வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Sunday, 1 December 2013

இந்தியாவில் என்.ஆர்.ஐ.க்கள் சொத்து வாங்க முடியுமா?

 
NRI's can buy property in Indiaவெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் மனை, வீடு வாங்க முடியுமா? ஏன் முடியாது. நிச்சயம் வாங்க முடியும். இந்திய ரியல் எஸ்டேட் துறையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்ய அதிகமாகவே அனுமதிக்கப்படுகின்றனர். அதற்காகவே ரிசர்வ் வங்கி மற்றும் எஃப்இஎம்எ (FEMA) நிறைய விதிமுறைகளை வகுத்துள்ளன. மேலும் இதில் கீழ்காணும் விதிமுறைகள் உள்ளன:
* விவசாய நிலங்கள், பண்ணை வீடுகள் மற்றும் விவசாயம் சார்ந்த சொத்துக்களைத் தவிர, மற்ற அசையாச் சொத்துகளை வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாங்கலாம்.
* இந்தியாவில் வாழ்ந்து வரும் இந்தியக் குடிமகனிடமிருந்தோ வெளிநாட்டில் வாழ்ந்து வரும் இந்தியக் குடிமகனிடமிருந்தோ வெளிநாட்டில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்தோ, ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் இங்குள்ள அசையாச் சொத்துக்களை அன்பளிப்பாகப் பெறலாம்.
* வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்களது பரம்பரைச் சொத்துக்களை இங்கு பெறஅனுமதி உண்டு.
* வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் அசையாச் சொத்துக்களை, இந்தியாவில் வசிப்பவர்களுக்கு விற்பனை செய்யலாம்.
* வெளிநாடு வாழ் இந்தியர்கள், இங்குள்ள தங்களது விவசாய நிலங்கள், பண்ணை வீடுகள் மற்றும் விவசாயம் சார்ந்த நிலங்கள் போன்றவற்றை, இந்தியாவில் வாழ்பவர்களுக்கு அன்பளிப்பாக வழங்க அனுமதி உண்டு.
* வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் இருக்கும் தங்களது வீடுகள் அல்லது வியாபார சொத்து போன்றவற்றை இந்தியாவில் வாழ்பவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளில் வாழும் இந்தியக் குடிமக்களுக்கோ அல்லது வெளிநாடுகளில் வாழந்து வரும் இந்திய வம்சாவளியினருக்கோ அன்பளிப்பாக வழங்க அனுமதி உண்டு.
ஒன்றுக்கொன்று ஆதரவு
இந்தியாவில் சொத்துக்களை வாங்க, இந்திய நிதி நிறுவனங்கள் தங்களுக்கு மிக எளிதாக கடன் தருவதாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில் இந்திய நிதி நிறுவனங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களை தங்களின் முக்கியமான வாடிக்கையாளர்களாக கருதுகின்றன. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, இந்திய நிதி நிறுவனங்கள் மிக எளிதாக, விரைவாக வீட்டுக் கடனை வழங்குகின்றன. ஏனெனில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வீட்டுக் கடனை சரியான நேரத்தில் செலுத்துகின்றனர் என்பதே இதற்கு காரணம்.
தற்போது இந்தியாவில் சொத்துக்களை வாங்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வீட்டுக் கடன் பெறுவதற்கு ஏதுவாக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு சில விதிமுறைகளை வகுத்திருக்கிறது.
அதாவது ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் இந்தியாவில் வீடு வாங்க, வீட்டுக் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தால், நிதி நிறுவனங்கள் 80 சதவீதக் கடன் தொகையை மட்டுமே வழங்க வேண்டும். மீதித் தொகையை வெளிநாடு வாழ் இந்தியர்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.
கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த, ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் தான் வசிக்கும் இடத்திலிருந்தே வங்கிகளின் மூலமாக அதாவது என்ஆர்ஒ அல்லது என்ஆர்இ வங்கிக் கணக்குகள் மூலமாகச் செலுத்தலாம்.
மேற்சொன்ன வங்கிக் கணக்குகள் மூலம் மட்டுமே வெளிநாடு வாழ் இந்தியர் தனது கடன் தொகையையும் அதற்கான வட்டித் தொகையையும் செலுத்த வேண்டும்.
வரி செலுத்துவது அவசியம்
வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் வாங்கும் சொத்துக்களைப் பதிவு செய்யும்போது அதற்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் மற்றும் வரிகளைச் செலுத்த வேண்டும்.
அதே நேரத்தில் அவர்கள் இந்தியர்களாக இருப்பதால், அதற்கான சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. எனினும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் சொத்துக்களை குத்தகைக்கு விட்டால் அதற்கான வரிவிதிப்புகள் கடைபிடிக்கப்படுகின்றன. அதாவது குத்தகைப் பணம் சொத்திலிருந்து வரும் வருமானத்திற்கு வரியைச் செலுத்த வேண்டும்.
மேலும் அவ்வாறு அவர்கள் தங்களது சொத்துகள் மூலம் வருமானம் பெறும் போது, அவர்கள் வாழ்கின்ற நாடுகள் இந்தியாவோடு டபுள் டாக்ஸ் அவாய்டன்ஸ் ஒப்பந்தம் செய்யாமல் இருந்தால், அவர்கள் வசிக்கும் நாடுகளிலும் வரி செலுத்த வேண்டும்.
ஆனால் வீட்டுக் கடனுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் செலுத்தும் வட்டித் தொகைக்கு அவர்கள் வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர்.
அதுபோல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் உள்ள சொத்துக்களை விற்கும்போது, வருமானவரி சட்டத்தின் கீழ் அவர்கள் கேபிட்டல் கெயின் வரியைச் செலுத்த வேண்டும்.
இப்படி வெளி நாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் சொத்து வாங்க முடியும்.
வெளி நாடுவாழ் இந்தியர்களை ரியல் எஸ்டேட் துறையில் அனுமதிப்பதன் மூலம் இத்துறை மேலும் வளரும் என்று இத்தொழில் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

லினக்ஸ் பற்றி முக்கிய தகவல்கள்.

linux logoஉலகம் முழுவதும் இன்று விண்டோஸை மக்கள் அதிகம் பயன்படுத்தி வந்தாலும் லினக்ஸ் என்ற ஒன்றையும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.  லினக்ஸ் ஆரம்ப காலத்தில், தொழில் நுட்ப ஆய்வாளர்கள் மட்டுமே விரும்பிப் பயன்படுத்திய சிஸ்டமாக லினக்ஸ் இருந்து வந்தது.
பின்னர் சாதாரணப் பயனாளரும் இதனைப் பயன்படுத்தலாம் என்ற நிலை உருவாகிப் பலரின் விருப்பமான சிஸ்டமாக லினக்ஸ் உருவானது.  இன்று கம்ப்யூட்டர் உலகில் உலா வரும் பெரும்பாலான வைரஸ்கள் மற்றும் மால்வேர் தொகுப்புகள் விண்டோஸ் இயக்கத்தினையே குறி வைத்து உருவாக்கப்பட்டு இயங்குகின்றன. இவை லினக்ஸ் சிஸ்டத்தில் ஊடுறுவிச் செயல்படுவது அரிதாகவே உள்ளது. லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் இன்னொரு சிறப்பு, இது முழுமையாக இலவசமாகக் கிடைப்பதுதான்.
லினக்ஸ் சிஸ்டத்தின் பலவகையான பதிப்புகள் இன்று அதிக அளவில், வல்லுநர்களால் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன.   இவற்றை மிக எளிய வகையில் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்தலாம். விண்டோஸ் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் ஒப்பிடுகையில், இந்த இலவசம் என்பது அனைவரையும் ஈர்க்கும் காரணமாகவே இருந்து வருகிறது.
01. லினக்ஸ் சிஸ்டம் இயங்க எடுத்துக் கொள்ளும் நேரம் மிக மிகக் குறைவு. விண்டோஸ் இயக்கத்துடன் ஒப்பிடுகையில் இதன் பயனை நாம் அனுபவிக்கலாம்.  எடுத்துக் காட்டாக, அண்மையில் பலராலும் விரும்பிப் பயன்படுத்தும் லினக்ஸ் உபுண்டு பதிப்பு இயங்க 10 விநாடிகளே எடுத்துக் கொள்கிறது.  வேறு எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இந்த வேகம் இல்லை என்பது உண்மை.
02. எந்த பிரச்னையும் லினக்ஸ் சிஸ்டத்தில் இல்லை என்பதே உண்மை. இன்ஸ்டால் செய்து பல மாதங்கள் பயன்படுத்திய பின்னரும், பல புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின்னரும், லினக்ஸ் சிஸ்டத்தின் இயங்கும் வேகம் அப்படியே குறையாமல் இருக்கும்.
03. உங்கள் கம்ப்யூட்டர் எப்போது வாங்கப்பட்டிருந்தாலும், எந்த சிப் கொண்டு வடிவமைக்கப் பட்டிருந்தாலும், அதில் லினக்ஸ் சிஸ்டத்தைப் பதிந்து இயக்க முடியும். விண்டோஸ் இயக்கம் தனக்கென குறைந்த பட்சம் சில தகுதிகள் கொண்ட ஹார்ட்வேர் இருந்தாலே இயங்கும். உங்கள் கம்ப்யூட்டர் பழைய ஹார்ட்வேர் ஆக இருந்தாலும், குறைவான மெமரி கொண்டு இருந்தாலும் அதற்கேற்ற லினக்ஸ் பதிப்பினை இலவசமாக இறக்கிப் பதிந்து பயன்படுத்தலாம்.
04. லினக்ஸ் எந்த வேளையிலும் முடங்கிப் போகாத ஒரு இயக்கம். எனவே அடிக்கடி கிராஷ் ஆகி விட்டது என்ற பாடலைப் பாடும் விண்டோஸ் பயனாளர்களுக்கு இது ஒரு மாற்று மருந்தாக உள்ளது.
05. லினக்ஸ் சிஸ்டம் பயன்படுத்துபவர்கள் தங்களுக்கென குழுக்களை அமைத்துக் கொண்டு, இந்த சிஸ்டம் குறித்த தகவல்களை அளித்து வருகின்றனர். சந்தேகங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு தீர்த்துக் கொள்கின்றனர். சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டி, தீர்வுகளை இலவசமாக வழங்கி வருகின்றனர்.
06. பல லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், நம் தேவைகளுக்கேற்ப, பலவகையான பதிப்புகளில் இலவசமாகவே கிடைக்கின்றன. ஒவ்வொன்றின் வகை மற்றும் இயங்கும் தன்மையும் பலவிதமாக இருக்கின்றன. 32 பிட், 64 பிட் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கானவை, சர்வர்களில் வெவ்வேறு திறனுக்கானவை என இவை கிடைக்கின்றன
07. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த GNOME and KDE என இரு வகைகள் உள்ளன. இவ்வாறு பலவகை இருப்பதனால், லினக்ஸ் பயன்படுத்த விரும்பும் ஒருவர் சற்று குழப்பத்திற்கு ஆளாகலாம். ஆனால் ஒருவர் தன் தேவைகளை முன்னிறுத்தினால், மேலே சுட்டிக் காட்டியபடி, லினக்ஸ் பயன் பாட்டுக் குழுவினர் இதற்கான அறிவுரையை வழங்குவார்கள்
08. டோர்வால்ஸ் முதலில் லினக்ஸ் சிஸ்டத்தை உருவாக்கிய போது, அது இந்த அளவிற்கு பயன்பாட்டிற்கும், ஆய்விற்கும் உள்ளாகும் என எண்ணவில்லை. இன்று ஆயிரக்கணக்கான ஆய்வாளர்கள், லினக்ஸ் சிஸ்டத்தினை அனைவரின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்கி தருகின்றனர். லினக்ஸ் பயன்படுத்துவதனை ஒரு நல்ல அனுபவமாக இவை முன்னிறுத்துகின்றன.
09. லினக்ஸ் பதிப்பினைத் தேர்ந்தெடுக்கும் ஒருவர், இதற்கென தனியே எந்த ஒரு பயிற்சியையும் மேற்கொள்ளத் தேவையில்லை. தேர்ந்தெடுத்த சிஸ்டத்தினைப் பயன்படுத்தி பழகினாலே போதும்.
10. ஓப்பன் சோர்ஸ் என்று அழைக்கப்படும் திறவூற்று தன்மைக்கு லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெயர் பெற்றது. அதாவது, இந்த சிஸ்டம் உருவாக்கப்பட்ட குறியீட்டு வரிகளை எவரும் எளிதாகப் பெற்று, தங்கள் தேவைக்கேற்றபடி இந்த சிஸ்டத்தினை உருவாக்க முடியும்.  இந்த தன்மைதான், இன்று லினக்ஸ் சிஸ்டத்தில் பல பயன்பாடுகளுடன் கூடிய தொகுப்புகள் உருவாகக் காரணமாக உள்ளது. தொடர்ந்து புதிய பதிப்புகளும் தயாராகிக் கிடைக்கின்றன. பெரும்பாலும் இவை இலவசமாகவே தரப்படுகின்றன.

18 வயதானதும் செய்ய வேண்டிய விஷயங்கள்!

18-things18 வயதை தொடுவது ஒரு மைல் கல்லை தொடுவது போன்றதாகும். நீங்கள் அதிகாரப்பூர்வமாகவும் சட்டப்பூர்வமாகவும் வயது வந்த இளைஞர் என்பதை இது உறுதி செய்யும். 18 வயதிற்கு முன் நீங்கள் பல தடைகளை சந்தித்திருப்பீர்கள். ஆனால் 18 வயது நிரம்பும் போது உங்களது டீன்-ஏஜ் பருவம் முடியும் தருவாயில் இருப்பீர்கள். வெகு சீக்கிரம் முதிர்ச்சி பெற்ற மனிதராகவும் விளங்குவீர்கள். ஆகையால் 20-ம் வயது வேகமாக உங்களிடம் வரும் முன்னர் நீங்கள் செய்யப் பழக வேண்டிய விஷயங்கள் பல உண்டு.
18 வயதை அடைந்த பிறகு நீங்கள் பல காரியங்களை செய்யலாம். ஆனால் பல்வேறு செயல்களைச் செய்ய சுதந்திரம் பெறும் அதே நேரத்தில், 18 வயது நிரம்பிய நீங்கள் அவற்றிற்கான பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். 18 வயது நிரம்பிய இந்திய குடிமகனாக நீங்கள் செய்யும் எந்த காரியத்திற்கும் எடுக்கும் நடவடிக்கையும் பொறுப்புள்ளதாக இருத்தல் வேண்டும். எங்கு சென்றாலும் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று மற்றவர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் இவை எல்லாம் நீங்கள் புதிதாக அடைந்த இளம் வயதின் மகிழ்ச்சிகளை பாழாக்கி விடாது.
18 வயது நிரம்பிய நீங்கள் சரியான நிலையில் ‘என்னென்ன செய்ய வேண்டும்’ என்ற பட்டியலிட்டு செயல்பட வேண்டும். நீங்கள் செய்யும் காரியங்கள் பொறுப்பு மற்றும் மேம்பட்ட இன்பம் இரண்டும் கலந்ததாக இருத்தல் வேண்டும். அவற்றுள் சிலவற்றை நாம் கீழ்வரும் பகுதியில் காணலாம்:
வாக்களித்தல்
18 வயது நிரம்பிய நீங்கள் வாக்குரிமம் பெற்றவர்கள். நீங்கள் பொறுப்புள்ள மற்றும் நல்ல குடிமகனாவும் விளங்குவீர்கள். சட்டப்பூர்வமாக வயது வந்த குடிமகனா நீங்கள் இருக்கையில் உங்களது நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் உங்களுக்கும் பங்குண்டு. ஆதலால் ஓட்டுரிமையை பயன்படுத்துங்கள். ஒவ்வொரு நாடும் தம் நாட்டு இளைஞர்கள் தேசத்தின் வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. நேர்மையான வேட்பாளரை தேர்ந்தெடுத்து வாக்களிப்பது நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் உங்களது வளர்ச்சிக்கும் உதவும். ஆகவே எப்போதும் வாக்களிப்பீர்…
இரவு நேர கேளிக்கைகள்
இரவு நேர கேளிக்கைகள், டிஸ்கோதே அல்லது கிளப்பிற்கு சென்று உல்லாசமாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இளைஞர்களின் மிகப்பெரிய ஈர்ப்பும் கனவுமாகும். இசை, நடனம், கவர்ச்சி பெண்கள், ஆண் அழகர்கள் மற்றும் முற்றிலும் சுதந்திரமான உணர்வு என்ற பற்பல விஷயங்களை இளைஞர்கள் வாழ்வில் ஒரு முறையாவது அனுவவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இந்த இரவு கிளப் விதிப்படி 18 வயதிற்கும் குறைவானவர்கள் அங்கு செல்ல அனுமதி இல்லை. ஆகையால் 18 வயது நிரம்பியதும் நல்ல இரவு நேர கேளிக்கை கிளப் அல்லது லாஞ்சிற்கு சென்று உங்களது வாழ்வின் இனிய இரவுகளை கொண்டாடுங்கள்.
இரத்த தானம் செய்தல்
ஒவ்வொரு இளம் குடிமகனும், குடிமகளும் நிச்சயம் 3 மாததிற்கு ஒரு முறை இரத்த தானம் செய்ய முற்பட வேண்டும். 18 வயதிற்கு பிறகு தான் இந்த தானத்தை செய்ய முடியும் என்பதால் இதையும் உங்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். நோயாளிகளுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கு சிறிளவு அக்கறை மற்றும் உதவிகளை செய்வதன் வழியாக உங்களுடைய சமூகத்தின் மீதான அக்கறையை அல்லது அன்பை வெளிபடுத்தலாம். எல்லா பொறுப்புள்ள மனிதர்களும் சற்றேனும் மனிதத்தன்மை உடையவராக இருக்க வேண்டும். இத்தகைய எண்ணங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் நீங்கள் இந்த உலகத்தை மேன்மைப்படுத்துகிறீர்கள். 18 வயது நிறைந்த பின் நீங்கள் செய்யும் மிக சிறந்த காரியமாக இந்த இரத்த தானம் விளங்கும்.
பச்சை குத்துதல்
பச்சை குத்துதல் இந்த காலக்கட்டத்தில் இளைஞர்கள் விரும்பும் இனிமையான செயலாகும். இவ்வாறு செய்வதை நீங்கள் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம். துரதிர்ஷ்டவசமாக மை நிரம்பிய ஊசியை குத்திக்கொள்ள 18 வயது நிரம்பிய வாலிபராக இருக்க வேண்டும். இந்த வயது வந்த பின்பு பட்டாம் பூச்சி, நட்சத்திரம், உங்கள் துணைவரின் பெயர் என்று எதுவாகினும் உங்கள் உடம்பில் எங்கு வேண்டுமானலும் குத்திக் கொள்ளலாம். இதற்கான சுதந்திரம் உங்களுக்கு உண்டு.
ஓட்டுனர் உரிமம்
18 வயது நிரம்பும் முன்பே நிறைய குழந்தைகளுக்கும் வாகனம் ஓட்ட தெரிகின்றது. ஆனால் 18 வயதிற்கு பிறகு தான் சட்டப்பூர்வமான ஓட்டுனர் உரிமம் பெற முடியும். இது தான் பாதுகாப்பையும், நீங்கள் இந்த நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர் என்பதையும் பிரதிபலிக்கும். ஓட்டுனர் உரிமம் இல்லாமல்; வாகனத்தை இயக்குவது மிக பெரிய தவறாகும்.

ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களுக்கான டிப்ஸ்! உஷார்

online-shopping-tipsஎந்தத் துறை நன்கு வளர்கிறதோ, அந்தத் துறையில் மோசடி பேர்வழிகளின் நடமாட்டமும் அதிகமாகவே இருக்கும். இதற்கு இணையமும் விதிவிலக்கல்ல. முக்கியமாக, ஆன்லைன் ஷாப்பிங்கில் இன்று நடக்கும் ஏமாற்றுவேலைகள் கொஞ்சநஞ்சமல்ல. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள், இதிலெல்லாம் சிக்காமல் இருக்க எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார் பி.கே. ஆன்லைன் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் பிரபு கிருஷ்ணனா
”ஆன்லைன் ஷாப்பிங்கில் பல நல்ல விஷயங்கள் இருப்பது போல ஏமாற்று விஷயங்களும் இருக்கவே  செய்கின்றன. போலி பொருட்களை விற்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் பொருளை டெலிவரி செய்யாமல் இழுத்தடிப்பது, போலி தளங்களை உருவாக்கி ஏமாற்றுவது என சில விஷயங்கள் இதில் உள்ளன. கடந்த மார்ச் மாதம்கூட  TimTara என்ற ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தின் நிறுவனர் ஏமாற்று நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்டார். அந்த இணையதளமும் அதன்பின்னர் மூடப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன.
கவர்ச்சி விளம்பரங்கள்!
கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்வதன் மூலம் கனஜோராக மோசடி செய்கின்றன பல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள். அதாவது, 50,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வெறும் 500 ரூபாய்க்குத் தருவதாக விளம்பரங்கள் செய்யும். இதை நம்பி பலரும் அந்தப் பொருளை வாங்க போட்டிபோட கடைசியில், யாராவது ஒருவருக்கு மட்டுமே அந்தப் பொருள் கிடைக்கும் என்று சொல்லிவிடும். ஆனால், ஏற்கெனவே கட்டிய பணத்தைத் திரும்பத் தரமாட்டோம், அதற்கு பதில் ஏதேனும் பொருள் வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்லும். வேறு வழியில்லாமல் நாம் வாங்கும் இந்தப் பொருள், கடையில் விற்கும் விலையைவிட அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இரண்டு நிமிட நிபந்தனை!
இந்த ஏமாற்று வித்தையில் வேடிக்கையான விஷயம்,  வாடிக்கையாளர்கள் பொருளை வாங்கும்போது சுவாரஸ்யத்தைக் கூட்டவும், வேகமாக அந்த வேலையைச் செய்துமுடிக்கவும் சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் ஒரு டெக்னிக்கை பின்பற்றுகின்றன. அதாவது, பொருளை வாங்க இரண்டு நிமிடங்களே அவகாசம் தரும். இதற்குள் நீங்கள் ஆர்டரை புக் செய்ய வேண்டும். இல்லையெனில், இந்த ஆஃபர் உங்களுக்கு கிடைக்காது என்று சொல்வதால், நாம் பரபரப்புக்குள்ளாவோம்.  ஏற்கெனவே பணம் கட்டிவிட்டோம்; எனவே, இரண்டு நிமிடத்தில் பொருளை வாங்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் கட்டிய பணம் போய்விடும் என்கிற அவசரத்தில்தான் நாம் செயல்படுவோம். இந்த இரண்டு நிமிடத்தில் பொருட்களை சரியாக புக் செய்ய முடியாமல் பணத்தை இழக்கிறார்கள் பலர்.
மறைமுக கட்டணங்கள்!
இன்னும் சில இணையதளங்கள் Free Trail, Half Price, போன்று பல ஆஃபர்களை தருகின்றன. இதிலும், பெரும்பாலும் நடப்பது மோசடியே. உண்மையில் இவர்கள் மறைமுக கட்டணங்கள் (Hidden Charges) என்ற பெயரில் அதிகமான பணத்தை உங்களிடமிருந்து கறந்துவிடுவார்கள். உண்மையாகவே இலவசம் என்றால் உங்கள் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்களைக் கேட்க மாட்டார்கள். இதேபோல, திடீரென இலவச போன், கம்ப்யூட்டர் என்று மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ். வந்தாலும் அவற்றை நீங்கள் கண்டுகொள்ளவே கூடாது.
ஷிப்பிங் கட்டண மோசடி!
உண்மையாக வாடிக்கையாளர்களின் மீது அக்கறை கொண்டிருக்கும் தளங்கள், டிவி வாங்கினால்கூட அதை கொண்டுவந்து தருவதற்கு எந்தக் கட்டணத்தையும் கேட்காது.  அப்படியே கேட்டாலும் அது குறைவான தொகையாகவே இருக்கும். பொருளை கொண்டுவந்து தர அதிக கட்டணம் கேட்கும் இணையதளங்களை  நம்பக்கூடாது. இதில் இ-பே மட்டும் விதிவிலக்கு, காரணம், அந்தத் தளத்தில் பொருட்களை விற்பவர்கள் பல நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் விலை குறைவாக தருவதால் பொருட்களை கொண்டுவந்து சேர்க்க கட்டணம் கேட்கலாம்.
நோ ரிட்டர்ன், ப்ளீஸ்!
பொருட்களைத் திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியை வழங்க மறுப்பதிலும் பெரும்பாலான தளங்கள் மோசடி செய்கின்றன. ஒரு ஆடையோ, காலணியோ வாங்கும்போது அளவு சரியாக இல்லை என்றால், அதைத் திரும்ப அனுப்பும் வசதி நமக்கு இருக்க வேண்டும். இதற்கு என்ன விதிமுறைகள் என்பதையும் அறிவது அவசியம். ஆனால், ஆர்டர் செய்த பொருளைத் திரும்ப அனுப்பும் முன்பு நீங்கள் அதை சேதப்படுத்தாமல் இருக்க வேண்டும்.
விதிமுறைகளில் மோசடி!
சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தங்களின் தளத்திலேயே விதிமுறைகளை பட்டியல் போட்டிருப்பார்கள். மிக முக்கியமான விதிமுறைகளை நம் கண்ணுக்கு தெரியாதபடி போட்டிருப்பார்கள். அந்த விதிமுறையை நாம் கவனிக்கத் தவறிவிட்டு, பொருட்களை வாங்கிய பின்னர் அது சார்ந்த குறைகளை அவர்களிடம் தெரிவித்தால், நாங்கள்தான் விதிமுறைகளை ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம் என்பார்கள். பெரும்பாலும் பொருட்களை ரிட்டர்ன் எடுத்துக்கொள்வதிலேயே இந்தப் பிரச்னை வரும்.
கூரியர் மோசடி!
ஆன்லைன் ஷாப்பிங் மூலம் ஆர்டர் செய்திருக்கும் பொருளானது கூரியர் மூலமாக நமக்கு அனுப்பப்படும். ஆனால், அந்த கூரியரை பிரித்து பார்க்கும்போது அந்தப் பொருளானது இல்லாமல்கூட இருக்கலாம். வீட்டுக்கு வந்த கூரியரில் பொருள் ஏதும் இல்லை எனில், உடனே ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்துக்கு தெரியப்படுத்துவது அவசியம். ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அனுப்பியதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாமல்போனால், அதன்பிறகு அந்த நிறுவனத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் வேலையில் இறங்கலாம். சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் மூன்றாம் நபர் விற்பனையாளர்களைக்கொண்டு செயல்படுவதால் அவர்களாலும் ஏமாற்றப்படலாம், ஜாக்கிரதை.
வாரன்டி இருக்கிறதா?
பல இணையதளங்கள் உற்பத்தியாளர் வாரன்டியுடன்தான் (Manufacturer Warranty)பொருளை விற்கின்றன. ஒரு குறிப்பிட்ட பொருள் சந்தை விலையைவிட மிகக் குறைவாக இருந்தால், உற்பத்தியாளர் வாரன்டி தராமல் மோசடி செய்துவிடுகின்றன சில நிறுவனங்கள். அப்படியே வாரன்டி தந்தாலும் அதற்கான பொறுப்பு அந்த ஆன்லைன் நிறுவனமா அல்லது உற்பத்தி செய்த நிறுவனமா என்கிற விஷயத்தில் நம்மை குழப்பி ஏமாற்றிவிடும்.
உஷாரய்யா உஷாரு!
ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது இப்படி நடக்கும் மோசடிகளில் நாம் சிக்கி ஏமாறாமல் இருக்க சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
* பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை ரூ.100 அல்லது 200-க்கு தருகிறோம் என்று சொல்லும் தளங்களை ஒதுக்குவது நல்லது.
* பொருள் ஏலத்தில் (Auction, Bid) விற்கப்படும்போது பொருளின் விலை சந்தை விலையைவிட சற்றே குறைவாக மட்டுமே இருக்கவேண்டும். மிக அதிக விலையுள்ள பொருளை, மிகக் குறைந்த விலைக்கு ஏலத்தில் விற்றால் அது போலியாக இருக்க வாய்ப்புள்ளது.
* நீங்கள் ஆர்டர் செய்யும் பொருளின் பெயர் சரியாக உள்ளதா என்பதைச் சோதித்து பார்ப்பதும் அவசியம். சில தளங்களில் எழுத்துப்பிழை போன்று இருந்தாலும், அவை போலி பொருட்களை அவ்வாறு விற்கின்றன. உதாரணம்,Nokia – Noika, Samsung Galaxy Note – Galaxy Note..
*பொருளை வாங்கும்போது, அதை ஏற்கெனவே வாங்கியவர்களின் கருத்தை வாங்கும் தளத்திலோ அல்லது இணையத்திலோ தேடிவிட்டு வாங்க வேண்டும்.
* ஒரு பொருளை ஆர்டர் செய்தவுடன் நமக்கு அது அவசியமில்லை என்று தோன்றும் அல்லது வேறு ஒரு பொருளை வாங்கத் தோன்றும். அம்மாதிரியான சமயங்களில் நீங்கள் ஆர்டர் செய்த பொருளை கேன்சல் செய்யும் வசதியைக் குறிப்பிட்ட தளம் உங்களுக்கு வழங்குகிறதா என்று கவனித்து விட்டு, வாங்குவதற்கான வேலையில் இறங்குவது நல்லது. அதோடு முழுப்பணமும் உங்களுக்கு வந்து சேரும்படியாகவும் இருக்க வேண்டும். ஆர்டரை கேன்சல் செய்தால் பெரும்பாலும், ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் உங்கள் பணம் திரும்ப வந்துவிடும்.
* கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்துபவர்கள் மிக மிக பாதுகாப்பான தளம் என்று நம்பிக்கை இருந்தால் மட்டுமே பயன்படுத்துங்கள்.  இல்லை என்றால், பொருளை வாங்கும்போது பணம் தருகிற மாதிரி (Cash On Delivery) வைத்துக்கொள்ளுங்கள்.
* முதல்முறையாக ஆன்லைன் மூலம் பொருள் வாங்குபவர்கள் அதுகுறித்து நன்கு பரிச்சயம் கொண்டவர் மூலம் வாங்கலாம்.
* ஆர்டர் செய்த பின்னர் உங்களுக்கு வரும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்றவற்றை பொருள் உங்களுக்கு கிடைக்கும் வரை பத்திரமாக வைத்திருக்கவும்.”

சின்ன வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்.

Picture1sdfgவெங்காயத்துல சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்னு ரெண்டு வகை இருக்கறது பலருக்கு தெரியும். அதேபோல வெள்ளை வெங்காயம்னு ஒண்ணும் இருக்கு. இதுல மருத்துவ குணம் நிறைஞ்சது… சின்ன வெங்காயம்தான்!
ஜலதோஷம் வந்தா ஒரு  சின்ன வெங்காயத்தை மென்னு தின்னு, வெந்நீர் குடிச்சா… ஜலதோஷம் குறையுறதோட தும்மலும் நின்னுடும்.
கூடவே… நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் இதெல்லாமும் குணமாகும். நெஞ்சு படபடப்பு வந்தாலும், சின்ன வெங்காயத்தை தின்னு வெந்நீர் குடிச்சா, உடம்பு சமநிலைக்கு வந்துடும். இதய நோயாளிகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது  முதலுதவி சிகிச்சையா இதை செய்யலாம். பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தா  ரத்தக்கொதிப்பு குறைஞ்சு, இதயம் பலமாகும்.
மூல நோயால அவதிப்படுறவங்க சாப்பாட்டுல அதிகமா சின்ன வெங்காயம் சேர்த்துக்கறது நல்லது. நீர்மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடிச்சாலும் பலன் கிடைக்கும். வெளிமூலம் உள்ளவங்க, சின்ன வெங்காயத்தை வதக்கி, பிரச்னை உள்ள இடத்துல வெச்சுக்கிட்டா பலன் கிடைக்கும்   (வெள்ளை வெங்காயத்தை அப்பப்போ நல்லெண்ணய் விட்டு வதக்கிச் சாப்பிட்டாலும் மூல உபத்திரவம் குறையும்).
பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல்னு அவதிப்படுறவங்களுக்கும் சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும். சின்ன வெங்காயத்தை மையா அரைச்சுக்கோங்க. இதை, நாட்டுக்கோழி முட்டையோட வெள்ளைக்கருவுல சேர்த்து, ஆம்லெட்டுக்கு அடிக்கிற மாதிரி நல்லா அடிச்சுக்கணும். இல்ல, மிக்ஸியில போட்டு ஒரு சுத்து சுத்தினாலும் சரி.   இப்படி செய்யும் போது   ஷாம்பு மாதிரி பொங்கி வரும்.    அதை அப்படியே தலையில தேய்ச்சி, அரை மணி நேரம் கழிச்சி வெதுவெதுப்பான தண்ணியில குளிக்கணும்.    முட்டை வாடை  போவதற்க்கு, நல்ல சிகைக்காய் பவுடரை போட்டு தேய்ச்சி குளிக்கணும்.   வாரத்துல ஒருநாள் வீதம், ரெண்டு மாசத்துக்கு இப்படி செய்தா நல்ல பலன் கிடைக்கும்.
தேள் கொட்டின இடத்துல வெங்காயச்சாறை தேய்ச்சா விஷம் ஏறாது. தலை பகுதியில சொட்டை விழுந்து முடி முளைக்காம இருந்தாலும் சின்ன வெங்காயத்தை தேய்ச்சி வந்தா… காலப்போக்குல முடி முளைக்கும். ஆம்பளைங்களுக்கு மீசை பகுதியில இப்படி சொட்டை இருந்தாலும், இதே வைத்தியத்தை செய்யலாம்!
மேலும் 50 வகையில் வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை பார்ப்போம்.
1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.
14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.
36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்
45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.
50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

+375 என்று ஆரம்பிக்கும் எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் எச்சரிக்கை...!

எச்சரிக்கை எச்சரிக்கை...!

+375 என்று ஆரம்பிக்கும் எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அதை தயவு செய்து அட்டெண்ட் செய்யாதிர்கள்,

அல்லது
அந்த எண்ணுக்கு நீங்களே தொடர்ப்பு கொள்ளாதிர்கள். அந்த எண்களில் வரும் அழைப்புக்கு 15.30 ருபாய் உங்கள் balanceஎடுக்க படும், அது மட்டும் அல்லது உங்கள் தொலைபேசில் உள்ள மற்ற மொபைல் எண்களையும் அவர்களால் பதிவு செய்ய முடியும்.

உங்கள் வங்கி கணக்கு போன்ற முக்கியமான தகவலை சேர்த்து வைத்து இருந்தால் அதை அவர்கள் இதன் மூலம் பயன் படுத்தி கொள்ளமுடியும். ஆகையால் +375 என்று ஆரம்பிக்கும் எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அதை தயவு செய்து அட்டெண்ட் செய்யாதிர்கள்,

அல்லது
அந்த எண்ணுக்கு நீங்களே தொடர்ப்பு கொள்ளாதிர்கள்.

விவாகரத்து செய்ய நினைப்பவர்களுக்கு அட்வைஸ்...!

விவாகரத்து செய்ய நினைப்பவர்களுக்கு அட்வைஸ்...!

கணவன் மனைவி ஒன்றாக வாழ்ந்து விட்டு இருவருக்குள்ளும் புரிந்து கொள்ளாமல் பிரச்சினையை பேசி தீர்க்காமல் பிரிகிறார்களே அவர்களுக்கு சில அட்வைஸ். கணவன்-மனைவி உறவு எவ்வளவு இனிமையானது தெரியுமா?.

அந்த உறவில் வரும் சின்னச் சின்ன ஊடல்கள், சண்டைகளுக்காக வக்கீலிடம் ஏங்க நீங்க போகனும். கோர்ட்டு கேசுன்னு ஏங்க நீங்க அலையனும். உங்களுக்கு உங்க பிரச்சினைகளை பேசித் தீர்க்க முடியாதா.? உங்க ரெண்டு பேருக்கும் இடையில் சின்னச் சின்ன சண்டைகள் வரும் போது விவாகரத்து வரைக்கும் ஏங்க போக நினைக்கிறீங்க.

பிரச்சினைகள் வரும் போது உங்களது பசுமையான பழைய நினைவுகளை ஒரு முறை நினைத்துப் பாருங்க. உங்களுக்குள் சண்டைகள் வரும் போது ஒருத்தரோடு ஒருத்தர் மனம் விட்டுப் பேசுங்க. அவ யாருங்க உங்கள் மனைவி.

அவரு யாருங்க உங்களுக்கு நீங்க கட்டிய கணவர். உங்க ரெண்டு பேரோட உறவுக்கு மேல ஒரு உறவு இந்த உலகத்தில் வேறு இருக்குமா என்ன. நீங்க ஒருத்தரை ஒருவர் விவாகரத்து செய்யும் போது உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடாதா?

உங்களுக்குத் தான் நிம்மதியான வாழ்க்கை அமையுமா? உங்க ரெண்டு பேரோட காதல் உங்கள் மனதில் ஏதோ ஒரு மூலையில் குத்திக் கொண்டு இருக்கும் அதை புரிந்துகொள்ளுங்கள்.

எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும் கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது. எந்த ஒரு பிரச்சனைக்கும் விவாகரத்து முடிவு அல்ல.

அவசர கால முதலுதவி முறைகள்...!

அவசர கால முதலுதவி முறைகள்...!

வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால் :

உங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விடலாம். அவருக்கு முதல் உதவி செய்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை. உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் மசாஜ் செய்யுங்கள்.

வேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் மசாஜ் செய்யுங்கள். விழுந்தவர் எழுந்து விடுவார் தெளிவுடன்.

தலைவலி :

கை கட்டை விரல் நகத்திற்கு நேர் கீழ் உள் பக்கம் (கைரேகைக்காக இங்க் படும் பகுதி) சதைப் பகுதியில் மறுவிரல் நகத்தால் 1 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுங்கள். அதே போல் அடுத்த விரலிலும் செய்யுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரலாம்.

வயிற்றுப் பிரச்னைகள் :

தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.

கால் கட்டை விரலிலிருந்து மூன்றாவது விரலுக்கும் (நடுவிரல்) இரண்டாவது விரலுக்கும் இடைப்பட்ட சவ்வுப் பகுதியில் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்.

வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல் போட்டது போன்றிருத்தல், உடம்பு வலி ஆகியவைகள் பறந்து போகும். இது போன்ற அக்குபஞ்சர் முறையிலான முதலுதவி முறைகளை தெரிந்துக் கொள்வதன் மூலம் கையில் முதலுதவி பெட்டி இல்லாத போதும் நம்மால் முதலுதவி செய்ய இயலும்.

ATM ல் பணம் எடுக்கும் போது திடீரென்று திருடன் வந்துவிட்டால் உங்கள் நுளைவு எண் PIN தலைகீளாக அடிக்கவும்

நீங்கள் ATM ல் பணம் எடுக்கும் போது திடீரென்று ஒரு  ATM ல் பணம் எடுக்கும் போது திடீரென்று வந்து உங்களிடம் பணம் எடுத்துதருமாறு மிரட்டினால் உங்கள் நுளைவு எண் PIN தலைகீளாக அடிக்கவும் அதாவது 123 என்றால் 321 என்று அவ்வாறு நீங்கள் அடிக்கும்போது உங்கள் பணம் வெளியே வரும்
ஆனால் பாதியிலே சிக்கி கொள்ளும் அதாவது காவல் நிலையத்திற்கும் தகவல் சென்று விடும்

எல்லா ஏடிம் யிலும் இது உண்டு எத்தனை பேருக்கு தெரியும்

பசுக்கள் கோமாரி சுலபமான மருந்து

இதுவரையில் சுமார் 8000 பசுக்கள் கோமாரி நோயால் செத்துமடிந்துவி ட்டன. கவலைப்பட யாரும் இல்லை தமிழ்நாட்டில். சுலபமான மருந்து ஒன்று உள்ளது...

ஜீரகம், வெந்தயம்,மிளகு மூன்றும் இரண்டிரண்டு ஸ்பூன் எடுத்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து பின் மஞ்சள் 2 ஸ்பூன் , பூண்டு 4 பல்லு, நாட்டு சர்க்கரை 100 கிராம், தேங்காய் பூ 1 மூடி அத்தனையையும் அரைத்து சட்டினியாக்கி ஒரு வேளை க்கு ஊட்டிவிடவும். இப்படி 3 நாள் 3 வேளை செய்யின் பசு தெளியும்.

மேலும் ஒரு லிட்டர் நல்லண்ணையில் பூண்டு, மஞ்சள், வேப்பிலை,துளசி, மருதாணி, குப்பைமேனி இவைகளை சேர் ததுக் காய்ச்சி ஆரவைத்து நான்கு கால்களிலும் தடவவும். நன்றி.