வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Saturday, 8 June 2013

பூண்டு லேகியம் மற்றும் பூண்டு சாதம்

பூண்டு லேகியம் மற்றும் பூண்டு சாதம்




 உடலை மட்டும் வாட்டும் நோய்கள் சில. உள்ளத்தை மட்டும் வாட்டும் நோய்கள் சில. உடல், உள்ளம் இந்த இரண்டையும் வாட்டுகின்ற நோய்களோ பலப்பல... இந்த இரண்டிலுமே நோயின்றி இருக்குமேயானால் அது தான் உண்மையான உடல் ஆரோக்கியம். ஆனால் நோயற்ற வாழ்வு கொண்டோர் இப்புவியில் உண்டா என்றால்... இல்லை என்ற பதில்தான் கிடைக்கும்.

ஆனால், ஆண்டவனின் படைப்பில் எத்தனையோ புல், பூண்டுகளும், செடி, க...ொடி, பச்சிலைகளும் மனித வர்க்கத்திற்கு நோய் தீர்க்கும் சஞ்சீவிகளாக விளங்கி வருகின்றன. அவைகள் அன்றும் - இன்றும் - என்றும் இயற்கை தரும் சத்துணவாகவும், இன்மருந்தாகவும் நமக்கு பயன்பட்டு வருகின்றன.

நலிவு தரும் நோய் நீக்கும் நல்பொருட்களில் முதலிடம் பெறுவதில் பூண்டும் ஒன்று என்றால் அது மிகையல்ல. இதில் புரோட்டீன், விட்டமின் பி, விட்டமின் சி, பொஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்து உள்ளன.

உடலில் உள்ள கொழுப்புச் சத்தை, கணிசமாக குறைக்க வல்லது வெள்ளைப்பூண்டு. தொடர்ந்து 3 மாதங்கள் வெள்ளைப்பூண்டு சாப்பிட்டுவர, நமது உடலில் கொலஸ்ட்ராலின் அளவு கட்டுக்குள் வரும்.

பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும். கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.

பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும். பால்+பூண்டு+தேன் கலவையை தினமும் பருகி வர வயிற்றுக் கடுப்பு குணமாகும். அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு நல்லது.

காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண் ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். நோய் சரியானவுடன் இப்பூண்டுப் பாலை நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் இந்தப் பூண்டுப் பாலினை சாப்பிட அவர்களின் மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும்.

வெள்ளைப் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வதனால் உணவின் மணம், சுவை அதிகரிப்பதுடன் உடலில் ஏற்படும் வாயுக் கோளாறினை நீக்கி, உடல் சூட்டினைத் தணிக்கின்றது. மேலும் தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பின் தொடர்ந்து, பூண்டை பாலுடன் வேக வைத்துக் கொடுப்பதால் போதிய அளவு பால் சுரக்க உதவுகின்றது.

இதுதவிர பூண்டு உடலில் கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது. பூண்டைப் பாலுடன் வேக வைத்தோ, அதை உரித்து வாயில் மென்று விழுங்கினாலோ பத்தே நாட்களில் அது கிருமிநாசினியாகச் செயல்படுகிறது. குடலில் உள்ள அமியாபீஸில் என்ற உடலுக்கு தீங்கு செய்யும் நுண்ணிய கிருமியை முழுமையாக ஒழித்து விடுகின்றது. இந்தக் கிருமிகளை ஆங்கில மருந்துகளால் கூட முழுமையாக ஒழிக்க முடியாது. பற்களையும் ஈறுகளையும் பாதுகாக்க உதவுகிறது.

இருமல், கக்குவான், ரத்த அழுத்தம், வாயுத் தொல்லை ஆகியவற்றுக்கும் பூண்டு கைகண்ட மருந்தாகும்.

பூண்டு சாற்றில் நவரசத்தைக் குழைத்து வெண்குஷ்டத்தின் மேல் தடவி வர, நிறம் மாறி இயற்கை நிறம்பெறும். பூண்டின் பற்களைப் பாலில் அரைத்து பருக்களின் மீது பூசி வர பருக்கள் உடைந்து விடும். 10 கிராம் பூண்டின் பற்களை 30 மில்லி நல்லெண்ணையுடன் சேர்த்து காய்ச்சவும், பூண்டு மிதந்தவுடன் வடிகட்டி, ஆறியவுடன் காதில் 2 அல்லது 3 துளிகள் விட காது வலி குணமாகும்.

பூண்டின் சாற்றினை உள்நாக்கில் பூசிவர அதன் வளர்ச்சி குறைந்து அதனால் ஏற்படும் இருமல், அரிப்பு, வீக்கம் குறையும்.

பூண்டு லேகியம் புத்துணர்வு தரும் லேகியங்களில் ஒன்றாகும். உரித்த மலைப் பூண்டு 400 கிராம் எடுத்து, அதைச் சுத்தமாக்கி ஒரு லிட்டர் பசும்பாலில் போட்டு வேகவைத்து அதில் 400 கிராம் பனை வெல்லம் சேர்த்து இத்துடன் 300 கிராம் பசும் வெண்ணையை சேர்த்து காய்ச்சி பதமாக்கிய பிறகு, லேகிய பதம் வந்தவுடன் எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் 5 கிராம் சாப்பிட்டு வரவேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்று பொருமல், காச நோய், எலும்பு தொடர்பான வியாதிகள், இருமல், கோழைக்கட்டு, கபம் கட்டுதல் போன்ற நோய்கள் பறந்து போய்விடும்.

தைலம், மாத்திரை ஆகியவைகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது.

தற்பொழுது பூண்டு தேநீர் பேதியை நிறுத்தும் மருந்து எனவும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இரு பூண்டுகளை எடுத்து அதை தனித்தனியாக உதிர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை தோசைக்கல்லில் போட்டு சுட வேண்டும். சுட்ட பூண்டுகளை தண்ணீரில் போட்டு 5 முதல் 7 நிமிடம் வரை கொதிக்க வையுங்கள். பிறகு இந்தத் தண்ணீரில் வழக்கம் போல் தேநீர் போட்டு குடிக்கலாம்.

ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தேநீரை ஆறவைத்து குடித்தால் பேதி நின்றுவிடும்.

பூண்டு லேகியம்

தேவையானவை :

பூண்டு லேகியம் புத்துணர்வு தரும் லேகியங்களில் ஒன்றாகும்.
பூண்டு இருதயத்திற்கும், செரிமானத்திற்கும் சிறந்தது. இதை வாயுத்தொல்லை உள்ளவர்கள் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டாலே பலன் கிடைக்கும். ஒரு மாதம் சாப்பிட்டால் சுத்தமாக வாயு போய்விடும். மலச்சிக்கல் நீங்கும். இடுப்பு வலி உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து.

தேவையான பொருட்கள்

உரித்த மலைப்பூண்டு உரித்தது - 400 கிராம்
பசும்பால் - ஒரு லிட்டர்
பனங்கற்கண்டு அல்லது பனை வெல்லம் - 400 கிராம்
பசும் வெண்ணை - 300 கிராம்

உரித்த மலைப் பூண்டு எடுத்து, அதைச் சுத்தமாக்கி பசும்பாலில் போட்டு வேகவைத்து அதில் பனை வெல்லம் சேர்த்து இத்துடன் பசும் வெண்ணையை சேர்த்து காய்ச்சி பதமாக்கிய பிறகு, லேகிய பதம் வந்தவுடன் எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

சிறிய அளவில் தயாரிக்க

பூண்டு தோல் உரித்தது - ஒரு கப் (100 கிராம்)
பால் - ஒரு கப்
பனங்கற்கண்டு - ஒரு தேக்கரண்டி

பூண்டை ஒரு கிளாஸ் தண்ணீரில் வேகவைக்கவும். நன்கு வெந்தவுடன் பாலை ஊற்றி சிறு தீயில் கொதித்து வற்றவிடவும்.
வெந்தவுடன் கரண்டியால் மசித்து விட்டு பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்கவும். மசிக்காமல் முழுப்பூண்டாகவும் சாப்பிடலாம். இதை இரவில் சாப்பிட்டவுடன் சாப்பிடலாம்.


பூண்டு லேகியம் (பிள்ளை பெற்றவர்களுக்கு)

ஒரு முழு பூண்டு - சுட்டு அரைத்தது
பனை வெல்லம் - நான்கு மேசைகரண்டி
பெருங்காயம் பொடி - அரை தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி (சூடு படுத்தி ஊற்றவும்)

செய்முறை

பிள்ளை பெற்றவர்களுக்கு வயிறு உப்புசமாக இர்க்கும்.
அதற்கு முழு பூண்டை சுட்டு அரைத்து அதனுடன் பன வெல்லம், உருக்கிய நெய்,பெருங்காய பொடி கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மாத்திரை போடுவது போல் போட்டு கருங்காப்பி குடிக்க வேண்டியது.
இதற்கு பிறகு ஒரு மணி நேரத்திற்கு ஒன்றும் சாப்பிட கூடாது.
நாற்பது நாட்கலுக்குள் இரண்டு முன்று தடவை சாப்பிடலாம்.

குறிப்பு: பூண்டு பாலும் தேங்காய் பாலுடன் சேர்த்தும் குடிக்கலாம்.


பூண்டு சாதம்

தேவையானவை :

உதிராக வடித்த சாதம் - 3 கப்
பூண்டு - 20 பற்கள்
வெங்காயம் - 2 - பொடியாக நறுக்கவும்
இஞ்சி - பொடியாக நறுக்கியது - 1 ஸ்பூன்
மிளகு, சீரக பொடி- 2 ஸ்பூன்
உப்பு - தேவையானவை

செய்முறை:

வாணலியில் எண்ணெய் [அ] நெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து, பூண்டை பொடியாகவோ, தட்டி போட்டோ வதக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, மஞ்சள் தூள், உப்பு, மிளகு சீரகபொடி போட்டு வறுத்தபின் அடுப்பை சிம்மில் எரியவிடவும். சாதத்தை போட்டு மெதுவாக கிளறவும்.கடுகு தாளிக்கும்போதே கறிவேப்பிலை போட்டால் கலர் மாறாது. தேவையானால் கேரட் துறுவி போட்டு கொள்ளலாம்.

No comments:

Post a Comment