வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Sunday, 10 November 2013

YouTube வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டும் DOWNLOAD செய்ய (DOWNLODE)

YouTube வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டும் DOWNLOAD செய்ய (DOWNLODE)


www.sarfan.blogspot.com


இணையத்தில் வீடியோக்களை காண பல தளங்கள் இருந்தாலும் யூடியுப் தளம் தான் இதில் சிறந்தது. இதில் பல ஆயிரகணக்கான வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றன. சில சமயங்களில் நாம் ஏதேனும் வீடியோவை பார்க்கும் பொது அந்த வீடியோவில் உள்ள பாடலோ அல்லது வசனமோ நமக்கு மிகவும் பிடித்து இருக்கும். இந்த வீடியோக்களில் இருந்து ஆடியோவை மட்டும் எப்படி டவுன்லோட் செய்வது என்று இங்கு காணலாம். இந்த வேலையை சிறப்பாக செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

இன்ஸ்டால் செய்யும் முறை:
முதலில் கீழே உள்ள டவுன்லோட் பட்டனை க்ளிக் செய்து இந்த இலவச மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
டவுன்லோட் செய்தவுடன் வரும் செட்டப் பைலை இரண்டு முறை க்ளிக் செய்து மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

http://download.cnet.com/Free-YouTube-to-MP3-Converter/3001-2071_4-10665553.html?spi=58dec72d03c5cbf656f7da387931367f+imageanchor%3D

இப்பொழுது அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும்.
அதில் மேலே உள்ள காலி இடத்தில் நீங்கள் ஆடியோ டவுன்லோட் செய்ய விரும்பும் யூடியுப் வீடியோவின் URL கொடுக்கவும்.
படத்தில் காட்டியுள்ள இடத்தில் URL கொடுத்து கீழே உள்ள Download பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான் நீங்கள் கொடுத்த வீடியோவில் இருந்து ஆடியோ மட்டும் தனியே டவுன்லோட் ஆகும்.


இந்த பைல் டவுன்லோட் ஆகி முடிந்தவுடன் கீழே இருப்பதை போல செய்தி வரும்.
அவ்வளவு தான் உங்களுக்கு தேவையான ஆடியோ பைல் உங்கள் கணினியில் சேமிக்க பட்டிருக்கும்.

www.sarfan.blogspot.com

உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா..?! கண்டுபிடிப்பது எப்படி..?!

உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா..?! கண்டுபிடிப்பது எப்படி..?!

www.sarfan.blogspot.com

நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும்.

சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும்போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லா?

உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா? உண்மையான நிறுவனத்தைப் போன்றே தற்போது போலியான தயாரிப்புகள் தற்போது விலைக்கு வந்து அசல் எது? போலி எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு எந்த வித்தியாசமும் இல்லாமல் காணப்படும்.
இவ்வாறான போலி தயாரிப்பு மொபைல்களைக் கண்டறிய கீழ்க்கண்ட வழிமுறைகள் உங்களுக்கு உதவும்.

முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போன் ஒரிஜினல்தானா என்பதைக் கண்டறிய International Mobile Equipment Identification எனப்படும் IMEI எண்ணை அறிந்துகொள்ள வேண்டும்.

உங்கள் மொபைலில் IMEI எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?

சாதாரண செயல்பாட்டின் மூலம் IMEI எண்ணைக் கண்டறிய முடியும். உங்கள் மொபைலில் *#06# என தட்டச்சிடுங்கள்...உடனே உங்கள் மொபைல் போனிற்கான IMEI எண் காட்டபடும். அந்த IMEI எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

அந்த IMEI ண்ணை ஒரு SMS ஆக தட்டச்சிட்டு 53235 என்ற எண்ணிற்கு SMS செய்துவிடுங்கள்.

இப்பொழுது உங்கள் பதில் SMS ஆக Success என்ற செய்தி வந்திருக்கும். அப்படி வரவில்லையென்றால் உங்கள் மொபைல் போலியானது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

இந்த முறையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் இணையத்தின் மூலமும் நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

http://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr

என்ற இந்த இணைய முகவரிக்கு சென்று நீங்கள் குறித்துவைத்துக்கொண்ட IMEI எண்ணை உள்ளிடுவதன் மூலம் உங்கள் மொபைல் போனைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் நீங்கள் பெற முடியும்.

குறிப்பு: IMEI எண்ணானது பதினைந்து இலக்க எண்ணாக இருக்கும்.

உங்களுடைய மொபைல் தயாரிப்புக்குரிய நாடுகளையும், தரத்தையும் இந்த IMEI எண்களை வைத்துக் கண்டறிய முடியும்.

அதாவது நீங்கள் குறித்துவைத்த IMEI எண்ணில் 7, 8 வது இலக்க எண்கள்
1. 0,2 அல்லது 2,0 என இருப்பின் ஐக்கிய அரபு எமிரேட்சில் அசெம்பிள் செய்யப்பட்டதாக இருக்கும். இதனுடைய தரம் குறைந்ததாக இருக்கும்.

2. 0,8 அல்லது 8,0 என இருபின் ஜெர்மனி நாட்டு தயாரிப்பாகவும்,தரமானதாகவும் இருக்கும்.

3. 0,1 அல்லது 1,0 என இருப்பின் அது பின்லாந்து நாட்டுத் தயாரிப்பாகவும் தரமிக்கதாகவும் இருக்கும்.

4. 1,3 என இருப்பின் Azerbaijan நாட்டு அசெம்பிள் தயாரிப்பாகவும்,தரம் குறைந்தும், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கும்.

www.sarfan.blogspot.com

உங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபமாக மீட்க

உங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபமாக மீட்க

சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும். பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.

இதற்க்கு பேஸ்புக்கில் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக ஹாக் செய்யப்பட அக்கௌன்ட்டை திரும்ப பெறலாம். நீங்கள் பேஸ்புக்கில் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள்.
பிறகு இந்த லிங்கில் கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

https://www.facebook.com/hacked


வரும் விண்டோவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும்.

அந்த விண்டோவில் உங்கள் அக்கௌன்ட்டை திரும்ப பெற பல வசதிகள்(email, mobile number, friends name) இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது என பார்ப்போம்).

ஈமெயில் ஐடியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள்.
அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். நீங்கள் கொடுத்த ஈமெயில் ஐடியில் உள்ள பேஸ்புக் கணக்கை காட்டும்.

உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த பாஸ்வேர்டை அந்த இடத்தில் கொடுக்கவும்.
பாஸ்வேர்டை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும்.
அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Send Codes and Login to Gmail என்ற பட்டனை அழுத்தவும்.

உங்களுக்கு இன்னொரு Pop-up விண்டோ ஓபன் ஆகும். அதில் இந்த ஜிமெயிலின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கேட்கும் அதை சரியாக கொடுத்த பின்னர் ஜிமெயிலின் அனுமதி கேட்கும் அதில் Allow கொடுத்து விட்டால் போதும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

இப்பொழுது புதிய பாஸ்வேர்டை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Change Password என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களின் அக்கௌன்ட் திரும்ப பெறப்படும்.
இனி நீங்கள் உங்கள் பேஸ்புக் அக்கௌன்ட்டை எப்பொழுது போல உபயோகிக்கலாம்.

இந்த தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அனைவரையும் சென்றடைய உதவுங்கள்.

www.sarfan.blogspot.com

எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை மிக இலகுவாக டவுன்லோட் செய்வது எப்படி?

இணையத்தில் வீடியோக்களை பார்ப்பதற்கு அனைவரும் விரும்பி பயன்படுத்...துவது Youtube தளத்ததைத்தான் இதில் எண்னற்ற வீடியோக்கள் உள்ளன அதில் உங்களுக்கு விருப்பமான வீடியோவைபார்த்து டவுன்லோட் செய்ய நினைப்பீர்கள் வீடியோக்களை டவுன்லோட் செய்யும் வசதி Youtube தளத்தில் இல்லை பெரும்பாலனவர்கள் சில Downloader மென்பொருட்களை பயன் படுத்தி டவுன்லோட் செய்கின்றனர்.
சரி நாம் இன்று எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை மிக இலகுவாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

1.முதலில் Youtube தளத்துக்கு சென்று உங்களுக்கு விரும்பிய வீடியோ ஒன்றை ஓபன் செய்து கொள்ளுங்கள்


2. இப்பொழுது நீங்கள் ஓபன் செய்த வீடியோ Link-இல் சின்ன மாற்றம் செய்ய வேண்டும் உதாரணத்துக்கு நீங்கள் ஓபன் செய்த வீடியோவின் Link இவ்வாறு இருக்கும் :www.youtube.com/watch?v=9DXqx7y5ME0 இதில் நீங்கள் Youtube.com இற்க்கு முன்னால் இரண்டு SS சேர்க்கவேண்டும்


உதாரணத்திற்கு www.ssyoutube.com/watch?v=9DXqx7y5ME0இதபோல் இரண்டு SS சேர்த்து Enter ஐ அழுத்தவும்


3.இப்பொழுது http://en.savefrom.net/ என்ற தளம் ஓபன் ஆகும் அதில் நீங்கள் Open செய்த வீடியோவின் Format மற்றும் Quality ஐ காண்பிக்கும் உங்களுக்கு தேவையான வீடியோ Format-இல் கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம் அவ்வளவுதான்

ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்


https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mDXPjovcvb0



www.sarfan.blogspot.com

நீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK

நீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK

ஆமாங்க.... உங்க Computerல நீங்க Type செய்தா கம்ப்யூட்டர் அந்த வார்த்தைகளை திரும்ப சொல்லும். இந்த Trick. எல்லா வகையான விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் வேலை செய்யும். இந்த மேஜிக்கை உங்க கம்ப்யூட்டர்ல் வச்சு உங்க நண்பர்களை ஆச்சிரியப்பட வையுங்க. இந்த வசதியினால் கம்ப்யூட்டர்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சரி, எப்படி இந்த வசதியை உங்க கம்ப்யூட்டர்ல வைக்கலாம்னு பாக்கலாமா?


1. உங்க கம்ப்யூட்டர்ல notepad-ஐ ஓபன் செய்யுங்க.


2. கீழ்க்கண்ட code-ஐ ஓபன் செய்த பக்கத்தில் copy செய்து paste செய்யுங்க.

Dim message, sapi
message=InputBox("What do you want me to say?","Speak to Me")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak message


3. notepad-இல் பேஸ்ட் செய்த பின்னர் speak.vbs என பெயர் கொடுத்து உங்கள் டெஸ்க்டாப்பில் save செய்து விடுங்கள். அவ்வளவுதான்.


4. டெஸ்க்டாப்பில் speak.vbs என உள்ள file-ஐ Double கிளிக் செய்தால் ஒரு பாக்ஸ் ஓபன் ஆகும். அங்கே உள்ள கட்டத்தில் நீங்க வார்த்தைகளை டைப் செய்து என்டர் செய்தால் நீங்கள் Type. செய்த வார்த்தைகள் ஒரு ஆண் குரல் சொல்லும்.

www.sarfan.blogspot.com

விண்டோஸ் 8க்கான ஷார்ட் கட் கீகள்(shourtcut Keys) !

விண்டோஸ் 8க்கான ஷார்ட் கட் கீகள்(shourtcut Keys) !

கணணி பாவனையாளர்கள் மத்தியில் விண்டோஸ் 8 பிரபல்யமடைந்து வருகின்றது, இதற்கான ஷார்ட் கட் கீகள் கீழே தரப்பட்டுள்ளன.

விண்டோஸ் கீ: தொடக்க நிலையில் உள்ள மெட்ரோ ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் இறுதியாகப் பயன்படுத்திய அப்ளிகேஷன் புரோகிராம்கள் ஆகிய இரண்டையும் இந்த கீ அழுத்துவதன் மூலம் மாற்றி மாற்றிப் பெறலாம்.

www.sarfan.blogspot.com

விண் கீ + C: சார்ம்ஸ் பாரினைத் (charms bar) தரும்.

விண் கீ +Tab: மெட்ரோ டாஸ்க் பார் கிடைக்கும்.

விண் கீ + I: செட்டிங்ஸ் சார்ம் அணுகலாம்.

விண் கீ + H: ஷேர் சார்ம் கிடைக்கும்.

விண் கீ + K: டிவைசஸ் சார்ம் பெறலாம்.

விண் கீ + Q: அப்ளிகேஷன் தேடலுக்கான சர்ச் திரை
கிடைக்கும்.

விண் கீ + F: பைல்களைத் தேடுவதற்கான தேடல் திரை கிடைக்கும்.

விண் கீ + W: செட்டிங்ஸ் மாற்றுவதற்கான தேடல் திரை காட்டப்படும்.

விண் கீ + P: செகண்ட் ஸ்கிரீன் பார் கிடைக்கும்.

விண் கீ + Z: மெட்ரோ இயங்குகையில் அப்ளிகேஷன் பார் பெற.

விண் கீ + X: விண்டோஸ் டூல் மெனு பார்க்க.

விண் கீ +O: ஸ்கிரீன் இயக்க மாற்றத்தை வரையறை செய்திட.

விண் கீ + .: ஸ்கிரீன் பிரித்தலை வலது பக்கமாகக் கொண்டு செல்ல.

விண் கீ +Shift + .: ஸ்கிரீன் பிரித்தலை இடது புறமாகக் கொண்டு செல்ல.

விண் கீ +V: இயக்கத்தில் இருக்கிற அனைத்து டோஸ்ட்ஸ் மற்றும் அறிவிப்புகளைக்(Toasts/Notifications) கொண்டு வர.

விண் கீ +: இயக்கத்தில் இருக்கிற அனைத்து டோஸ்ட்ஸ் மற்றும் அறிவிப்புகளைப்(Toasts/Notifications) இறுதி நிகழ்விலிருந்து கொண்டு வர.

விண் கீ + PrtScn: அப்போதைய திரைத் தோற்றத்தினை ஒரு பதிவாக எடுத்து, தானாகவே Pictures folderல் பதிந்து சேமித்து வைக்க. இந்த படங்கள் Screenshot (#) என்ற பெயரில் பைல்களாகப் பதியப்படும். அடைப்புக்குறிகளுக்குள் வரிசை எண் தரப்பட்டிருக்கும்.

விண் கீ + Enter : Narrator இயக்கப்படும்.

விண் கீ + E: கம்ப்யூட்டர்(மை கம்ப்யூட்டர்) போல்டர் திறக்கப்படும்.

விண் கீ + R: ரன் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.

விண் கீ + U: Ease of Access Center திறக்கப்படும்.

விண் கீ + Ctrl + F: Find Computers டயலாக் பாக்ஸ் திறக்கப்டும்.

விண் கீ + Pause/Break: System பேஜ் காட்டப்படும்.

விண் கீ +1..10: டாஸ்க் பாரில் பின் செய்து வைத்துள்ள புரோகிராம்களை, விண் கீ + உடன் தரப்படும் எண்ணுக்கேற்ப வரிசையிலிருந்து காட்டப்படும். அல்லது இயக்கத் தில் இருக்கும் புரோகிராம்களை, டாஸ்க் பாரில் பின் செய்த வரிசைப்படி எடுத்துக் காட்டும்.

விண் கீ + Shift + 1..10: டாஸ்க்பாரில் பின் செய்து வைக்கப்பட்டுள்ள புரோகிராம் வரிசையிலிருந்து இதில் தரப்பட்டுள்ள எண்ணுக்கேற்ப, புரோகிராமின் புதிய இயக்கம் ஒன்றைத் திறக்கும்.

விண் கீ + Alt + 1..10: டாஸ்க் பாரில் உள்ள ஜம்ப் லிஸ்ட் பட்டியலில் பின் செய்து வைக்கப்பட்டுள்ள புரோகிராம்களில், கொடுக்கப்படும் எண் படி புரோகிராம் தேர்ந்தெடுக்கப்பட்டு இயக்கப்படும்.

விண் கீ + B: நோட்டிபிகேஷன் ஏரியாவில் முதல் புரோகிராமைத் தேர்ந்தெடுக்கும். பின்னர் அம்புக் குறிகளை அழுத்தினால் அதற்கேற்ப சுழற்சி முறையில் காட்டும். எந்த புரோகிராம் வேண்டுமோ அது காட்டப்படுகையில் என்டர் தட்ட, அந்த இயக்கம் காட்டப்படும்.

விண் கீ + T: டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம்களைச் சுழற்சி முறையில் தொட்டுச் செல்லும்.

விண் கீ + M: இயக்கத்தில் உள்ள அனைத்து
விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும்.

விண் கீ + Shift + M: மினிமைஸ் செய்யப்பட்ட அனைத்து

விண்டோக்களும் திரைக்கு வரும்.

விண் கீ + D: டெஸ்க்டாப் காட்டப்படும்/ மறைக்கப்படும் (அதாவது திறக்கப்பட்டுள்ள விண்டோக்கள் மினிமைஸ் மற்றும் மீள் இயக்கத்திற்குக் கொண்டு வரப்படும்)

விண் கீ + L: கம்ப்யூட்டர் லாக் செய்யப்படும்.

விண் கீ + Up Arrow: அப்போதைய விண்டோ மேக்ஸிமைஸ் செய்யப்படும்.
விண் கீ + Down Arrow: அப்போதைய விண்டோ மினிமைஸ் செய்யப்படும்/ மீளக் கொண்டு வரப்படும்.

விண் கீ + Home: அப்போதைய விண்டோ தவிர மற்றவை யாவும் மினிமைஸ் செய்யப் படும்.

விண் கீ + Left Arrow: ஸ்கிரீன் இடது பக்கமாக விண்டோ டைல் செய்யப்படும்.

விண் கீ + Right Arrow: ஸ்கிரீன் வலது பக்கமாக
விண்டோ டைல் செய்யப்படும்.

விண் கீ + Shift + Up Arrow: அப்போதைய
விண்டோவினை மேலிருந்து கீழாக விரிக்கும்.


விண் கீ + Left/Right Arrow: அப்போதைய
விண்டோவினை ஒரு மானிட்டரிலிருந்து அடுத்த மானிட்டருக்கு நகர்த்தும்.

விண் கீ + F1: Windows Help and Support இயக்கப்படும்.
விண் கீ இணைப்பில்லாத மற்ற ஷார்ட்கட் கீ தொகுப்புகள்

Page Up: முந்தைய மெட்ரோ ஸ்கிரீன் காட்சி யைக் காட்டும்.

Page Down: பிந்தைய மெட்ரோ ஸ்கிரீன் காட்சியைக் காட்டும்.

Esc: அப்ளிகேஷன் இயக்க முடிவு (charm) முடிக்கப்படும்.

Ctrl + Esc: இறுதியாக அணுகிய அப்ளிகேஷன் புரோகிராம் மற்றும் மெட்ரோ ஸ்டார்ட்

உங்கள் கணணி சில சமயங்களில் வேலை செய்யாமல் அப்பிடியே நின்றுவிடுகிறதா ?

உங்கள் கணணி சில சமயங்களில் வேலை செய்யாமல் அப்பிடியே நின்றுவிடுகிறதா ? இதோ ஒரு வழியுண்டு

உங்கள் கணணி சில சமயங்களில் வேலை செய்யாமல் அப்பிடியே நின்று விடும் இதை தடுக்க வழி உண்டு ...

கணினியில் சில சமயங்களில் ( not responding ) என திரையில் தோன்றும்

கட்டளைக்கும் வேலை செய்யாமல் நிற்கும். இச்சமயங்களில் ( Shift + Ctrl + Esc ) என தட்டச்சு செய்தால் சில வினாடிகளில் இயல்பான நிலைக்கு தோன்றும். பின்பு ( windows task manager ) என்ற உரையாடல் பெட்டிதோன்றும்

www.sarfan.blogspot.com

அதில் தேவையான திரையை மட்டும் விட்டுவிட்டு மற்றவற்றை நிறுத்திவிடவேண்டும். இப்போ எப்பிடி இருக்கு ? உங்களுக்கு உபயோகமாக இருக்கிறதா? இருக்கும் என நம்புகிறோம்.!

Pen Drive வேகத்தை அதிகரிக்க

உங்கள்(கையடக்க சேமிப்பகம் ) Pendriver வரில் கொப்பி பண்ணி பேஸ்ட் பண்னும் போது வேகத்தை அதிகரிக்க வேண்டுமா?

Pen Drive வேகத்தை அதிகரிக்க
உங்கள் Pen Drive மிகவும் Slow ஆக இயங்குகிறதா? பெரிய கொள்ளளவுடைய Data களை பரிமாற்றம் செய்யும்போது அதிக நேரம் எடுக்கிறதா? கவலையை விடுங்கள். மிக இலகுவாக இந்த பிரச்சினையை சரி செய்து விடலாம்.

முதலில் Pen Drive கணினியில் இணையுங்கள். அதன் பின்னர் My Computer செல்லுங்கள் (Ctrl+E) அதன் பின்னர் Pen Drive இல் Right Click செய்து “Properties” செல்லுங்கள்.

அடுத்து வரும் விண்டோவில் Hardware Tab ஐ கிளிக் செய்யுங்கள். பின்னர் Name என்பதற்கு கீழ் உங்கள் Pen Drive இனை தெரிவு செய்யுங்கள். தெரிவு செய்ததும் கீழ் உள்ள Properties என்பதை கிளிக் செய்யுங்கள்

அடுத்து வரும் விண்டோவில் Change Setting என்பதை தெரிவு செய்யுங்கள்.

அடுத்து வரும் விண்டோவில் Policies என்னும் Tab ஐ கிளிக் செய்யுங்கள். அதன் பின்னர் வரும் விண்டோவில் “Better performance” என்னும் பட்டனை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவும் தான். இப்போது உங்கள் Pen Drive முன்னரை காட்டிலும் வேகமாக இயங்கும்.


www.sarfan.blogspot.com

குறிப்பு : Pen Drive கணினியில் இருந்து அகற்றும்போது “Safely remove hardware” என்பதை கொடுத்து அகற்றுங்கள்.

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை ! எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை !


இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.


படம் 1

இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும்.

இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும்,

முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும்,

Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும்

அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து

அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து

அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும்.

இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து

அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான்

அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்.

உங்கள் கணனியில் தொலைக்காட்சி பார்க்க

உங்கள் கணனியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்

இப்போதெல்லாம் கணினியிலே எல்லோருக்கும் காலம்

போய்க்கொண்டிருக்கிறது. முன்பு பொழுது போக்கு சாதனங்களாக

அமைந்த தொலைக்கட்சி , வானொலிகளை இப்போது நடுவது

குறைவாகிவிட்டது. இதற்கு காரணம் எல்லாமே கணினி அக்கிரமித்துகொண்டதுதான்.

அந்தவகையில் கணினியில் இருந்தவாறே


உலக நாடுகளில் இருந்து ஒலி, ஒளி பரப்பப்படும் 1000 க்கு மேற்பட்ட
தொலைக்காட்சி மற்றும் வானொலிகளை பார்த்து கேட்டு ரசிக்க
ஒரு இலவச மென்பொருள் READON TV MOVIE REDIO PLAYER.


இந்த மென்பொருளின் மூலம் உலக நாடுகளில் இருந்து ஒலி, ஒளி
பரப்பப்படும் 1000 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும்
வானொலிகளை பார்த்து கேட்டு ரசிக்க முடிவதுடன் அவற்றை
பதிவு செய்ய வசதியும் உண்டு. ஆடியோ க்களை MP3 வடிவில்
பதிவு செய்யலாம் .
FLASH GAMES , AUDIO , VIDEO பைல்களை சேர்ச் செய்யும்
வசதி உண்டு.
இந்த மென்பொருளில் இருந்தவாறு மிக அண்மையில் வெளியாகிய
திரைப்படங்களை வீடியோ சேர்ச் மூலம் பெறலாம்.
1000 க்கு மேற்பட்ட FLASH GAMES வசதியினை ஆன்லைனில்
தருகிறது.

இந்த வசதியினை பெற இந்த மென்பொருளில் PLUGINS என்ற
மெனுவிற்கு சென்று உங்களுக்கு விரும்பியதை இன்ஸ்டால்
செய்யல்லாம்.
youtube தளத்திற்கான இணைப்பும் உள்ளது.
இது விண்டோஸ் இயங்கு தளத்தில் செயல்பட வல்லது.

www.sarfan.blogspot.com

தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்க

http://www.softpedia.com/progDownload/Readon-Free-Internet-TV-and-Radio-Online-Download-107573.html