வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Saturday 8 June 2013

மஞ்சள் ஒரு சில முக்கிய தகவல்களைப் பார்ப்போம்..

மஞ்சள் என்பது இந்தியாவில் மிகவும் மகத்துவம் நிறைந்த பொருளாகக் கருதப்படுகிறது. அறிவியலும், விஞ்ஞானமும் வளரும் முன்பாகவே, மஞ்சளின் அரிய குணங்களைக் கண்டறிந்து சமையலறையில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது நமது முன்னோர்களை நினைத்து வியக்க வைக்கிறது.

சமையலறை மட்டுமல்லாமல் பெண்களின் அழகு சார்ந்த பொருளாகவும், மஞ்சள் விளங்குகிறது. வீடுகளைப் பராமரிக்கும் பொருட்களின் வரிசையிலும் மஞ்சள் உள்ளது.

அந்த வகையில்... மஞ்சளை தற்போது நாம் மறந்து வந்தாலும், அதன் மகிமையை அறியாதவர்கள் இருக்க முடியாது.

அது பற்றி ஒரு சில முக்கிய தகவல்களைப் பார்ப்போம்..

மஞ்சள் மற்றும் பாலை குழைத்து தேய்த்து குளித்து வந்தால் சருமம் பளபளப்படையும்.

மஞ்சளில் உள்ள கிருமி நாசினித் தன்மை, சருமத்துக்கு வரும் கிருமித் தொற்றுகளைத் தாக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.

மஞ்சள் கிழங்கை வாங்கி வந்து அதனை அரைத்து 2 ஸ்பூனு சாறு எடுத்து அதில் சிறிது உப்பு கலந்து வெறும் வயிற்றில் கலந்து ஒரு சில நாட்கள் குடித்து வந்தால், உடலில் உள்ள புழுக்கள், பூச்சிகள் அழியும்.

மஞ்சள் கிழங்கில் இருந்து மஞ்சள் சாறு எடுத்த அதனுடன் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்த சோகை குணமாகும். ஏன் என்றால் மஞ்சளில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது.

மூக்கில் சளி ஒழுகுவதால் அதிகம் சிரமப்படும் நபர்களுக்கு, விரல் மஞ்சளை அடுப்பில் அல்லது விளக்கில் சுட்டு அதில் இருந்து வரும் புகையை முகரக் கொடுப்பார்கள். இது விரைவான நிவாரணத்தை அளிக்கும்.

மூச்சுக் கிளைச் சிறு குடலில் ஏற்படும் பிரச்னை காரணமாக வரும் ஆஸ்துமாவுக்கு, பாலில் ஒரு டிஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று வேளைக் குடித்தால் நிவாரணம் பெறலாம். வெறும் வயிற்றில் குடிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment