அரசு:-
அரச மரம் பஞ்ச பூத்தில் ஆகாயத்தையும், வாதராயண மரம். காற்றையும், வன்னி மரம் அக்கினியையும், நெல்லி மரம். தண்ணீரையும், ஆலமரம் மண்ணையும் குறிப்பதாக கூறப்படுகிறது .
அரச மரத்தடியில் எங்கும் விநாயகரை காணலாம் .பௌத்தர்கள் அரசமரத்தடியில்
புத்தரை வைத்து வழிபட்டதாக கூறப்படுகிறது அரச மரம் அவர்களின் புனித மரம் .பின்பு பௌத்தம் மறைய தொடங்கியபோது புத்தர் இருந்த இடங்களை எல்லாம் விநாயகர் பிடித்துக் கொண்டார்.
அரச மரம், பெரிதாக வளரக்கூடிய ஒரு தாவரமாகும். சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இத் தாவரத்தின் அடி மரத்தின் விட்டம் 3 மீட்டர் வரை வளரக்கூடியது. இது இந்தியா, தென்மேற்குச் சீனா, இந்தோசீனா மற்றும் கிழக்கு வியட்நாம் போன்ற பகுதிகளைச் சார்ந்தது.
இதன் இலை நீண்ட கூரிய முனையுடன் கூடிய இதய வடிவம் கொண்டது.
Hindi pippal
Kan aswaththa
Mal arasal
Sans asvaththah
Tel ravi
Tamil arasu
சம்ஸ்கிருதத்தில் அஸ்வத்தம் என்பது அரசமரம்.
அரச மரக்குச்சிகள் இல்லாத ஹோமம், யாகமில்லை இதன் கிளையிலிருந்து உண்டாகும் அக்னியே அக்னிஹோத்ரத்திற்குப் பயன் படும். அரச மரத்தை வெட்டவோ எரிக்கவோ கூடாது
அரசமரத்திற்கு அரணி என்ற பெயரும் உண்டு அசுவம் என்றால் குதிரை. இந்த அரசமரத்திற்கும் குதிரைக்கும் ச்ம்பந்தம் இருக்கிறது. புராணங்கள் அரச மரத்தை மும்மூர்த்தி சொரூபமாகப் போற்றுகின்றன . அடிப்பகுதி பிரம்ம வடிவம் , நடுப்பகுதி விஷ்ணு சொரூபம் , மேல்பகுதி சிவ வடிவம் என்கிறது ஒரு சுலோகம் . மரங்களின் அரசனான அரச மரத்தை வலம் சுற்றி வணங்கும் போது :
மூலதோ பிரம்ம ரூபாய
மத்யதே விஷ்ணு ரூபிணே
அக்ரதச் சிவரூபாய
வ்ருக்ஷ ராஜாயதே நம :
என்ற சுலோகத்தைச் சொல்லி வணங்குதல் வேண்டும் .
அரச மரம் தனுசு ராசி மண்டலத்துடன் தொடர்பு கொண்டது. இந்த நட்சத்திரக் கூட்டத்தின் நல்ல மின்காந்த கதிர்வீச்சுக்களை ஈர்த்துத் தன் உடலில் நிரப்பி வைத்துக் கொண்டுஅதைத் தொடுபவர்களுக்கு .,சுற்றுபவர்களுக்கு வழங்குகிறது.
மருத்துவர்கள் அனைவரும் பயன்படுத்தும் மருத்துவ மரங்களில்
முதன்மையானது அரச மரமாகும்.
அதன் அணைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை. அரச மரத்தின் பட்டையைக் கஷாயமிட்டுக் குடித்து வந்தால் மூலம், மூலத்தால் வரும் பாதிப்புகள் கட்டுப்படும். காயங்கள், புண், சிரங்குகள், வெடிப்புகள் இருந்தால் அரச மரத்தின் இலைகளைக் கொண்டு
கட்டுக் கட்டலாம்.
அறிவியல் ரீதியாக மரங்கள் பகலில் பிராண வாய்வையும், இரவில் கரிமில வாய்வையும் வெளிப்படுத்துவதாக கூறுகிறார்கள். ஆனால் அரச மரம் பகலிலும்,இரவிலும் பிராண வாய்வை மட்டும் வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. ! சரியா எனப்பார்க்கவேண்டும் .
இலையை கஷாயமிட்டு குடித்தால் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள், சிறுநீர்ப்பை குறைபாடுகள் நலம் பெறும். அரச மரத்தின் பழம், இலைக் கொழுந்து, தண்டுப்பகுதி, வேர் இவற்றைச் சம அளவில் எடுத்து பாலில் கொதிக்க வைத்து சர்க்கரை, தேன் கலந்து
சாப்பிட்டால் தாம்பத்திய வாழ்க்கை இனிமையாக இருக்கும் அரச மரத்தின் தண்டுப் பகுதியைத் தனியாக எடுத்து, நிழலில் காய வைத்து அரைத்துப் பவுடராக்கி புண், வடுக்களின் மீது போடலாம். பசையாக்கி பற்றிடலாம். அரச மரத்தின் வேர்ப்பட்டையைக் கஷாயமிட்டு உப்பு மற்றும் வெல்லம் கலந்து குடித்தால் நாள்பட்ட, தீவிர வயிற்றுவலி கட்டுப்படும். அரச மரத்தின் கட்டையை கஷாயமிட்டு கக்குவான் இருமலுக்கு மருந்தாகத் தரலாம். ஆஸ்துமா, சர்க்கரைநோய் போன்றவற்றிற்கும் நல்ல மருந்தாக இவை விளங்குகின்றன.
இதுதவிர, இம்மரத்தின் அனைத்துப் பொருட்களும் வயிற்றுப் போக்கு, சீதபேதி, தீப்புண், தோல் தொற்றுப் பாதிப்புகள், புண் வடுக்கள், வெள்ளைப்படுதல், நரம்புத் தளர்ச்சிஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கிறது.
'அரச மரத்தைச் சுற்றியவுடன் அடி
வயிற்றைத் தொட்டுப் பார்த்துக்
கொண்டாளாம்'' என்ற பழமொழி
அரச மரத்தைச் சுற்றினால் போதும், குழந்தை உண்டாகிவிடும் என்று நம்பிக் கணவனின் அருகாமையை தவிர்த்து விடக்கூடாது என்றுதான் பழமொழி எச்சரிக்கிறது.
இம்மரத்தில் வளரும் புல்லுருவியை அரைத்து ஒரு எலுமிச்சை அளவு ,பிள்ளையில்லாத பெண்களுக்கு தர தூரம் போவதற்க்குன் முன்று நாள் தந்தாள் சூல் அமையும் .இந்த முறையை பதிவு செய்யவே இதில் எழுதுறேன் .
அரசனை நம்பி புருஷனை கைவிடவேண்டாம் என்றும் ஒரு பழமொழி உண்டு .இதிலும் அரசன் என்பது அரச மரத்தையே குறிக்கும் .இதுவும் கணவன் மார்களை காக்க வந்த பழ மொழிதான்
No comments:
Post a Comment