்கையாக நாக்கு உள்ளது. அதனால், நாக்கின் மேலும், கீழும் நன்றாக சுத்தம் செய்வது அவசியம். APR9உடல் அழகு - நக பராமரிப்புகை விரல் நகங்கள் இளம் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். இதில் வெள்ளை நிறம் ரத்த சோகையையும், மஞ்சள் காமாலையையும் குறிக்கும். விரல் நகங்களுக்கு நடுவில் சொத்தை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான காரணத்தை அறிவது நல்லது.

கைப்புண்ணிற்கு கண்ணாடித் தேவையா என்பது பழமொழி. அதே போல் நம் கை விரல் நகங்களைக் கொண்டே நமது உடல் ஆரோக்கியத்தைக் காட்டும் வகையில் மனித உடல் அமைந்துள்ளது. APR9உடல் அழகு - கண் பராமரிப்பு*கண்களின் அழகிற்கு கீழ்க்கண்ட உணவுகள் முக்கியம். பால், பால் பொருட்கள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்கள் மற்றும் காய்கள். போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம். உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கு பயிற்சி அவசியம்.

*ஏனெனில் கண் தசைகளோடு, மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன. கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் க்ளாக் வைஸ் மற்றும் ஆன்டிக்ளாக் வைஸ் டைரக்ஷன்களில் மூன்று முறைகள் சுழற்ற வேண்டும். APR9அழகு சிகிச்சைகள் - முக அழகிற்கு குங்குமப்பூ*சிகப்பழமைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும். இந்த குங்குமப்பூவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்:

*குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும்,உதடுகளிலும் பூசிவர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். APR9அழகு சிகிச்சைகள் - முகப்பருக்கள் மறைய*பொதுவாக பருக்கள் எண்ணெய் பதார்த்தங்களை உண்பதால் ஏற்படுகிறது. மேலும் உடலில் உள்ள கொழுப்புப் பொருட்களாலும், மன இறுக்கம், மலச்சிக்கல் இவற்றாலும் உண்டாகிறது. உணவுமுறை மாறு பாட்டாலும் முகப்பரு தோன்றும்.

*முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெற, முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து அதில் அரை ஸ்பூன் பயிற்றமாவு கலந்து முகத்தில் தடவவும். அது காய்ந்தபின் முகத்தைப் பால் கொண்டு கழுவி பின் நீரால் சுத்தம் செய்யவும். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் பருக்கள் மறையும். APR9அழகு சிகிச்சைகள் - முக அழகிற்கு / முகம் பொலிவு பெற*இயற்கை அழகே அழகு. சிலர் முகப் பொலிவு பெற வேண்டும் என்று ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை பயன் படுத்துவதால் இயற்கையான அழகு மாறி பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இக்கால கட்டத்தில் இயற்கை மூலிகை களால் ஆன அழகு சாதனப் பொருட்களைப் பயன் படுத்தி முகப் பொலிவினைப் பெறலாம். APR9அழகு சிகிச்சைகள் - முக அழகிற்கு*சிலருக்கு தூசிகளால் முகம் களையிழந்து கறுத்து போய்விடும். அவர்கள் ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி காய வைத்து பின் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் சம அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

*இவ்வாறு வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர முகத்திற்கு பேஷியல் செய்தது போல் முகம் பிரகாசமாக ஜொலிக்க ஆரம்பிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம். APR9அழகு சிகிச்சைகள் - உதடு பராமரிப்பு /அழகு*இன்றைய இளம் பெண்கள் சிலருக்கும் உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் கசியும். பின் படிப்படியாக உதடுகள் கறுப்பானதாக மாறிவிடும். இதற்கு மிக முக்கிய காரணம் உடலில் அதிக உஷ்ணம் இருப்பதுதான்.

*இந்த உஷ்ணத்தை போக்க வெந்தயத்தை ஒரு ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்துவிடவேண்டும்.

*இரவில் படுக்க போகும் போது வெண்ணையை உதட்டில் தடவிக் கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உதடு மீண்டும் பழைய பொலிவுக்கு வந்து விடும். APR9அழகு சிகிச்சைகள் - அழகு சிகிச்சை*ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும்.

*பெண்களின் அழகான கன்னங்களுக்கு அவ்வப்போது அச்சுறுத்தலாகத் தோன்றுவது முகப்பருக்கள். பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். APR9அழகு சிகிச்சைகள் - அழகு குறிப்புகள்*சிலருக்குக் கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும்.இது முக அழகை கெடுத்து விடும்.அந்தக் கருமையை விரட்டியடிக்க ஒரு டிப்ஸ்...

*வேப்பங்கொழுந்து சிறிதளவு, ஆரஞ்சு தோல் விழுது, கஸ்தூரி மஞ்சள் சம அளவு எடுத்து கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து உள்ளதோ அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.இவ்வாறு வாரம் இருமுறை செய்து வர கருமை ஓடிவிடும்.

*கரு வளையம் போக: கண்களைச் சுற்றி பாதாம் ஆயில் தேய்த்தால் கரு வளையம் படிப்படியாக மறையும். APR9அழகு சிகிச்சைகள் - எளிய குறிப்புகள்*மென்மையான, ரோஜா நிற இதழ்களைப் பெற கொத்தமல்லிச் சாறால் உங்கள் உதடுகளை அவ்வப்போது `மசாஜ்' செய்யுங்கள்.

*பார்லி பவுடரையும் மஞ்சள் தூளையும் 4:1 என்ற விகிதத்தில் நல்லெண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் பூசி பின் குளித்து வந்தால் தோல் மென்மை பளபளப்பு கூடும்.

*கழுத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்க முட்டையின் வெள்ளைக் கரு, கிளிசரீன், ரோஸ்வாட்டர் கலந்து பேஸ்ட்டாக்கி கழுத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவுங்கள்.

No comments:

Post a Comment