வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Thursday, 24 October 2013

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவுகள்:-

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவுகள்:-

பொதுவாக உடல் ஆரோக்கியமானது இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளன. ஏனெனில் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கு இரத்தமானதுதான் மிகவும் இன்றியமையாதது. எனவே அத்தகைய இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, உடலின் உறுப்புக்கள் மெதுவாக பாதிக்கப்படும். இவ்வாறு அதிகப்படியான நச்சுக்கள் இரத்தத்தில் இருந்தால் தான், அலர்ஜி, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, தொடர்ச்சியான தலை வலி, சோர்வு போன்றவை ஏற்படும்.

அதுமட்டுமின்றி, அசுத்த இரத்தமானது உடலில் இருந்தால், உடலில் மட்டுமின்றி, சருமத்திலும் பல பிரச்சனைகள் ஏற்படும். அதில் பிம்பிள், முகப்பரு, கருமைப் படிதல், பொலிவிழந்த சருமம் மற்றும் வறட்சியான சருமம் போன்றவை ஏற்படும். எனவே தான், கடைகளில் இரத்தத்தை சுத்திகரிக்கும் பல்வேறு மருந்துகள் உள்ளன. ஆனால் இந்த மருந்துகளால் எந்த நன்மையும் கிடைப்பதில்லை. ஆகவே இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுகளை சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, உடலில் இரத்தத்தை சுத்திகரிக்கும்

கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நிணநீர் நாளங்கள் நன்கு செயல்பட்டு, இரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலில் இரத்தத்தை சீராக ஓட வைக்கும். இங்கு இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவுகளைக் பார்ப்போம். அதைப் படித்து, அவற்றை உணவில் சேர்த்து வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, சருமமும் நன்கு அழகாக மின்னும் என்று உறுதிபட கூறுகிறார்கள்.

அதாவது வாரம் 2-3 முறை ஒரு டம்ளர் முட்டைகோஸ் ஜூஸை குடித்து வந்தால், உடலில் உள்ள இரத்தமானது சுத்தமாகும்.

பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான காலிஃப்ளவரில் குளோரோஃபில் என்னும் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பொருள் அதிகம் உள்ளது. ஆகவே இந்த உணவுப்பொருளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

கசப்புத் தன்மையுடைய பாகற்காய் அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். அதிலும், பாகற்காயை வேக வைத்து சாப்பிட்டால் தான், அதன் முழு நன்மையைப் பெற முடியும்.

வாரத்திற்கு 2 முறை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு, அந்த நீரை பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் மட்டுமின்றி, கிருமிகளும் அழிந்துவிடும்.

பூண்டு ஒரு சிறந்த ஆன்டி-பயாடிக் மட்டுமின்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மையும் கொண்டது. மேலும் இது உடலில் தங்கியுள்ள நச்சுகளை மட்டுமின்றி, தேவையற்ற கொழுப்புக்களையும் கரைத்துவிடும்.

கேரட் சாப்பிட்டால், சருமம் பொலிவாக இருக்கும் என்று சொல்வார்களே, அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் கேரட் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும் என்பதால் தான். ஆகவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடித்து, ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருங்கள்.

எலுமிச்சையில் உள்ள புளிப்புத்தன்மை இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் உள்ள அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். மேலும் இது உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

பழங்களில் அன்னாசிப் பழம் இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. ஆகவே அன்னாசியை டயட்டில் சேர்த்து, இரத்தத்தை மட்டுமின்றி, சிறுநீரகத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இஞ்சி டீயை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தாலும், இரத்தம் சுத்தமாக இருக்கும்.

சிறுநீரகத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுத்தப்படுத்தும் தன்மை பார்ஸ்லியில் அதிகம் உள்ளது. மேலும் இது இரத்தத்தை சுத்தப்படுத்தும் வைத்தியங்களில் மிகவும் பிரபலமான பொருளும் கூட.

நெல்லிக்காயிலும் இரத்தத்தை சுத்திகரிக்கும் பொருள் அதிகம் நிரம்பியுள்ளது. ஆகவே தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு, இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment