வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Friday, 28 June 2013

பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்..!


பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்..!

 
* புற்றுநோய் பரவுவதை தடுக்கும்.
* மலச்சிக்கலைப் போக்கும்.
* பித்தத்தைக் குறைக்கும் 
* அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்.
* கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.

அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 17 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது. மற்றும் கால்சியம் 18 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 5.5 மில்லிகிராமும், இருப்பு 10 மில்லிகிராமும், வைட்டசின் சி 10 மில்லிகிராமும் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின் வைட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்வர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.

பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.

பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால் இதற்கென்று பிரத்யேக மருத்துவப் பயன்கள் உண்டு.

1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.

4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.

6. பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும்.

7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.

8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

இருமலுக்கு இயற்கை வைத்தியம்:


இருமலுக்கு இயற்கை வைத்தியம்:

 
கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம்.

வெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதை மெல்லிய துணியில் வடிகட்டவும். இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து பாகுபதமாகக் காய்ச்சி இறக்கவும். இந்த வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி உட்கொண்டால் எப்பேர்ப்பட்ட இருமலும் சரியாகும்.

தொடர்ச்சியான இருமல்:

இருமல் தொடர்ந்து ஏற்பட்டு தொல்ல அளிக்கும்போது, பத்து கிராம் சிற்றரத்தையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கிக்கொண்டு அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாற்றை கலந்து உள்ளுக்குக் கொடுத்து வந்தால் குணமாகும்.

சிற்றிருமல்:

நீங்கள் நன்றாகக் காய்ச்சிய பசும் பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் சிறிது மிளகுத்தூளையும் சேர்த்துக் கலக்கி அருந்த இருமல் தணியும்.

இரைப்பு இருமலுக்கு:

இஞ்சிச் சாறு, ஈர வெங்காயச் சாறு, எலுமிச்சம்பழச்சாறு இவைகளை சம அளவு எடுத்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு இருமல் சாந்தியாகும். இருமல் அதிகமாயிருந்தால் ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிடலாம்.

கோழை இருமல்:

நாய் துளசியைக் கொண்டு வந்து தினம் கொஞ்சம் சாப்பிட்டு வந்தால் கோழை இருமல் போன்ற குறைகளை அகற்றும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல போஷாக்கு பெறும்.

வறட்டு இருமல்:

வறட்டு இருமல் ஏற்பட்டிருந்தால், ஆழாக்களவு பசும்பாலுடன் அரைத் தேக்கரண்டியளவு மிளகை உடைத்துப் போட்டுக் கொதி வரும் வரைக் கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி, சிறிதளவு பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கிப் படுக்கப் போகுமுன் குடித்துவிட வேண்டும். இது போல மூன்று நாள் சாப்பிட்டால் போதும், வறட்டு இருமல் குணமாகும்.

உடல் சூட்டினால் இருமல்:

உடல் சூட்டினால் ஏற்படும் இருமலைத்தான் இந்த மருத்துவம் கண்டிக்கும். மிளகுத் தூளையும் பனை வெல்லத்தையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொண்டு ஒரு சுண்டைக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், இரண்டொரு நாட்களில் சூட்டு இருமல் சரியாகும்.

எந்த வகையான இருமலுக்கும்:

பொதுவாக எந்த வகையான இருமலையும் சீரகம் குணப்படுத்திவிடும். 10 கிராம் சீரகத்தைச் சுத்தம் பார்த்து அதை இலேசாக வறுத்து எடுத்து அம்மியில் வைத்துத் தூள் செய்து அது எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு கற்கண்டைத் தூள் செய்து அத்துடன் கலந்து, ஒரு சீசாவில் வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க ஐந்தே நாளில் இருமல் குணமாகும்.

கக்குவான் இருமலுக்கு:

கக்குவான் இருமலின்போது வெள்ளைப் பூண்டை உரித்து அதை நெய்யில் வதக்கி வைத்துக்கொண்டு சாதத்துடன் சுமார் இரண்டு கிராம் எடை வீதம் சேர்த்துக் கொடுத்து வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.

ஜலதோஷம் காரணமாக இருமல்:

ஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டிருந்தால் ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டியைக் காயவிட்டு அதில் இரண்டு தேக்கரண்டியளவு மிளகைப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு வறுபட்டு சிவந்து வருகி, அதில் தீப்பொறி பறக்கும் சமயம் ஆழாக்குத் தண்ணீரை அதில் விட்டு மூடி நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் இறக்கி அதில் பாதியை மட்டும் ஒரு டம்ளரில் இறுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்துக் காலையில் குடித்துவிட வேண்டும். மறுபகுதியை மிளகுடன் வைத்திருந்து மாலையில் குடித்துவிட வேண்டும். இருமல் குணமாகும்.

தேனின் பயன்கள்


தேனீ சேகரிக்கும் தேனில் சிறிதளவு மகரந்தமும் கலந்திருக்கும். பூக்களுக்குத் தக்கவாறு நாடு, காலத்திற்கு ஏற்றவாறும் தேனின் ருசி, மனம், குணம், தடிமன் வேறு படும். குடகு பகுதியில் கிட்டும் ஒரு வகைத் தேன் வெள்ளி நிறத்தில் ஜீனி (சர்க்கரை) கரைத்தது போல் இருக்கும்.

 
தேன் கூட்டை பிரித்து கையால் பிழித்தெடுக்கும் தேனில் புழு, பூச்சி, தூசி கலந்து இருக்கும். தேன் கூட்டிலிருந்து நேரடியாக ஒழுகும்போது சேகரிக்கப்படும் தேன் சுத்தமான முதல் தரமானது.

சேகரிக்கப்பட்ட தேன் இனிப்பு சுவையுடன் தெளிவாக இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். நாளடைவில் மங்கிய நிறத்திற்கு மாறி விடும். சுமார் மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை தேனை வைத்திருந்து சாப்பிடலாம். பழைய தேனும் உட்கொள்ள உகந்த நிலையடைகிறது. நாள் பட வைத்திருந்தும் தேனை பயன்படுத்தலாம். நாள்பட்ட சுத்தமான தேனில் படிகம் ஏற்படும். இதனை நாட்டுப்புற மக்கள் விளைந்த தேன் என்பர். விளைந்த தேனையும் உட்கொள்ளலாம்.

தேனில் உள்ள சர்க்கரை சத்து, வைட்டமின் சத்து, உலோக சத்து உடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. அபூர்வமாக சிலருக்கு தேனில் கலந்துள்ள மகரந்தமும், மெழுகும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். தேனில் சிறிதளவு தேன் மெழுகும் கலந்திருக்கும், தேன் மெழுகு உடலுக்கு நன்மை செய்ய வல்லது. தேன் மெழுகு உடலை மெருகேற்றும் தன்மையை பெற்றது. ஆயுளை நீட்டிக்கும் அறிய குணம் தேன் மெழுகிற்கு உண்டு.

தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையான பானத்தை முனிவர்கள் முதல் தேவர்கள் வரை விரும்பி அருந்தி வந்தனர் என ரிக் வேதத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. ரோமானியர்கள் மூல்லும் என்ற பானத்தையும், ரஷ்யர்கள் லிப்பிடெஸ் என்ற பானத்தையும், கிளாரி பிராகெட் என்ற சுவையான பானத்தை பிரிட்டிசாரும் உபயோகித்து வந்தனர். இவர்கள் உட்கொண்ட பானங்கள் அனைத்தும் தேன் கலந்து செய்யப்பட்டவை என்பதனை மேல் நாட்டு வரலாறு எடுத்துரைக்கிறது.

மணதக்காளி...!!!

மணதக்காளி...!!!




 

வாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்னைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும்.

மூலநோய்க்கும் குடல் பிரச்னைக்கும் இந்த கீரை நல்ல மருந்து. மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.

உங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா ?


உங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா ?


சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது .தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.

காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.

மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.

மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன.எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.

‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.

மதிய உணவில் தயிர் மற்றும் கீரை இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்.

சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!


சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!


"ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்"

கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்­ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும். உச்சிப் பொழுதில் பச்சைநிற வயல் வெளியில் புங்கமர நிழலில் இதே நீராகாரத்தை மாங்காய் ஊறுகாயுடன் அல்லது பூண்டு + வெங்காயம் சேர்ந்த வத்தக்குழம்புடன் தொட்டுத் தொட்டு சுவைத்துப் பருகினால் ஆஹா...! எழுதும்போதே நாவில் உமிழ்நீர் அருவியாக சுரக்கின்றதே....

இப்படி கோடைக்காலம் முழுதும் தினசரி ஒரு வேளையாவது சோற்றுநீரை (நீராகாரத்தை) 2 குவளை பருகினால் என்ன நிகழும்? ஒரு பழமொழி பதில் சொல்கிறது.

ஆற்றுநீர் வாதம் போக்கும்

அருவிநீர் பித்தம் போக்கும்

சோற்றுநீர் இரண்டையும் போக்கும்

ஆமாங்க! ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் சோற்றுநீர். இதனால் வாத நோய்களான பக்கவாதம் கைகால் அசதி, முடக்குவாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக்கும். அத்துடன் கோடைக்கால பாதிப்புகளான வயிற்றுவலி, சருமத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க்குரு, தேக அனல் ஆகியன வராது காக்கும். சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்றுநீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக்கால பெருமை!

மன அழுத்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிகள்!


மன அழுத்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிகள்!

 
பலரையும் பாடாய்படுத்தி வரும் டென்ஷன் பிரச்னைக்கு மருத்துவர்கள் வழி சொல்கின்றனர்.வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நீங்கள் முதலில் டென்ஷன் ஆகிற ஆளா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள். ஆம் என்று பதில் வந்தால் எந்தெந்த காரணங்களுக்காக டென்ஷன் வருகிறது என்று பட்டியலிடுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக மூளையில் இருந்து ஒழித்துக் கட்டுங்கள்.

அப்போது எந்த கனமும் இன்றி மனம் லேசாக இருக்கும். உணவு விஷயங்களிலும் கவனம் தேவை. நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருந்து உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறதா, உழைப்புக்கு ஏற்ற உணவு உண்கிறீர்களா என்பதை உணவு ஆலோசகரிடம் விவாதித்து உணவு முறையை அறிந்து கொள்ள வேண்டும்.

டென்ஷன், மறதி, படபடப்பு, கோபம் உள்ளிட்டவை குறித்து மனநல ஆலோசகரின் உதவியுடன் பழக்க வழக்கத்தை சரி செய்யலாம். தவறான உணவு முறை, வாழ்க்கை முறை இரண்டையும் சரி செய்வதன் மூலம் டென்ஷனை விரட்ட முடியும்.

அடுத்து உடலில் என்ன நோய் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். வயதுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு, ரத்தக் குறைபாடு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் நோய்களால் உண்டாகும் தேவையற்ற டென்ஷனை தடுக்கலாம்.

தடுக்காமல் விட்டால் மன அழுத்தமாக மாறிவிடும். அப்படி ஆகும் போது உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து மற்ற நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கும். தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட நோய்கள் உடலை அடிக்கடி தாக்கும் வாய்ப்பாக அமையும்.

வயதுக்கு ஏற்ற உணவுடன் பள்ளிக் குழந்தைகள் ஏதாவது ஒரு விளையாட்டில் பயிற்சி செய்வதன் மூலம் உடல் வலிமை பெறும். உடல் எடை அதிகரிக்காது. டென்ஷனான மனநிலை மாறும்.

டீன் ஏஜ் பருவத்தில் உடல் மற்றும் மனதில் ஏற்படும் குழப்பங்களின் காரணமாக டென்ஷன் வர வாய்ப்புள்ளது. இதே போல் பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் மேற்கத்திய உணவுகள் மீதான ஆர்வத்தை குறைப்பது மிகவும் அவசியம்.

குழந்தைகளுக்கும் துரித உணவு மற்றும் உடல்நலத்துக்கு ஒவ்வாத புதிய புதிய உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை நாமே வளர்க்காமல், அவர்களுக்கு பிடித்த ஆரோக்கியமான உணவுகளை அவர்களுடன் சேர்ந்து வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம்.

இதன் மூலம் சத்தான உணவுப் பழக்கம் ஏற்படுவதுடன் தேவையற்ற உடல் பிரச்னைகளை தடுக்க முடியும். அஜீரணம், உடல் எடை அதிகரிப்பு, குடல் மற்றும் வயிற்றுப் புண் ஏற்படுதல், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் உள்ளிட்டவைகளை தடுக்கலாம்.

இந்த வயதில் வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் டீன் ஏஜ் குழந்தைகள் தங்களது பிரச்னைகளை மனம் விட்டு பேச வீட்டில் பெற்றோர் நட்பான சூழலை ஏற்படுத்தி தர வேண்டியதும் முக்கியம்.

நேரத்தை திட்டமிடாததும் டென்ஷனுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. வேலைகளை பகிர்ந்து கொள்வது, குறித்த நேரத்தில் வேலைகளை முடிப்பது மற்றும் அடுத்தவர் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது, அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது போன்ற பழக்கங்களின் மூலம் மட்டுமே மனதை இயல்பாக வைத்திருக்க முடியும்.

தேவையற்ற விஷயங்களை மனதில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் நல்ல சிந்தனைகளுக்கு மனதில் இடம் கிடைக்கும். 30 வயதுக்கு மேல் உடற்பயிற்சியை வழக்கப்படுத்தவும். வாக்கிங் நல்ல பலன் அளிக்கும்.

மது, புகைபிடித்தல் போன்ற பழக்கங்களால் டென்ஷன் குறையும் என்று நினைப்பது மூட நம்பிக்கை. இது போன்ற பழக்கங்களை கைவிடுவது அவசியம். சரியான நேரத்துக்கு தூங்கும் பழக்கம் மன அமைதிக்கு நல்லது.

ஆரம்பத்தில் டென்ஷன், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை மாற்றிக் கொள்ளாதவர்கள் விரைவில் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.

ஆஸ்துமா, இரைப்பை மற்றும் குடல் பிரச்னைகள், நாள்பட்ட வலி ஆகியவை மனநலப் பிரச்னைகளின் தீவிரத்தை அதிகரிக்கும். உடலில் நோய்கள் குடியேறுவதற்கான சாவியே டென்ஷன் தான். டென்ஷன் என்ற சாவியை தொலைத்தால் நிம்மதியான, நோயற்ற வாழ்வு வாழ முடியும்.

சவுச்சவ் ஆச்சரியப்படுத்தும் உடல்நல நன்மைகள். . .


சவுச்சவ் ஆச்சரியப்படுத்தும் உடல்நல நன்மைகள். . .


சவுச்சவ் இதய நொய்யாளிகளுக்கு நல்லது, மற்றும் புற்றுநோய் வராமல் காக்கும்.

சவுச்சவ் பொதுவாக ஒரு காய்கறி போன்றே தயார் செய்ய படுகிறது என்றாலும், அது உண்மையில் ஒரு பழம் ஆகும். இதில் மிகவும் முறுமுறுப்பான சதை பற்று இருப்பதால் இதைல் சமைத்தும் சாப்பிடலாம், பச்சையாகுவும் சாப்பிடலாம்.

1. இதயத்திற்கு நல்லது. . .

(Homocystein) ஒரு அமினோ ஆஸிட் ஆகும், இது இரத்தத்தில் அதிகமா இருந்தால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, இப்படிப்பட்ட அமினோ ஆஸிட் வளர்வதை 'B' விடமின் தடுக்கிறது. இந்த Folate எனப்படும் 'B' விடமின் சவுச்சவ்வில் நிறைந்து இருக்கிறது.

2.புற்றுநோயை தடுக்க உதவுகிறது(வைட்டமின் சி) . . .

வைட்டமின் சி, ஒரு சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடெஂட்ஸ்(antioxidants) ஆகும். இந்த சாரம் நம் உடலில் ஏற்படும் திசு சிதைவுகளை சரிசேய்யும் அது மற்றும் இன்றி இந்த ஆண்டி-ஆக்ஸிடெஂட்ஸ் மெதுவாக அல்லது சாத்தியமான வகையில் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சவுச்சவ்வில் வைட்டமின் சி ஒரு நல்ல மூலமாகும், இது . 17% வழங்கும்.

3. உடலின் ஆற்றல்/சக்தி உற்பத்தியை அதிகரிக்கும் (Manganese). . .

சவுச்சவ் முட்டை போடிமாஸ்யை காலை உணவாக உன்ணுங்காள், நாள் முழுவதும் உங்கள் உடல் ஆற்றல் / சக்தியுடன் இருக்கும். இதில் மாங்கனீசு உள்ளடக்கம் அதிகம் உள்ளத்தால் அந்த நாளில் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் புரதம் மற்றும் கொழுப்பை எநர்ஜீ(Energy) ஆகா மாற்றும்.

4. மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது (Fiber). . .

குடல்பகுதியை முறைப்படுத்தி ஊக்குவிக்க, உங்கள் உணவில் சவுச்சவ்வை தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

5. தைராய்டு(thyroid) ஆரோக்கியமாக வைத்திருக்கும் (Copper). . .

தைராய்டு வளர்சிதையை கட்டுப்படுத்தும் அயோடின்க்கு, தாமிரம்(Copper) உதவுகிறது. அயோடின் என்பது தைராய்டு வளர்சிதை பரிணாமத்துடன் சம்பந்தப்பட்டு இருக்கும் ஒரு தாது குறிப்பாக ஹார்மோன் உற்பத்தியில் மற்றும் உட்கிரகிப்பிற்கும்.

6. ஆண்மை அதிகரிக்க மற்றும் முகப்பரு தடுக்க உதவுகிறது (Zinc). . .

சவுச்சவ் துத்தநாகம்(.) ஒரு நல்ல மூலமாகும். தோல் எண்ணெய் உற்பத்தி கட்டுப்படுத்தும் ஹார்மோன்கலை ஊக்குவிக்கும். ஆண்மை அதிகரிக்க மற்றும் மலட்டுத் தன்மையை போக்கும்.

7. எலும்பு இழப்பு தடுக்க உதவுகிறது (Vitamin K). . .

உங்கள் வீட்டில் இருக்கும் வயதானவர்களை சவுச்சவ் சாப்பிட சொல்லுங்கள், அதில் இயற்கை வைட்டமின் கே இருக்கிறது. வைட்டமின் கே மற்றும் எலும்பு இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

8. இரத்த அழுத்தம் குறைக்க உதவுகிறது (Potassium). . .

சவுச்சவ் உங்கள் உடலின் தினசரி படாஸீயம் தெவயை பூர்த்தி செய்யும், இந்த தாது இரத்த அழுத்த அளவுகளை குறைக்க உதவுகிறது.

9. மூளை வார்சிக்கு நல்லது (Vitamin B6). . .

ஆய்வின் பங்கேற்பாளர்கள் சில குறிப்பிட்ட வயதில் உள்ளவர்களுக்கு மூளை நினைவக திறனை ஊக்குவிக்கும் என்று நம்புகிறார்கள்

10. கால் தசைப்பிடிப்புக்கலை தடுக்க உதவுகிறது (Magnesium). . .

ஒரு எலக்ட்ரோலைட் மற்றும் கனிமம் தசைப்பிடிப்புப்பை தடுக்கும் உதவும்.

செவ்வாழைப் பழத்தின் மருத்துவக் குணங்கள்:-


செவ்வாழைப் பழத்தின் மருத்துவக் குணங்கள்:-

 
பல்வலி குணமடையும்

பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொரி சிறங்கு நீங்கும்

சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

நரம்பு தளர்ச்சி குணமடையும்

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
குழந்தை பேறு தரும்

குழந்தை பேறு தரும்

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தொற்றுநோய் தடுக்கப்படும்

தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

மாலைக்கண்நோய்

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்

Saturday, 8 June 2013

மாதுளை.

மூலிகையின்பெயர் :– மாதுளை.

 
தாவரப்பெயர் :– PUNICA GRANATUM.
தாவரக்குடும்பம் :- PUNIACACEAE.
பயன்தரும்பாகங்கள் :– பழம், பூ, பிஞ்சு, பட்டைவேர் :முதலியன..
 
வளரியல்பு :– மாதுளம்வளமான மண்ணில் நன்கு வளரும். இந்தியாவிலும் பல பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது . இதன் தாயகம் இரான் இராக் பின் இந்தியா, பாக்கிஸ்தான்  பங்களாதேஸ்சைனாதெற்குஅரேபியா, ஆப்கானீஸ்தான், போன்ற நாடுகளுக்குப் பரவிற்று . இது ஒரு குறுமரம். இதுசுமார் 10 லிருந்து 25 அடி வரை வளரக்கூடியது . இதன் பூ சிகப்பாக இருக்கும் .மின்னும் சிவப்பாக மஞ்சள் கலந்த பச்சையாக பழங்கள் தோற்றம் தரும். பழத்தின் நுனியில் குஞ்சம் போன்ற அமைப்பு இருக்கும். பழத்துள் கெட்டியான விதைகள் சாறு நிறைந்திருக்கும் . இனிப்பு, புளிப்புதுவர்ப்பு மூன்று வகையா கசாறுகள் இருக்கும். இவற்றின் உலர்
த்தப்பட்ட விகைகளிலிருந்து நறுமணப் பொருள்கள் செய்கின்றனர் .விதைகள் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது
 
மருத்துவப்பயன்கள் :- 
மாதுளம் பிஞ்சைக் கொண்டு வந்து புளித்த மோரில் அரைத்துக் கலக்கி செரியாகழிச்சல், சீதக்கழ்ச்சல், நீர்நீராய் கழிதலுக்கும் தர கழிச்சல்கள் நிற்கும்.

மாதுளம்பழத்திற்கு `மாதுளங்கம்என்ற பெயரும் உண்டு .மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்புசர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன.
மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது .உடலுக்குத்தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய்நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.

இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்திகிடைக்கிறது .பித்தத்தைப் போக்குகிறது, இருமலை நிறுத்துகிறது.
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது .ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்டசிறுநீரை வெளியேற்றுகிறது .குடற்புண்களை (அல்சர்) குணமாக்குகிறது.
மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும்.

இதயநோய்கள், இதயபலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும்.சீதபேதிக்கு மாதுளை சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடைகூடும்.
 
தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.
ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம் பழம் சாப்பிடுவதால் மிகுந்தசக்தியை அடைய முடிகிறது.
 
மாதுளம் பழத்தோலுடன் வேலம்பட்டைத் தூளைக் கலந்து பல் துலக்கிவர பல்வலி, பல்லில் ரத்தம் கசிதல் நீங்கும்.
 
மாதுளம்பட்டை ச்சாறுவயிற்றிலுள்ள புழுக்களை வெளிப்படுத்தும்.
 
மூக்கிலிருந்து குருதி வடிவதை நிறுத்த மாதுளம்பூச் சாற்றுடன் அறுகம்புல் சாற்றையும் சம அளவுகலந்து தரலாம்.
 
மாதுளம்பழச் சாறு ஒருடம்ளர் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். நெஞ்செரிச்சல், மந்தம், அடிக்கடிமயக்கம் போன்றவை நீங்கும்.
மாதுளம் பழச் சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சி யடையும். காய்ச்சல் தணியும். மாதுளம்பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும் .மாதுளம் பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம்.

மாதுளம் பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்து விடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதயவலி நீங்கிவிடும்.

பெரிய இனிப்பு மாதுளம் பழத்தில் ஆறு எடுத்து இதன் முத்துக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 200 கிராம் சீனியை இதில் கலந்து வைத்து அரை மணி நேரம் வரை இருந்தால், முத்துக்களின் சாறு நீர்த்துப் பிரியும். இந்த சாறு அரைலிட்டர் சேர்ந்தால், ஒருகிலோ சீனியை பாகுபதத்தில் காய்ச்சி, இதனுடன் மாதுளம் பழச்சாற்றைக் கலந்து வைத்து க்கொண்டு மீண்டும் பாகு பதம்வரை சூடு செய்து பத்திரப்படுத்திக் கொண்டுதினசரி 30 மில்லி அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், பித்த நோய்கள் நீங்கும். ஆயாசம் அகலும். வீரியவிருத்திக்கான டானிக் ஆகும் .நினைவாற்றல் பெருகும்.
 
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக் குப்பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும் .புதிய ரத்தம்  உற்பத்தியாகிவிடும்.

மாதுளம்பூக்களைமருந்தாகப்பயன்படுத்தும்போது, இரத்தவாந்தி, இரத்தமூலம்வயிற்றுக்கடுப்பு, உடல்சூடுதணியும்.இரத்தம்சுத்தியடையும், இரத்தவிருத்திஉண்டாகும்.
 
மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மூக்கில் இரத்தம் வடியும் நோய் உள்ளவர்கள், மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன் றுதினங்களுக்குக் கொடுத்தால், இரத்தம் கொட்டுதல் நின்றுவிடும். பெண்களுக்கு ஏற்படும் உதிரப் போக்கிற்கு இதே மருந்தை மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
 
மாதுளம்பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும் போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாக சுண்டக் காய்ச்சியதை, காலைநேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தட்டைப்பூச்சிகள் மலத்துடன் வெளியேறிவிடும்.
 
மாதுளம்பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்ப நோய்தீரும் .மாதுளம் பூக்கள் அறுகம்புல்மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டுவேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசுவெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால்இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும்.
 
அலர்ஜியை நிவர்த்திக்கும் மூலச்சூடும் வெட்டை நோயும் நீர்க்கடுப்பும் நீங்க மாதுளம்பூச்சாறு 300 கிராம் சேகரித்து அதில் 200 கிராம் பசுநெய் சேர்த்து பூச்சாறு சுண்டும் அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், இரண்டு மாதத்தில் கடுமையான சயரோகப் பாதிப்பு, படிப்படியாகக் குறைந்துவிடும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் தேறும். தொடர்ந்து இருபது தினங்கள் இதே நெய்யை காலை மாலை சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான மூல நோயும் நீங்கும்.

ஆடையொட்டி.

மூலிகையின் பெயர் :– ஆடையொட்டி.

தாவரப்பெயர் :–
TRIUMFETTA RHOMBOIDEA Jacq.  Syn: Triumfetta angulate Lam.
 
தாவரக்குடும்பம் :- TILIACEAE  (Malvacea) இதில் 70 வகைகள் உள்ளன.
 
பயனுள்ள பாகங்கள் :– இலை, பூ, பட்டை, காய் மற்றும் வேர்கள். (சமூலம்) மருத்துவ குணம் உடையவை.
 
வேறு பெயர்கள் :– ஒட்டுப்புல்லு (Ottuppullu), புறாமுட்டி (Puramutti)
Aadaiotti, Adayotti, Ataiyottippuntu,போன்றவை.
ஆங்கிலத்தில் - Burr Bush, Diamond burrbark, Chinese Burr போன்றவை.
சமஸ்கிரத த்தில் ‘JHINJHARITA’ என்ன்றும் இந்தியில் ‘CHITKI’ என்றும் அழைக்கிறார்கள்.

வளரியல்பு :– ஆடையொட்டி ஒரு செடி வகையாச் சேர்ந்தது. இது எல்லாவகை மண்ணிலும் வளரக் கூடியது. வெப்பத்தைத் தாங்கும். தமிழ் நாட்டில் மலை, வேலியோரங்களிலும், தரிசு நிலங்களிலும் காணப்படும். இதன் தாயகம் பிறப்பிடம் தெரியவில்லை. இருந்தாலும் ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா, இந்தியா, தாய்வான், தென்ஆப்பிரிக்கா, கானா, .டான்சானியா, காமரூன், பிரேசில், இத்தோப்பியா, ஸ்விச்சர்லேண்ட், லிபியா, சைனா, ஜிம்பாவே, பாக்கீஸ்தான், மடகாஸ்கர், அமரிக்கா, உகாண்டா, இலங்கை போன்ற நாடுகளில் பரவிக் காணப்படுகிறது. இந்தச் செடி சுமார் ஆறு அடி உயரம் வரை வளரக்கூடியது. இது நேராகச் செல்லும் குத்துச் செடி. இதன் தண்டுகள் மெலிந்திருக்கும், லேசான சொரசொரப்பான முடியுடன் இருக்கும். இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலைகள் நீழ்வட்டத்தில் பசுமையாக சிறு முடியுடன் இருக்கும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்திலும், சில வகை வெள்ளை, ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும், ஐந்து இதழ்களைக் கொண்டிருக்கும். ஜூலை, மற்றும் ஜனவரி மாதங்களில் பூக்கள் பூக்கும். பூ முற்றியதும் அடிபாகத்தில் சூழ் இருக்கும், இது தன்மகரந்தச் சேர்கையால் காய் உண்டாகும். இதன் காய்கள் சிறிதாக மூன்று அரைகள் கொண்டதாக இருக்கும். இந்தக் காய்கள் உலர்ந்தால் ஆடைகள் படும் போது ஒட்டிக் கொள்ளும். இதனால் காரணப்பெயராக அமைந்தது. தமிழ் நாட்டில் தரிசு நிலங்களில் தானாக வளர்ந்தாலும் இதை வெளி நாடுகளில் நல்ல நிலத்தில் பயிராகப் பயர் செய்கிறார்கள்.(மடகாஸ்கர்) விதைமூலம் இன விருத்தி செய்யப்படுகிறது..  

மருத்துவப் பயன்கள் :– ஆடையொட்டியின் தன்மை தட்பம். பிரிவு இனிப்பைச் சேர்ந்தது. செய்கை துவர்ப்பி-லங்கோசகாரி (ASTRINGENT) உள்ளழலாற்று- அந்தர்ஸ்நிகதகாரி (DEMULCENT). இதன் இலை, பூ தொழுநோயை (Leprosy) குணப்படுத்தும், இலையின் பவுடர் இரத்த சோகையைப் (Anaemia) போக்கும். இதை கிழக்கு ஆப்பிரிக்காவில் நடைமுறையில் உள்ளது. இதன் தண்டு மற்றும் புதிய இலையை அரைத்து உள் கொடுக்க வயிற்றுப் போக்கு (Diarrhoea) குணமாகிறது. வயிற்று வலியும் குணமாகிறது. இதன் அடி வேர்கள் பொடி செய்து உள் கொடுக்க குடல் அல்சர் சூடு (Hot infusion-hasten parturition) குணமடைகிறது. இதன் சமூலத்தில் பிரித்தெடுக்கப்பட்ட ஆல்கலாய்டு ஏண்டி பாக்டீரியாகப் பயன்படுகிறது. இதன் வேர் அரைத்துக் கொடுக்க வயிற்றுக் கடுப்பு (Dysentery) குணமாகிறது. வெளிநாடுகளில் குதிரையின் வயிற்றுக் குடலில் புண் அஜீரணம் போன்று ஏற்பட்டால் இதன் இலைகளை நன்கு அரைத்து உள்ளுக்குக் கொடுத்து குணம் காண்கிறார்கள். இதன் இலைச் சாற்றிலிருந்து இரசாயனத்தைப் பிறித்தெடுத்து அது TRIUMFEROL 
( 4-HYDROXYISOXAZOLE  -TRIMETHYLSILYLACETARTRAMIA LINN.) இதிலிருந்து எடுக்கப்பட்ட சத்து- TRIUMFETTA BARTRAMIA LINN-Body tempature decrease. (1963) உடல் வெப்பத்தைக் குறைக்கிறது. வெளிநாடுகளில் இதன் இலைச்சாற்றை பவுடராகவும், வில்லைகளாகவும் தயாரித்து மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள்.

ஆடையொட்டியின் இலையை அரைத்து நீரில் கலக்கி சர்கரை சேர்த்து உள்ளுக்குக் கொடுக்க வெட்டை ரோகம் குறைந்து நன்மை ஏற்படும்.

ஆடையொட்டியின் இலை மற்றும் காய் நீரில் அரைத்து நன்கு கலக்கி மூத்திரத் தாரையில் பீச்ச மேற்படி நீர் சம்பந்தமான ரோகங்கள் குணமாகும்.

ஆடையொட்டி இலையையும் பட்டையையும் அரைத்து நீரில் கலக்கி உள்ளுக்குக் கொடுக்க அதிசாரம் அஜீரண பேதி, சீத பேதிகள் குணமாகும்.

பேசில் துளசி.

மூலிகையின் பெயர் :– BASIL.- பேசில் துளசி.
 
 
தாவரப்பெயர் :– OCIMUM BASILICUM.

தாவரக்குடும்பம் :– LAMIACEAE.

முக்கிய வகைகள் :– BOXWOOD BASIL,  CINNORMON BASIL,  LEMON BASIL,  MAGICAL BASIL,  GENOVESE BASIL,  GREEK COLUMN BASIL,  NAPOLITANO BASIL, OSMIN BASIL,  PESTO PERPETUA BASIL,  PURPLE RUFFLES BASIL,  REDRUBIN BASIL,  SIAINS QUEEN BASIEL,  & SPICY BUSH BASIL.

பயன் தரும் பாகங்கள் :– இலை, பூ, விதை மற்றும் வேர் முதலியன.
 
வளரியல்பு :– பேசில் துளசி எல்லா வகை வளமான மண்ணில் மற்ற துளசியைப் போன்று வளரக்கூடியது. இதற்கு வெப்பமான கால நிலை அவசியம். (70 டிகிரி F ஹீட்) அதிக குளிர் ஆகாது. இதன் தாயகம் இந்தியா. இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளான கிழக்கு ஆசியா, இத்தாலி, இந்தோனேசியா, தாய்லண்டு, வியட்னாம், கம்போடியா, சீனா, மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குப் பரவிற்று. இதன் காலம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. ‘BASIL’: என்ற சொல் கிரேக்கத்திலிருந்து தோன்றியது. அதன் பொருள் ‘KING’ அரசன் என்பது.  ‘KING OF HERBS’ மூலிகையின் அரசன் என்று சொல்வார்கள். இதில் 160 வகைப் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக பெயர்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மேலைநாடுகளில் பேசில் இல்லாத சமையல் அரையே இருக்காது அவ்வளவு முக்கியத்துவம் வாய்தது.
 
பேசில் விதை மிகச்சிறிதாகக் கடுகு போன்று கருப்பாக இருக்கும். இதை விதைக்க செடியிலிருந்து எடுத்து ஒரு ஆண்டுக்குள் பயன் படுத்த வேண்டும்.
பசுமைக் குடிலில் மேட்டுப்பாத்தி அமைத்து நல்ல நுண்ணுயிர் உரம் இட்டு மிருதுவான மண்ணில் கால் அங்குல ஆழத்தில் விதைகளை ஊன்ற வேண்டும். காய்ந்த நிலமாக இருக்கும். பூ வாழியில் நீர் தெளிக்க வேண்டும். மேலும் ஈரப்பசை இருந்து கொண்டு இருக்க வேண்டும் . அதே சமயம் சுமார் 6 மணி நேரம் வெய்யில் படவேண்டும்.  வளர்ந்த நாற்றுக்களை பாலத்தின் பைகளில் எடுத்து வைத்துப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ஆறு வாரங்கள் நிழலில் இருக்க வேண்டும். வெப்ப அளவு 70 டிகிரி பேரன் ஈட் இருக்க வேண்டும். பிறகு பார்களில் 10-12 அங்குல இடைவெளியில் நாற்றுக்களை நட வேண்டும். இதன் இலைகள் பச்சையாக இருக்கும். இலையின் நீளம் 3-11 செண்டி மீட்டரும், அகலம் 1-6 செண்டி மீட்டரும் இருக்கும். எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலைகள் மிகவும் மிருதுவாக இருக்கும். நறுமணம் உடையதாக இருக்கும்.  இது சுமார் 30 -130 செண்டி மீட்டர் உயரம் வளரக்கூடியது. பூக்கள் மிகச்சிறிதாக இருக்கும். வெள்ளை நிறத்தில் இருக்கும். 40 நாட்கள் ஆனவுடன் பக்கக்கிழைகளை அடிபாகம் சிறிது விட்டுக் கத்தரிக் கோலால் வெட்டி உபோகிக்கலாம். இது வெட்ட வெட்டத் துளிருத்துக் கொண்டே இருக்கும் அதற்குத் தக்கவாறு நுண் உரம், ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு ஆண்டு வரை பயன் தரும். பூ விட ஆரம்பித்தால் இலை பழுப்புத் தட்ட ஆரம்பிக்கும், அப்போது உரம் தண்ணீர் குறைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு நோய் வர ஆரம்பித்தவுடனே இயற்கைப் பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். இரசாயனம் சேர்க்கவே கூடாது. இது விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
 
மருத்துவப்பயன்கள் :- பேசில் முக்கிய இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மூலிகைச் செடி.(Natural anti-inflammatory). இது சமையலில் பெரிதும் பயன்படுத்தப் படுகிறது. பேசியல் இரத்த ஓட்டத்தைச சமநிலையில் வைத்துக் கொள்ளும் தன்மையுடையது. இரத்தத்தில் சர்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளப் பயன்படுகிறது. உடலின் சூட்டைத் தணிக்க வல்லது. இது மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை தீர்க்க வல்லது. தோல் வியாதிகளைப் போக்க வல்லது. இதன் எண்ணெய் புற்று நோயைக் குணப்படுத்தும். இதில் “’CINNAMANIC ACID”  என்ற அமிலம் உள்ளது. இது இந்த நோயைக் குணப்படுத்தும் வல்லமை பெற்றது.  இது முகப்பருவை குணமாக்கும். பேசில் மனிதனுக்கு உயிருடன் இருக்க உதவும் தோழன். இது பெண்களுக்குள்ள மலட்டுத் தன்மையைப் போக்க வல்லது. சர்கரை வியாதியைக் குணப்படுத்தும். மூச்சுக் குழலில் ஏற்படும் மூச்சுத்திணரலைக் குணப்படுத்தும். இது ஒவ்வாமையை குணப்படுத்தும். ஆண்களுக்கேற்படும் மலட்டுத் தன்மையைக் குணப்படுத்தும். பேசிலில் உள்ள CINNAMANIC ACID  இரத்தத்தில் உள்ள சர்க்கரையைப் போக்கி இரத்த நாணங்களை சம நிலைப்படுத்தி மூச்சுக்குழல் பாதை மற்றும் நுரையீரலைச் சீராக்குகிறது.. பேசில் எண்ணெயாகப் பயன் படுத்தும் போது மிகவும் உயர்ந்த ANTIOXIDANTS கப் பயன்படுகிறது. இது புற்று நோயின் போது உடம்பின் தோலில் உள்ள செல்கள் இறுதியாக அழிவிற்குப் போவதைத் தடுத்துப் புது செல்களை உருவாக்க வல்லது. பேசியல் நமது உடல் ஆரோக்கியத்தை நல்ல முறையில் வைத்துக் கொள்ளப் பயன்படுகிறது. தற்கால விஞ்ஞானிகள் தமது ஆராய்ச்சியில் இந்த “ANTIOXDANT” ஆற்றல் உடல் ஆரோக்கியத்தில் உடலின் சக்தி ஆற்றல்களைத் தூண்டும் ஊன்று கோலாக (a great health boost for our immune systems) உள்ளதாக அறிந்துள்ளனர். இலைகள் காயங்களைக் குணப்படுத்தும். வைரஸ் காச்சில், புளு காச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

பேசில் ஞாபக சக்தியை கூர்மையாக்குகிறது. நரம்பு மண்டலத்திற்கு டானிக்காகச் செயல்படுகிறது. நுரையீரல் குழாயில் ஏற்படும் 'PHLEGM' என்ற கோழையை சுத்தம் செய்கிறது. இலைகள் வயிற்றைக் குணமாக்கும். வேர்வையை அதிகரித்து மரத்துப் போவதை குணமாக்கும். பேசில் விதை மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் ஏற்படும் அதிகப்படியான கோழை படிமானங்களை அகற்றும் தன்மையுடையது. (The seeds can be used to rid of the body of excess mucus.)
 
பேசில் இலை மலேரியா போன்ற காச்சலைக் குணப்படுத்தும். இதன் இலையைக் கொதிக்கும் நீரில் இட்டு ஒரு லிட்டர் கால் லிட்டராகச் சுண்டும் வரை விட்டு அதில் ஏலக்காயைப் போட்டு பாலும் சர்கரையும் சேர்த்துக் குடிக்கக் கொடுத்தால் குணமாகும். சுத்தமான நீரில் பேசில் இலையை ஊர வைத்து அதன் நீரை இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தை களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகச் சப்பக் கொடுத்தால் குழந்தைகளின் காச்சல் குணமாகும்.
 
பேசில் இருமல், ஆஸ்த்துமா மற்றும் நுரையீரல் அடைப்பையும் குணப்படுத்தும். இதன் இலையை வாயில் போட்டு மென்று தின்றால் குளிர் மற்றும் புளு காச்சல் அறிகுறியைப் போக்கும்.
 
பேசில் இலையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஆரிய பின் அந்த நீரில் வாயில் ஊற்றி கொப்பளித்தால் டானிக் போன்று தொண்டைப் புண்ணை குணமாக்கம்.
 
பேசில் இலையுடன் தேனும் இஞ்ஜியும் கலந்து கொதிக்க வைத்து ஒரு லிட்டர் கால் லிட்டர் ஆகும் வரை சுண்ட வைத்து அது குளிர்ந்த பின் குடித்தால் ஆஸ்த்துமா, மார்ச்சளி, இருமல், குளிர் மற்றும் இன்புளியன்சா குணமாகும். பேசில் இலையை கிராம்பு மற்றும் கடல் உப்புடன் கலந்து மேல் சொன்னவாரு கொதிக்க வைத்து இரக்கி இன்புளியன்சா வந்தவர்கள் குடித்தால் விரைவில் குணமாகும்.
 
பேசில் இலைச்சாற்றுடன் தேன் கலந்த்து தினமும் ஆறு மாத காலம் சாப்பிட்டால் கிட்னியில் உள்ள கல் கரைந்து மூத்திரத் தாரை வழியாக வெளியேறி குணமடையும்.
 
பேசில் இருதய நோய் உள்ளவர்களைக் குணப்படுத்தும். கொழுப்புச் சத்தைக் குறைக்கும்
 
பேசில் இலைச்சாறு கீழ்கண்ட வியாதிகளை குணமடையச் செய்கிறது. குளிர், இருமல், காச்சல், வயிற்றுப்போக்கு, மற்றும் வாந்தி எடுத்தால் போன்றவை, சின்னம்மை வந்தவர்களின் புண்ணை பேசில் இலைச் சாற்றுடன் குங்கும்ப்பூ கலந்து உட்கொண்டால் விரைவில் தழும்புகள் குணமடையும்.
 
ஒரு நாளைக்கு 12 பேசில் இலையை மென்று இரு வெளை  சாப்பிட்டால் மன அழுத்தத்தைக் குறைக்கும். இரத்தத்தைச் சுத்தப் படுத்தி மற்ற நோய்கள் வராமல் தடுக்க உதவியாக இருக்கும்.
தினமும் இரு வேளை இந்த இலையை மென்று சுவைத்தால் வாய்ப்புண் குணமாகும்.
 
பேசில் இலைச்சாறு சில மணி நேரம் உட்கொண்டால்  சக்தி கிடைக்கும். வீக்கம், நமச்சல் வலி உள்ள இடத்தின் மீது இதன் சாற்றைத் தேய்த்தால் குணமடையும். பேசில் வேரின் பசையை பூச்சிக் கடிக்கும், அட்டைக் கடிக்கும் போட்டால் குணமாகும்.
 
பேசில் இலையை அரைத்து அதனுடன் சந்தனம் சேர்த்து தலை நெற்றியில் பத்துப் போட்டால் தலைவலி குணமடையும், மேலும் உடல் குழுமையாக இருக்கும்.
 
பேசில் இலைச்சாறு மாலைக்கண், மற்றும் கண் நோயிக்குச் சிறந்தது. இரவு படுக்கப் போகும் முன்பு ஒவ்வொரு கண்ணிலும் இரு சொட்டு பேசில் இலைச்சாறு தினமும் விட்டால் குணமடையும்..
 
பேசில் இலைச்சாற்றை வண்டுகடி உள்ள இடத்தில் தேய்த்தால் குணமடையும். மேலும் தோல் வியாதிகள் குணமடையும்.  வெண்புள்ளி (LEUCODERMA) நோய் உள்ளவர்கள் அதன் மீது தேய்த்தால் குணம் காண்பதாக இயற்கை மருத்துவர்கள் வெற்றி கண்டுள்ளனர்.
 
பேசில் இலையை வெய்யிலில் காயவைத்து, அதை நன்கு பொடி செய்து பல் பொடியாகப் பயன்படுத்தலாம். இந்தப் பொடியுடன் கடுகெண்ணெய் கலந்து நல்ல பசைபோல் உண்டாக்கி மூலிகை பேஸ்டாகப் பல் துலக்கலாம். இவ்வாரெல்லாம் செய்யும் போது வாய் துர்நாற்றம் போகும். மற்றும் ஈறுகள் , (treat pyorrhea) பலமடையும், பல் சம்பந்தப் பட்ட நோய்கள் வராமல் பாது காத்து உடல் நலமுடன் இருக்க துணையாக இருக்கும்.