வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Thursday, 4 September 2014

அதிசயம் ஆனால் உண்மை...


அதிசயம் ஆனால் உண்மை...
உங்கள்
கைபேசி எண்ணை வைத்து உங்கள்
வயதை கணிக்கலாம்...
1)உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு எண்ணை எடுக்கவும்
2)அதை இரண்டால் (2) பெருக்கவும்..
3)அதனுடன் ஐந்தை (5) கூட்டவும்
4)கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும்
5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும்
6)அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும் (உ +ம்-1985,1987,1956 etc)
இப்பொழுது உங்களுக்கு (3 digit) ஒரு விடை கிடைத்திருக்கும்...
அதில் முதல் எண் உங்கள் மொபைலின் கடைசி எண்... 
மற்ற (2 digit) எண் உங்களின் வயது....!
செய்து பாருங்க. கண்டிப்பாக
ஆச்சரியப்படுவீங்கள

Sunday, 8 June 2014

அரசு:-


அரசு:-

அரச மரம் பஞ்ச பூத்தில் ஆகாயத்தையும், வாதராயண மரம். காற்றையும், வன்னி மரம் அக்கினியையும், நெல்லி மரம். தண்ணீரையும், ஆலமரம் மண்ணையும் குறிப்பதாக கூறப்படுகிறது .

அரச மரத்தடியில் எங்கும் விநாயகரை காணலாம் .பௌத்தர்கள் அரசமரத்தடியில் 
புத்தரை வைத்து வழிபட்டதாக கூறப்படுகிறது அரச மரம் அவர்களின் புனித மரம் .பின்பு பௌத்தம் மறைய தொடங்கியபோது புத்தர் இருந்த இடங்களை எல்லாம் விநாயகர் பிடித்துக் கொண்டார்.

அரச மரம், பெரிதாக வளரக்கூடிய ஒரு தாவரமாகும். சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இத் தாவரத்தின் அடி மரத்தின் விட்டம் 3 மீட்டர் வரை வளரக்கூடியது. இது இந்தியா, தென்மேற்குச் சீனா, இந்தோசீனா மற்றும் கிழக்கு வியட்நாம் போன்ற பகுதிகளைச் சார்ந்தது.

இதன் இலை நீண்ட கூரிய முனையுடன் கூடிய இதய வடிவம் கொண்டது. 

Hindi pippal
Kan aswaththa
Mal arasal
Sans asvaththah
Tel ravi
Tamil arasu
சம்ஸ்கிருதத்தில் அஸ்வத்தம் என்பது அரசமரம்.

அரச மரக்குச்சிகள் இல்லாத ஹோமம், யாகமில்லை இதன் கிளையிலிருந்து உண்டாகும் அக்னியே அக்னிஹோத்ரத்திற்குப் பயன் படும். அரச மரத்தை வெட்டவோ எரிக்கவோ கூடாது 
அரசமரத்திற்கு அரணி என்ற பெயரும் உண்டு அசுவம் என்றால் குதிரை. இந்த அரசமரத்திற்கும் குதிரைக்கும் ச்ம்பந்தம் இருக்கிறது. புராணங்கள் அரச மரத்தை மும்மூர்த்தி சொரூபமாகப் போற்றுகின்றன . அடிப்பகுதி பிரம்ம வடிவம் , நடுப்பகுதி விஷ்ணு சொரூபம் , மேல்பகுதி சிவ வடிவம் என்கிறது ஒரு சுலோகம் . மரங்களின் அரசனான அரச மரத்தை வலம் சுற்றி வணங்கும் போது :

மூலதோ பிரம்ம ரூபாய
மத்யதே விஷ்ணு ரூபிணே
அக்ரதச் சிவரூபாய
வ்ருக்ஷ ராஜாயதே நம :
என்ற சுலோகத்தைச் சொல்லி வணங்குதல் வேண்டும் .

அரச மரம் தனுசு ராசி மண்டலத்துடன் தொடர்பு கொண்டது. இந்த நட்சத்திரக் கூட்டத்தின் நல்ல மின்காந்த கதிர்வீச்சுக்களை ஈர்த்துத் தன் உடலில் நிரப்பி வைத்துக் கொண்டுஅதைத் தொடுபவர்களுக்கு .,சுற்றுபவர்களுக்கு வழங்குகிறது.

மருத்துவர்கள் அனைவரும் பயன்படுத்தும் மருத்துவ மரங்களில் 
முதன்மையானது அரச மரமாகும்.

அதன் அணைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை. அரச மரத்தின் பட்டையைக் கஷாயமிட்டுக் குடித்து வந்தால் மூலம், மூலத்தால் வரும் பாதிப்புகள் கட்டுப்படும். காயங்கள், புண், சிரங்குகள், வெடிப்புகள் இருந்தால் அரச மரத்தின் இலைகளைக் கொண்டு 
கட்டுக் கட்டலாம்.

அறிவியல் ரீதியாக மரங்கள் பகலில் பிராண வாய்வையும், இரவில் கரிமில வாய்வையும் வெளிப்படுத்துவதாக கூறுகிறார்கள். ஆனால் அரச மரம் பகலிலும்,இரவிலும் பிராண வாய்வை மட்டும் வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. ! சரியா எனப்பார்க்கவேண்டும் .

இலையை கஷாயமிட்டு குடித்தால் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள், சிறுநீர்ப்பை குறைபாடுகள் நலம் பெறும். அரச மரத்தின் பழம், இலைக் கொழுந்து, தண்டுப்பகுதி, வேர் இவற்றைச் சம அளவில் எடுத்து பாலில் கொதிக்க வைத்து சர்க்கரை, தேன் கலந்து 
சாப்பிட்டால் தாம்பத்திய வாழ்க்கை இனிமையாக இருக்கும் அரச மரத்தின் தண்டுப் பகுதியைத் தனியாக எடுத்து, நிழலில் காய வைத்து அரைத்துப் பவுடராக்கி புண், வடுக்களின் மீது போடலாம். பசையாக்கி பற்றிடலாம். அரச மரத்தின் வேர்ப்பட்டையைக் கஷாயமிட்டு உப்பு மற்றும் வெல்லம் கலந்து குடித்தால் நாள்பட்ட, தீவிர வயிற்றுவலி கட்டுப்படும். அரச மரத்தின் கட்டையை கஷாயமிட்டு கக்குவான் இருமலுக்கு மருந்தாகத் தரலாம். ஆஸ்துமா, சர்க்கரைநோய் போன்றவற்றிற்கும் நல்ல மருந்தாக இவை விளங்குகின்றன.

இதுதவிர, இம்மரத்தின் அனைத்துப் பொருட்களும் வயிற்றுப் போக்கு, சீதபேதி, தீப்புண், தோல் தொற்றுப் பாதிப்புகள், புண் வடுக்கள், வெள்ளைப்படுதல், நரம்புத் தளர்ச்சிஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கிறது.

'அரச மரத்தைச் சுற்றியவுடன் அடி 
வயிற்றைத் தொட்டுப் பார்த்துக் 
கொண்டாளாம்'' என்ற பழமொழி 
அரச மரத்தைச் சுற்றினால் போதும், குழந்தை உண்டாகிவிடும் என்று நம்பிக் கணவனின் அருகாமையை தவிர்த்து விடக்கூடாது என்றுதான் பழமொழி எச்சரிக்கிறது.

இம்மரத்தில் வளரும் புல்லுருவியை அரைத்து ஒரு எலுமிச்சை அளவு ,பிள்ளையில்லாத பெண்களுக்கு தர தூரம் போவதற்க்குன் முன்று நாள் தந்தாள் சூல் அமையும் .இந்த முறையை பதிவு செய்யவே இதில் எழுதுறேன் . 

அரசனை நம்பி புருஷனை கைவிடவேண்டாம் என்றும் ஒரு பழமொழி உண்டு .இதிலும் அரசன் என்பது அரச மரத்தையே குறிக்கும் .இதுவும் கணவன் மார்களை காக்க வந்த பழ மொழிதான் 

ஆலமரம்:


ஆலமரம்:


இந்தியாவில் ஆலமரம் இல்லாத கிராமமே பார்க்க இயலாது .அதுவும் ஒவ்வரு ஆலமரமும் மிகப் பழமையாக பாரம்பரிய தொடர்ச்சியும் கொண்டவை.

பெரிய மரமாக அடர்ந்து படர்ந்து இருப்பதினால் மட்டுமே ஆலமரத்தடியில் ஊர்க்கூட்டம் நடத்தபடுவதில்லை , மாறாக ஆலமரத்தடியில் சென்று அமர்ந்தாலே அமைதி வந்துவிடும் .தியானம் கூடிவிடும் .இது அனுபவ பூர்வமான உண்மை.

இம்மரத்தின் அடியில் தவம் இருப்பவர்களுக்கு ஞானம் பெற்றுத் தருவதில் ஆல மரத்துக்குத் தனி மகிமை உண்டு. இந்த மரத்தடியில் ஊர்கூட்டம் நடத்தினால் மக்கள் அமைதியாக உணர்ச்சிவசப்படாது இருப்பார் என்று நம் முனோர் அறிந்திருந்தனர் .

ஆல மரத்துப் பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகின்றன.

பொதுவாக ஆலமரம் என்றால் Ficus benghalensisஎனும் இனத்தையே குறிக்கும் 
Botanical Name : Ficus Benghalensis 
Family Name : Moraceae 
Common Name : Banyan, Vada Tree, Indian Banyan, Figuier Des Pagodes, East Indian Figtree

ஆலமரத்தின் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகிறது.
கனிகளை உலர வைத்து அரைத்து 12 கிராம் அளவு எடுத்துப் பாலுடன் கலந்து குடித்தால் இந்திரியம் திடப்படும். ஞாபகமறதி நீங்கும்.உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பது பழம் மொழி. ஆலமரக் குச்சிகளில் பற்களைத் தேய்த்து வந்தால் பற்களும் ஈறுகளும் வலிமை பெறும்.

பூக்கள்:

பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரை சேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை கூடும்.

விழுதுகள்:

தளர்ச்சியான மார்பகங்கள் சீர்படவும், கவர்ச்சி பெறவும் பயன்படுகின்றன. விழுதுகளின் தலைப்பகுதியில் மஞ்சளும், சிவப்பும் கலந்துள்ள பகுதிகளை எடுத்து அரைத்து மார்பகங்கள் மீது பூசினால் வளர்ச்சி பெறும். ஆலம் விழுதுகளை அரைத்து 1 கிராம் முதல் 3 கிராம் வரை சாப்பிட்டால் நீர்த்த இந்திரியம் கெட்டிப்படும்.

இலைகள்:

ஆலம் இலைகளை நிழலில் உலர வைத்து நன்றாக அரைத்துச் சம அளவு கலந்து, மாதவிலக்குப் பிரச்னைகளுக்கும், வெள்ளைப்படு நோய்க்கும் தரப்படும் சிறந்த மருந்தாகும்.
ஆலமரத்து வேர்ப்பட்டை 12 கிராம் அளவு எடுத்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, கஷாயமிட்டுக் குடிக்க வேண்டும். இதன் மூலம் சர்க்கரை நோய் குணம் பெறுகிறது.
சர்க்கரை நோய், காய்ச்சல், வெட்டை, கர்ப்பப்பை வீக்கம், உடலுறவின் போது வெகு சீக்கிரத்தில் இந்திரியம் வெளியாகுதல், புண், அதிக மாதவிடாய், இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும்.இம்மரத்தின் வேர் மீது உள்ள பட்டையை வெட்டி எடுத்துக் . இதைப் பவுடராக்கி மருந்தாகப் பயன்படுத்தலாம்.

வெட்டை நோயைக் குணப்படுத்த புதிய ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி அரைத்து, சம அளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை வேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வரலாம். மேலும், ஆண்களுக்கு ஏற்படும் துரிதஸ்கலிதம் நோயும் வெட்டை குணம்பெறும்.

புதிய ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை வேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்பாடு நோய் நலம் பெறும். கர்ப்பப்பை வீக்கத்தைக் குணப்படுத்த இதனை 6 கிராம் அளவு வரையில் பாலுடன் கலந்து கொடுக்கலாம்.

மரப்பட்டையை தண்ணீரில் நனைத்து அதன் சாற்றைக் குடிப்பதன் மூலம் சீதபேதியைக் குணப்படுத்தலாம். அளவுக்கு அதிகமாக மாதவிடாய்க் கழிவதையும் இது தடுத்து நிறுத்துகிறது.

கனிகளை நன்றாக உலர்த்தி, அரைத்து, 12 கிராம் அளவு பாலில் கலந்து கொடுக்கலாம். ஞாபக மறதியைப் போக்கவும் இந்திரியத்தைத் திடப்படுத்தவும் இவை மிகவும் உதவுகின்றது. கனியை நிழலில் உலர்த்தி பவுடராக்கி, சம அளவு சர்க்கரை கலந்து காலை, மாலை 5 கிராம் அளவில் கொடுத்து வந்தால் மூலம், சிறுநீர்ப்பை சம்பந்தமான குறைபாடுகள் குணப்படுகின்றது.

வெட்டை, மூலம், ஞாபக மறதி, இருமல், ஈறு வீக்கம், பேதியைக் கட்டுப்படுத்த பட்டை பயன் அளிக்கிறது.

ஆல மர விழுதுகளை அரைத்து 1 கிராம் முதல் 3 கிராம் வரையில் உண்ணக் கொடுக்கலாம். இதன் மூலம் இந்திரியம் தீர்த்துப் போதல், இந்திரியப் போக்கு போன்றவை குணப்படுகிறது.
ஆலமர விழுதுகளின் மெல்லிய இலைகள் ஆறு கிராம் அளவு எடுத்து தண்ணீரில் அரைத்து வடிகட்டி அதில் வெண்ணெய் கலந்து குடிக்கச் செய்தால் வாந்தி நின்றுவிடும்.
ஆலமர விழுதுகளை எரித்து தண்ணிரில் சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்துக் தெளிந்த நீரைக் குடிப்பதால் வாந்தி கட்டுப்படுகிறது.

ஆலமர இலைகளைக் கஷாயமிட்டு, அதனைப் பாகுபோல் செய்துகொண்டு சாப்பிடுவதால் இந்திரியத்தில் உயிரணுக்கள் எண்ணிக்கை குறைந்து போதல், ஞாபக மறதி நோய், கிரந்தி நோய்கள் குணப்படுகிறது.

ஆல இலைகளை எரித்து அதன் சாம்பலை வெற்றிலையுடன் சேர்த்துச் சாப்பிடுவது தவறான உடல் உறவினால் வரும் வெட்டை நோய்க்கு நிவாரணமாக அமைகிறது.

ஆல மரத்தின் ஒவ்வொரு பாகத்திலும் பால் வடியும். இதைச் சேகரித்து மருந்தாகப் பயன்படுத்தலாம். இது காது, மூக்கு, பல் நோய்கள், சீக்கிரத்தில் இந்திரியம் வெளியாகுதல், மூல நோய், கட்டிகள், வலிகள் நீங்க பயன் தருகிறது.

ஆலமரத்துப் பாலையும், எருக்கம்பாலையும் சம அளவில் கலந்து புண்களின் மீது வைத்துப் பூசுவதனால் புண்கள் ஆற விடுகின்றது.

வீட்டுக்கு ஒரு ஆல மரத்தை வளர்த்தால் அல்லது தெருவுக்கு , ஊருக்கு ஒரு ஆலமரத்தை வளர்த்தால் குளுமையும், ஆரோக்கியமும் கிடைக்கும். மேலும், மனப் பதட்டம் நீங்கி மனதிற்கு அமைதியும் கிடைக்கும்

சங்கு புஷ்பம் :-

சங்கு புஷ்பம் :-

சங்கு போன்ற அமைப்பில் பூ இருப்பதால் நீல நிற பூக்கள் பூக்கும் இந்த தாவரம் சங்கு கொடி என்று அழைக்கப்படுகிறது .இது பெரும்பாலும் அலங்காரக் கொடியாகவே வீடுகளில் படரவிடப்படுகிறது .ஆயினும் இந்தக் கொடிவகைத் தாவரம் சிறந்த மருத்துவ குணங்களையும் அடங்கியது. இது ஆசியாவில் தோன்றிய வகை தாவரமாக இருந்தாலும் அனைத்து ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்த்ரேலியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. பிலிப்பின், இந்தோனேசியாவில் மலேசியாவில்
அதிகம் . இதில் வெள்ளை பூ பூக்கும் விதமும் உண்டு 

தாவரப் பெயர் Ternatea ternatea (L.) 
குடும்பம் FABACEAE, (PAPINONACEAE)

இதர இந்திய மொழிகளில் வழங்கப்பட்டு பெயர்கள் 

Shankapushpi, 
shankupushpam, 
aparajit (Hindi), 
aparajita (Bengali), 
kakkattan (Tamil)

நீல மலருடையதைக் கறுப்புக் காக்கரட்டான் என்றும், வெள்ளைப் பூ உடையதை வெள்ளைக் காக்கரட்டான் என்றும் கூறுவார்கள் .

இதன் இலை வேர் விதைகள் மருத்துவ பயன் மிக்கவை .

காக்கரட்டான் விதைகள் மணம் உடையதாகவும் புளிப்புச்சுவையுடன் இருக்கும். 
இதன் குணம் சிறுநீர் பெருக்குதல், குடற் பூச்சிக் நீக்குதல் , , பேதி, வாந்தி, தும்மல், உண்டாக்குதல்.
நெறிக்கட்டிகள் வீங்கி இருக்கும் போதுசங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்து வர வியர்வை நீங்கும்.

சங்கு பூவின் இலைச்சாற்றைக் கொண்டு புடமிடதங்கம் பஸ்பமாகும்.
நீண்ட நாள் கப நோய்களுக்கு காக்கரட்டான் பட்டையை நன்கு இடித்து, சாறு பிழிந்து சிறிதளவு எடுத்து குளிர்ச்சியான பாலுடன் அருந்தி வர எளிதில் நிவாரணம் கிடைக்கும் 

காக்கட்டான் வேர்ப் பட்டையை ஊற வைத்த நீரை கால் டம்பளர் அருந்தி வர, சிறுநீர் 
நோய்களும் சிறுநீர்ப் பாதை எரிச்சல், வலி முதலிய நோய்களும் குணமாகும்.பை நோய்கள் குணமாகும் .
மேலும் இந்த கொடியின்
இலைகள் ஞாபக சக்தியை புத்திசாலித்தனத்தை 
வளர்க்கும் சக்தி கொண்டது நரம்பு சம்பந்தமான குறைகாயும் போக்கும் .
சில பழங்குடிகளிடம் இதை கரு நீக்க பயன் செய்தாலும் உண்டு .
இதன் இல்லை சாறு வயறு உப்புசத்தை போக்கும் .
தொண்டை புண்ணை ஆற்றும் .

The juice of the root is mixed with cold milk and is drunk to remove phlegm and for chronic bronchitis (1).
The roots are bitter, refrigerant, laxative, diuretic, anthelmintic and tonic and are useful in dementia, hemicrania, burning sensation, leprosy, inflammation, leucoderma, bronchitis, asthma, pulmonary tuberculosis, ascites and fever while the leaves are useful in otalgia and hepatopathy and the leaves, cathartic . The plant is considered useful for eye infections, skin diseases, urinary troubles, ulcers and has antidotal properties .

நமக்கு எளிதில கிடைப்பதால் இந்தன் அருமை நமக்கு புரிவதில்லை .தங்கத்தையே பஸ்மாக்கி சாப்பிடக்கூடிய தன்மை கொண்டது இந்தக் கொடி சளியை அப்படியே அறுத்து கொண்டுவந்துவிடும் இதன் வேர் சாறு.

சங்குன்னா சும்மாவா ! இனி இந்தக் கொடியைப் பார்த்தால் கொஞ்சம் மரியாதையோடு அணுகுங்கள் !

அத்திபழம்:-


அத்திபழம்:-

அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு உண்டு. சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மினரல் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன. 


அத்திபழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு உள்ளது. கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. இளம் பெண்கள் முதற்கொண்டு மாதவிடாய் காலம் முடிவுறும் நிலையில் உள்ள பெண்கள் வரை தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். 

கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும். கர்ப்ப காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊற வைத்த அத்திபழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாக பெறமுடியும். சரிவர பசி எடுக்காத குழந்தைகளுக்கு இதை கொடுக்க அவர்கள் பசி எடுத்து உண்பார்கள். 

சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நாட்பட்ட வறட்டு இருமல் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கொண்டது. உயரழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அத்திப்பழம் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

சீத்தாப்பழம்:-

சீத்தாப்பழம்:-


சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும். இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர்.
சீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.

மருத்துவ பயன்கள்:

1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.

2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.

3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.

4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்;து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.

5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.

6. சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.

8.சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.

9.சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.

10. சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.

11. இதில் 16.5% சர்க்கரை உள்ளது. கொழுத்த சதை உடையவர்கள் இப்பழத்தை சாப்பிட கூடாது.

பழங்களின் மருத்துவ குணங்கள்:-


பழங்களின் மருத்துவ குணங்கள்:-

1.செவ்வாழைப்பழம்:
கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்

2.பச்சை வாழைப்பழம்:
குளிர்ச்சியை கொடுக்கும்

3.ரஸ்தாளி வாழைப்பழம்:
கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.

4.பேயன் வாழைப்பழம்:
வெப்பத்தைக் குறைக்கும்

5.கற்பூர வாழைப்பழம்:
கண்ணிற்குக் குளிர்ச்சி

6.நேந்திர வாழைப்பழம்:
இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்

7.ஆப்பிள் பழம்:
வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது

8.நாவல் பழம்:
நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்

9.திரட்சை:
1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்

10.மஞ்சள் வழைப்பழ:ம்
மலச்சிக்கலைப் போக்கும்

11.மாம்பழம்:
மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்

12.கொய்யாப்பழம்:
உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புன் இருந்தால் குணப்படுத்தும்.

13.பப்பாளி:
மூல நோய், சர்க்கரை நோய், குடல் அலற்சி போன்றவைகளுக்கு சிறந்தது.

14.செர்ரி திராட்சை:
கர்ப்பப்பை வியாதிகளுக்கு நல்லது.

15. பேரீச்சம் பழம்:
இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும். எலும்புகளை பலப்படுத்தும்.

மங்குஸ்தான் பழம்:-


மங்குஸ்தான் பழம்:-

பொதுவாக பழங்கள் எல்லாம் விட்டமின்கள் நிறைந்தவை . எண்கள் உடம்புக்கும் நல்லது . சாப்பாட்டுக்கு பின் ஒரு பழம் சாப்பிடுங்கோ என்கிறார்கள் பெரியோர் . பழங்களில் இதுவும் ஒரு ருசியான பழம் தான் மங்குஸ்தான் பழம் .


இவை மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிப்பாக இருக்கும். இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும்.

மங்குஸ்தான் பழம் மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக இதனை வளர்க்கின்றனர். தமிழில் இந்த பழத்தை மங்குஸ்தான் என்று அழைக்கிறோம் . ஆங்கிலத்தில் மங்குஸ்தீன் என்று அழைக்கிறார்கள் .

சிறுவர்கள் முதல் பெரியோர் வரை எல்லோரும் ருசித்து உண்பார்கள் . எல்லோருக்கும் பிடித்த பழம் இந்த மங்குஸ்தான் . இந்த பழத்திலும் பல நன்மைகள் உண்டு . பல நோய்களுக்கு நிவாரணியாக இருக்கிறது . உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும், வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.

வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் ஏற்படும். இதனால் வாய் துர்நாற்றம் வீசும், மேலும் உண்ணும் உணவுப் பொருட்கள் பல் இடுக்குகளில் தங்கி விடுகின்றன. இதனால் உண்டாகும் கிருமிகளால் வாய் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

கணனியில் வேலை செய்யும் இளைய தலைமுறையினருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.
அதிகப்படியான உடல் கொழுப்பைக் குறைத்து மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு நோய்களைத் தவிர்க்க மங்குஸ்தான் பழச்சாறு குடிக்கலாம் என்று அமெரிக்க ஆய்வில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மங்குஸ்தான் பழச்சாறு பருகினால், சி-ரீயாக்டிவ் புரோட்டினின் அளவு நம் உடலில் கணிசமாகக் குறையும். உடல் எடை குறையும். நீண்ட ஆயுளும் கைகூடும்.

சிறுநீர் நன்கு வெளியேறினால் தான் உடலில் தங்கியுள்ள தேவையற்ற அசுத்த நீர் வெளியேறும். சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும். இருமலை தடுக்கும், சூதக வலியை குணமாக்கும், தலைவலியை போக்கும், நாவறட்சியை தணிக்கும்.

இவ்வாறான பல அரிய குணங்களை கொண்ட பழம் இந்த மங்குஸ்தான் பழம் . எல்லோரும் சாப்பிட்டு பயம் பெறுங்கள் . இந்த பழத்தை சாப்பிடாதவர்கள் வாங்கி சாப்பிட்டு பாருங்கள் . எல்லா நாட்களும் கடைகளில் கிடைக்காது . ஒரு பருவ காலத்தில் மட்டுமே கிடைக்கும் . மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு பாருங்கள் . அதன் ருசியை அனுபவியுங்கள் .

செர்ரி பழம்:-

செர்ரி பழம்:-


கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாமைனர் மண்டலங்களில் இருந்து உலகம் முழுமையும் பரவிய கனி, செர்ரி. ஏராளமான சத்துப் பொருட்களையும், நோய் எதிர்ப் பொருட்களையும் கொண்டுள்ள செர்ரி பழத்தின் சத்துப் பட்டியலை அறிந்து கொள்வோம். 

* இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது செர்ரி பழம். ரோஸ்யேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த இனிப்பு செர்ரியின் அறிவியல் பெயர் புருனஸ் அவியம், புளிப்பு செர்ரியின் அறிவியல் பெயர் புருனஸ் செரசஸ். 

* இனிப்பு மற்றும் புளிப்பு செர்ரி பழங்கள் இரண்டுமே உடலுக்கு நலம்மிக்க சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளன. செர்ரி பழங்கள் மிகக் குறைந்த ஆற்றல் வழங்குபவை. அதே நேரத்தில் ஊட்டச் சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது. 

* 'ஆன்தோசயனின் கிளைகோசிட்' எனும் நிறமி செர்ரியில் மிகுந்துள்ளது. இது அவற்றிற்கு நிறத்தை வழங்குவதுடன் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்படக் கூடியது. 

* உடலில் சைக்ளோஆக்சிஜனேஸ் 1, சைக்ளோஆக்சிஜனேஸ் 2 போன்ற நொதிகள் செய்யும் வேலையை 'ஆன் தோசயானின்' நிறமி செய்வதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நொதிகள் குடல் மற்றும் சிறுநீரகத்தை பாதுகாக்கும் பணிகளில் பங்கெடுக்கிறது. கீல் வாதம் மற்றும் சதைப்பிடிப்பு போன்ற பாதிப்புகளுக்கு எதிராகவும் இது செயல்படும். 

* புற்றுநோய், உடல் முதுமை அடைதல், நரம்பு வியாதிகள், நீரிழிவு போன்ற கொடிய பாதிப்புகளுக்கு எதிராக உடலை காக்கும் ஆற்றல் புளிப்பு செர்ரி பழத்திற்கு உண்டு. 

* 'மெலடானின்' எனும் சிறந்த நோய் எதிர்ப் பொருள் செர்ரி பழத்தில் இருக்கிறது. ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு மூளையில் கட்டி உண்டாதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதில் மெலடானின் பங்கு முக்கியமானது. இதுபோன்ற பாதிப்புகளில் வலியை கட்டுப்படுத்துவதிலும், நரம்பு மண்டல கோளாறுகள், இன்சோம்னியா போன்ற தூக்கமின்மை வியாதி, தலைவலி போன்றவற்றிற்கு எதிராகவும் மெலடானின் நோய்த் தடுப்புபணியை செய்கிறது. 

* பொட்டாசியம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாதுஉப் புக்கள் செர்ரி பழத்தில் நிறைந்துள்ளது. பொட்டாசியம் இதய செயல்பாட்டிற்கும், உடல் மற்றும் உடற்செல்கள் வளவளப்பு தன்மையுடன் இருக்கவும், இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் அவசியமான தாதுவாகும். 

* புளிப்பு செர்ரி பழத்தில் லுடின், ஸி-சான்தின், பீட்டாகரோட்டின் போன்ற ஆரோக்கியம் பழங்கும் ஆன்டி-ஆக்சி டென்டுகள் உள்ளன. இவை தீங்கு விளைவிக்கும்பிரீ-ரேடிக்கல்களை விரட்டி அடிப்பவை. வயது மூப்பு மற்றும் புற்றுநோய்களுக்கு எதிராகவும் செயலாற்றக் கூடியது. 

* மேற்கிந்திய தீவுகளில் கிடைக்கும் 'அசெரோலா' வகை செர்ரி பழங்கள், பிற நாடுகளில் கிடைக்கும் செர்ரி பழங்களைவிட 'வைட்டமின் சி' மற்றும் 'வைட்டமின் ஏ' மிகுதியாகக் கொண்டது. 100 கிராம் பழத்தில் 1677.6 மில்லிகிராம் 'வைட்டமின் சி'யும், குறிப்பிட்ட அளவில் 'வைட்டமின ஏ' யும் உள்ளது. 

சாப்பிடும் முறை:....... 

* செர்ரி பழங்களை நேரடியாக சாப்பிடலாம். 

* பீச் பழம், அன்னாசிப் பழம், திராட்சை போன்ற கனிகளுடன் செர்ரியை சேர்த்து பழக்கலவையாகவோ, பழ சாலட்டாகவோ செய்து சுவைக்கலாம். 

* கேக், ரொட்டி, பிஸ்கட், ஐஸ்கிரீம் தயாரிப்புகளில் உலர்த்தப்பட்ட செர்ரி சேர்க்கப்படுகிறது.

பேரிக்காய்:-


பேரிக்காய்:-


பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம் தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள்.

வெளித்தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம் தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது.


பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.

சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2 என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.

வளரும் குழந்தைகளுக்கு: வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது.

பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.

இதயப் படபடப்பு நீங்க: இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு: கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து.

வாய்ப்புண் குணமாக: வயிற்றில் புண் இருந்தால்தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு. தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.

சிறுநீரக கல்லடைப்பு நீங்க: இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.

அத்துடன் உடல் சூட்டைத் தணிக்கும், கண்கள் ஒளிபெறும், நரம்புகள் புத்துணர்வடையும் மற்றும் தோலில் ஏற்பட்ட பாதிப்புகளை குணப்படுத்தும், குடல், இரைப்பை இவைகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலை வலுவாக்கும்.

வெங்காயம்:-


வெங்காயம்:-


வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப்பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது. பைப்ரினோலிசின் என்ற பொருளை சுரந்து கொழுப்பு உணவு கள் மூலமாக ரத்த நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்பு களைக் கரைத்து விடுகிறது.

முருங்கைக்காயைத்தான் காய்கறிகளின் வயாகரா என்று சொல்லக் கேட்டு இருப்பீர்கள். அதில் உண்மையில்லை. அதை விட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம். இதில் அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் உள்ளன. தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியாகமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னசிலேயே இடம் பிடித்திருக்கிறார்.

மிகச்சிறிய குளவியோ, தேனீயோ கொட்டி விட்டால் உயிருக்கு ஆபத்தாகக் கூட முடிந்து விடுவது உண்டு. தேனீ போன்றவை கொட்டி விட்டால் இளம் வயதினர் துடித்துப் போவார்கள். ஆனால் வயதானவர்கள், தேனீ கொட்டி விட்டதா? வெங்காயத்தை எடுத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். வெங்காயத்தில் உள்ள ஒரு என்சைம் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப்பொருளை சிதைத்து விடுகிறது.

விஷத்தையும் முறித்து விடுகிறது. ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை வீட்டுக்குள் அனுமதிக்கத் தேவையில்லை என்பார்கள். அதைப்போல வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைககள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். வெங்காயத்தை பச்சையாக, சமைத்து, சூப் அல்லது சாலாடாக்கிச் சாப்பிடலாம்.

பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பார்கள். இவ்வாறு அடக்கி வைப்பதால் அதில் நுண்ணுயிர்களின் உற்பத்தி அதிகமாகி நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் போதும்.

வெங்காயம் கழிவுப்பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து எல்லாவற்றையும் வெளியே தள்ளி விடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும். யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியும். இத்தொல்லை இருந்தால் நிறைய வெங்காயம் சாப்பிடுங்கள், கற்கள் கரைந்து ஓடும். முதுமையில் வரும் மூட்டழற்சியை வெங்காயம் கட்டுப்படுத்தி விடுகிறது.

வெங்காயத்தையும், கடுகு எண்ணையையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்து விடும். எதற்கெடுத்தாலும் அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கு செலனியச் சத்து குறைவாக இருக்கும். இச்சத்து குறைவாக இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும்.

இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயம், பூண்டு போன்ற காய்கறிகளைச் சாப்பிட்டால் செலனியம் சத்து கிடைக்கும். மனநிலையில் சமநிலை உண்டாகும். சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி சளிப்பிடிக்கும். இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் இருக்கும்.

இதைத் தவிர்க்க சுலபமான வழி, வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவது தான். உடல் எடை அதிகமாக இருந்தாலும் கூட அதை வெங்காயம் குறைத்து விடும். புற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்துப் பொருள் வெங்காயம் புகைத்தல், காற்று மாசு, மன இறுக்கம் போன்றவைகளால் ஏற்படும் செல் இறப்புகளை, செல் சிதைவுகளை இது சீர்படுத்தி விடுகிறது. 

மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றையும் நீக்குகிறது. முகச்சுருக்கம், சருமம் தொங்குதல் போன்றவற்றை வெங்காயத்திலுள்ள புரோட்டீன்கள் தவிர்க்கின்றன. வெயிலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் வெப்பத்தாக்கிலிருந்து தப்ப விரும்பினால் வெங்காயத்தை உள்ளங்கை, கன்னங்கள், வயிறு, குதி கால் போன்ற இடங்களில் தடவிக் கொள்ளலாம்.

பெரியவெங்காயம், சின்ன வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும் இரண்டுமே ஏறக்குறைய ஒரே பலன் தருபவை தான். ஆனால் வைத்தியத்தில் சின்ன வெங்காயத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதற்கு மெடிசின் வெங்காயம் என்றே பெயர். வெங்காயத்தை சாப்பிடுங்கள், நோய் இல்லாமல் வாழுங்கள்.

அம்மான்பச்சரசி:-


அம்மான்பச்சரசி:-

1) வேறுபெயர்கள் -: சித்திரப்பாலாடை.

2) தாவரப்பெயர் -: EUPHORBIA HIRTA.

3) தாவரக்குடும்பம் -: EUPHORBIACEAE.


4) வகைகள் -: பெரியமான் பச்சரிசி, சிற்றம்மன் பச்சரசி,சிவப்பம்மான் பச்சரிசி, வெள்ளையம்மான் பச்சரிசி,வயம்மாள் பச்சரிசி.

5) வளரும் தன்மை -: ஈரமுள்ள இடங்களில் தானே வளரும். சிறு செடி. எதிர் அடுக்கில் கூர்நுனிப்பற்களுடன் கூடியஈட்டி வடிவ இலைகளையுடையது. பால் உள்ளவை. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது.விவசாய நிலங்களில் கழையாக வளரும். விதை மூலம் இனப்பெருக்கம் அடைகிறது.

6) பயன்தரும் பாகங்கள் -: இலை, தண்டு, பால், பூ, ஆக்கியவை.

7) பயன்கள் -: அம்மான் பச்சரிசிக்கு எரிபுண், மல பந்தம், பிரமேகக்கசிவு, சரீரத்துடிப்பு, நமச்சல் ஆகியவை போகும்.

இந்த மூலிகையை சுமார் நெல்லிக்காய் பிரமாணம் நன்றாய் அரைத்து பாலில் கலந்து தினம் ஒரு வேளை மூன்றுநாட்கள் கொடுக்க அரத்த பிர்ழியம், மலபந்தம், நீர்கடுப்பு,தேகநமச்சல், ஆகியவை நீங்கும். இதன் பாலை நக சுற்றிக்குஅடிக்க குணமாகும்.

சிவப்பு அம்மான் பச்சரிசி மூலிகைக்கு வாதம், பிரமேகம்,ஆகியவை போகும். சுக்கில தாது விர்த்தியாகும். இதைவெள்ளிபஸ்பம் என்றும் கூறுவர்.
இதை நிழலில் உலர்த்தி இடித்து சூரணம் செய்து வைத்துக்கொண்டு 5 - 7 குன்றி எடை வீதம் மோரில் கொடுக்க குழந்தைகளுக்கு மலத்தை போக்கும், வயிற்று உபத்திரவத்தையும், கிருமிக் கூட்டத்தையும் ஒழிக்கும். இந்த இலையை அரைத்து சுமார் 1- 1.5 கழற்சிக்காய்ப் பிரமாணம் பால் அல்லது மோரில் கலக்கிப் பெரியவர்களுக்குக் கொடுக்க வேட்டை, வெள்ளை, மருந்துகளின் உஷ்ணம் ஆகியவைபோகும். அரைத்து ஊறலுடன் பரவுகின்ற படைகளுக்குப்பூச குணமாகும்.

இது வயிற்றுப்பூச்சி அகற்றியாகவும், மலமிளக்கியாகவும்,வெப்புத் தணிப்பானாகவும், சதை நரம்புகளில் வீக்கம்குறைப்பானாகவும், செயற்படும்.
இலையை சமைத்து உண்ண வறட்சி அகலும், வாய், நாக்கு, உதடு, ஆகியவற்றில் வெடிப்பு ரணம் தீரும்.

தூதுவேளை இலையுடன் துவையல் செய்து சாப்பிடத்தாது உடல் பலப்படும்.
கீழாநெல்லியுடன் சமன் அளவு இலை சேர்த்து காலை, மதியம், இரு வேளையும் எருமைத் தயிரில் உண்ணஉடம்பு எரிச்சல், நமைச்சல், மேகரணம், தாது இழப்புதீரும்.

பூவுடன் 30 கிராம் அரைத்து கொட்டைப் பாக்களவு பாலில் கலந்து ஒரு வாரம் கொடுக்கத் தாய் பால்பெருகும்.

பாலைத் தடவி வர முகப்பரு, பால்பரு மறையும். கால் ஆணி வலி குறையும். இலையை நெல்லிக்காய் அளவு நன்கு அரைத்துபசும் பாலில் கலக்கிக் காலையில் மட்டும் மூன்று நாட்கள் கொடுக்கச் சிறு நீருடன் குருதிப்போக்கு, மலக்கட்டு, நீர்கடுப்பு, உடம்பு நமச்சல் ஆகியவை தீரும்.

அரிவாள்மனைப் பூண்டு:-

அரிவாள்மனைப் பூண்டு:-

1. மூலிகையின் பெயர் -: அரிவாள்மனைப் பூண்டு.

2. தாவரப் பெயர் -: SIDA CARPINIFOLIA.

3. தாவரக்குடும்பம் -: MALVACEAE.

4. வேறு பெயர்- BALA PHANIJIVIKA.

5. பயன்தரும் பாகங்கள் -: இலை, விதை, வேர் முதலியன.

6. வளரியல்பு -: அரிவாள்மனைப் பூண்டு எல்லாவித மண்ணிலும் வளரும். ஆனால் செம்மன் நிலத்தில் நன்கு வளமுடன் வளரும். கூர் நுனிப் பற்கள் கொண்ட ஆப்பு வடிவ இலைகளை உடைய மிகக்குறுஞ் செடியினம். மாரிக் காலத்தில் தமிழகமெங்கும் சாலையோரத்தில் தானே வளரும். குருதிக் கசிவைத் தடுக்கும் மருந்தாகச் செயற்படும். இது விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.


7. மருத்துவப் பயன்கள் -: இதன் வேர் பொடி நரம்புத் தளர்ச்சியை போக்க வல்லது. ஞாபகச் சக்தியை கூட்ட வல்லது. ஆண்,பெண் சிறு நீர் கழிக்கும் பாதையை சுத்தப் படுத்த வல்லது. தகாத உடல் உறவால் ஏற்படும் தொற்று வியாதிகளைக் குணப்படுத்தும்.

ஒரு தேக்கரண்டிப் பொடியை தினமும் உணவிற்குப் பின் 2 வேளை பெண்கள் உட்கொண்டால் உடல் பலஹீனம் ஆவதைக் கட்டுப்படுத்தும்.

இதன் பொடி அரைத் தேக்கரண்டியுடன் தேன் சேர்த்து உரத்த குறலில் பேசியும், மேல்கட்டை பாடலாலும் தொண்டையில் ஏற்பட்ட வரட்ச்சி, கம்மல் ஆகியவற்றை குணமாக்கும்.

இதன் வேர், விதை இவைகளை இரண்டுக்கு ஒன்று என்ற விகித த்தில் கலந்து பொடி செய்து சர்கரையுடன் சேர்த்துத் தினம் 3 வேளை சாப்பிட்டால் ஒரு வாரத்தில் உடலில் ஏற்படும் எரிச்சில் குணமாகும்.

இதன் வேரை எடுத்துத் துண்டுகளாக வெட்டி ஒரு லிட்டர் தண்ணீரில் காய்ச்சி சுண்ட வைத்து கால் லிட்டர் ஆனவுடன் அந்தக் கசாயத்தை சாராயம் அருந்தித் தொண்டையில் எரிச்சல் உள்ளவர்கள் தினம் இரு வேளை 2 அவுன்ஸ் வீதம் ஒரு வாரம் குடித்தால் குணமடைவர்.

இதன் பொடி 10 கிராம் எடுத்து 80 மி.லி. நீரில் கொதிக்க வைத்து 20 மி.லி. யாகக் காய்ச்சி வடிகட்டி ஒரு கப் காலை மட்டும் குடித்து வர மூக்கு, வாய் மற்றும் உடலில் ஏற்படும் இரத்த ஓட்டத்தைக் கட்டுப் படுத்தும்.

அரிவாள்மனைப் பூண்டின் இலையைக் கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய இரத்தப் பெருக்கு நிற்கும்.

அரிவாள்மனைப் பூண்டின் இலையுடன் சம அளவு குப்பை மேனி இலை, பூண்டுப் பல் 2, மிளகு 3 சேர்த்து அரைத்து புன்னைக் காய் அளவு உள்ளுக்குக் கொடுத்து காயத்திலும் கட்ட நஞ்சு முறியும். அப்போது உப்பு, புளி நீக்க வேண்டும்.

அரிவாள் மூக்குப் பச்சிலையைக் காரமில்லாத தட்டை அம்மிக் கல்லில் வைத்து வெண்ணெய் போல் அரைத்து வெட்டுப் பட்ட காயங்களுக்குத் தடவச் சீலைக் கொண்டு அழுத்திக் கட்ட இரத்தம் சொரிதல் நீங்கி விரைவில் ஆறும். இந்த இலையுடன் சிறிது மிளகு பூண்டு கூட்டி அரைத்து வேளைக்கு சிறு சுண்டைக்காய் பிரமாணம் அந்தி சந்தி 3 நாள் கொடுத்துப் பாற் பத்தியம் வைக்கக் கடுமையான விஷங்கள் இறங்குவதுடன் தலை வலியும் நீங்கும்.

அஸ்வகந்தா:-


அஸ்வகந்தா:-


1)மூலிகையின் பெயர் -: அஸ்வகந்தா.

2)தாவரப்பெயர் -: WITHANIA SOMNIFERA DUNAL.

3) தாவரக் குடும்பம் -: SOLANACEAE.

4) வேறு பெயர்கள் -: அமுக்குரா, இருளிச்செவி, வராககர்ணி, இடிச்செவி.

5) வகைகள் -: ஜவகர் அஸ்காந்த்-20

6) பயன் தரும் பாகங்கள் -: வேர் மற்றும் விதைகள்.

7)வளரியல்பு -: அஸ்வகந்தாவின் பிறப்பிடம் வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா. பின் பரவிய இடங்கள் மத்தியப்பிரதேசம், பஞ்சாப், சிந்து, ராஜஸ்தான் மற்றும் கர்நாடக, தமிழ்நாடு. இது களர்,தரிசு, உவர் மற்றும் மணல் சாகுபடிக்கு ஏற்ற நிலம். குறைந்த மண் வளமுடைய நீமுச், மன்சூர், மனாசா போன்ற இடங்களிலும் பயிர் செய்யப் படுகிறது. இது ஒரு குறுஞ்செடி 1.5 அடி உயரம் வரை நேராக வளர்க்கூடியது. மத்தியப்பிரதேசத்தில் கிட்டத்தட்ட 4000 ஹெக்டர் பரப்ளவில் பயிரடப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் மைசூர், கோயமுத்தூர், திருநெல்வேலி, ஆகிய இடங்களில் பயிரிடப் படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வட ஆப்பரிக்க மெடிட்டரேனியன் பகுதிகளிலும் இயற்கையாக வளரவல்ல இந்த மூலிகையின் மற்றொரு ரகமும் உண்டு அது 2-4 அடி வரை வல்ல குறுகிய சாம்பல் நிறமுடைய ஒரு குற்று மரம். இதனை பஞ்சாப், சிந்து மற்றும் இதனை ஒட்டிய பிற மாநிலங்களிலும் காணலாம். விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. விதைத்த 150-170 நாட்களில் பயிர் அறுவடைக்குத் தயாராகிவிடும். பிடுங்கி வேர், தண்டுப் பாகத்தைப் பிரித்தெடுக்க வேண்டும். வேர்கள் உலர வைத்து 4 ரகங்களாகப் பிறிப்பார்கள். முதிர்ந்த காய்களிலிருந்து விதைகளைப் பிறித்தெடுப்பார்கள். இவைகள் மருத்துவ குணமுடையவை.

8) மருத்துவப் பயன்கள் -: இதன் வேர்கள் மூட்டுவலி, வாதம், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப் புண் இவைகளைக் குணப்படுத்தும். வேர், இலை, விதை மற்றும் பழமென அனைத்திலும் ஆல்கலாய்டுகள் இருப்பதால் இதனை சித்தா, யுனானி, அலோபதி உட்பட மருந்துக்கென பயன்படுத்தப் படுகின்றன. பாலுணர்வை அதிகரிக்கப்பதற்குப் பயன் படுகிறது. 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் உடல் பலவீனம், கை, கால், சோர்வு இவைகளை நீக்கி, அதிக வலிமையையும் சக்தியினையும் தருகிறது.

முறை -: அசுவகந்திக் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கிப் பசுவின் பாலில் அவித்து உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து சமனெடை சர்க்கரை கூட்டிப் புட்டியில் பத்திரப் படுத்துக. வேண்டும் போது இச்சூரணத்தை வேளைக்கு ஒரு வராகனெடை வீதம் தினம் இரண்டு வேளை பசுவின் பாலில் கலக்கிக் கொடுக்கத் தேக வனப்பை உண்டாக்குவதுடன் தேகத்திலுள்ள துர் நீர், கபம், சூலை, கரப்பான், பாண்டு, மேக அழலை, வெட்டை, வீக்கம், கட்டி, பித்த மயக்கம் முதலியவற்றை நீக்கும். இன்னும் அசுவகந்திக் கிழங்குடன் சுக்கு சேர்த்து அரைத்துக் கட்டி வீக்கும் முதலியவற்றுக்குப் பத்துப் போடக் கரையும். இவையுமன்றி இதனுடன் இதர சரக்குகளைக் கூட்டிச் சில அவிழ்தங்கள் செய்வதுண்டு.

அசுவகந்திச் சூரணம் -: கிராம்பு 1, சிறு நாகப்பூ 2, ஏலம் 3, இலவங்கப் பட்டை 4, இலவங்கப் பத்திரி 5, சீரகம் 6, தனியா 7, மிளகு 8, திப்பிலி 16, சுக்கு 32, பாலில் அவித்து சுத்தி செய்த அசுவகந்திக் கிழங்கு 64, ஆகிய இவற்றை வராகனெடையாக நிறுத்துக் கொண்டு கல்லுரலில் இட்டுக் கடப்பாறையால் நன்கு இடித்து வஸ்திரகாயஞ்செய்து இவற்றின் மொத்தெடைக்கு நிகரான வெள்ளைச் சர்க்கரை கூட்டிப் புட்டியில் பத்திரப் படுத்துக. வேண்டும் போது வேளைக்கு கால் அரைத் தோலா வீதம் தினம் இரு வேளை 20-40 நாள் கொடுக்க மேகம், அஸ்திசுரம், அஸ்திவெட்டை சுவாசம், ஈளை, பாண்டு, மேக ஊறல் முதலியவை நீங்கும்.

அசுவகந்தித் தைலம் -: சுத்தி செய்த அசுவகந்திக் கிழங்கு பலம் 10, சற்றாமுட்டி வேர் பலம் 10, இவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கி, இடித்து ஒரு பழகிய தைல பாண்டத்தில் போட்டு 12 படி சலம் விட்டு அதற்குள் 10 பலம் கொம்பரக்குத் தூளைத் தளர்ச்சியாக சீலையில் முடிந்து பாண்டத்தின் அடி மட்டத்திற்கு மேலே 4 விரல் உயரத்தில் நிற்கும் படி தோலாந்திரமாகக்கட்டி அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரிக்கவும். இந்த மண் பாண்டத்தில் விட்ட சலமானது நன்றாய்ச் சுண்டி மூன்று படி நிதானத்திற்கு வரும் சமயம் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விட்டு மறு பாண்டத்தில் வடித்து வைத்துக் கொள்க. அப்பால் முன் கியாழமிட்ட பாத்திரத்தைச் சுத்தப்படுத்தி அதனில் நல்லெண்ணெய் படி 2 ததிமஸ்து (பசுவின் தயிரைச் சீலையில் முடிச்சுக் கட்டி வடித்தெடுத்த சலம்) படி 1 முன் சித்திப் படுத்திய கியாழம் விட்டு உறவாகும் படி கலக்கி அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரிக்குந் தறுவாயில் சிற்றரத்தை, நன்னாரி, தேவதாரம், பூலாங்கிழங்கு, பூஞ்சாத்துப் பட்டை, கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல், கண்டந்திப்பிலி வகைக்கு பலம் அரைக்கால் வீதம் இடித்து வஸ்திரகாயம் செயுது பால் விட்டு அரைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறிக் கொடுக்கவும். தைலமானது நன்றாய் கொதித்து வண்டல் மெழுகு பதம் வருஞ்சமயம் கீளே இறக்கி ஆற விட்டு வடித்து சீசாவில் அடைத்துத் தானிய புடம் வைத்து எடுத்துக் கொள்க. வாரம் ஒரு முறை தலைக்கிட்டுக் குழிக்க கப சம்பந்தமான ரோகம், சுர, குணமாகும், தேகம் இறுகும், கண் தெளிவடையும். இதற்குப் பத்தியம் பகல் நித்திரை, அலைச்சல், தேக உழைப்புக் கூடாது.